புயலா? வங்கக்கடலில் 2 நாட்களில் உருவாகிறது புதிய தாழ்வுப்பகுதி! தமிழ்நாட்டிற்கு பாதிப்பா? ரிப்போர்ட்
சென்னை: வங்கக்கடலில் ஆகஸ்ட் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலையில் இருந்து பல்வேறு தென் மாவட்டங்களிலும் சில வட மாவட்டங்களிலும் இன்று மழை பெய்தது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நேற்று நாள் முழுக்க ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலடுக்கு சுழற்சி
தற்போது வங்க கடலில் மேற்கு மத்திய பகுதியிலும், ஆந்திர கடல் பகுதிக்கு அருகிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் பாகிஸ்தான், குஜராத் இடையே அரபிக்கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது 3.5 கிலோ மீட்டர் உயரத்தில் கடல் மட்டத்தில் இருந்து காணப்படுகிறது. ராஜஸ்தான் அருகிலும் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.

பல மாநிலங்கள்
தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா என்று பல மாநிலங்களில் விடாமல் மழை பெய்வதற்கு இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதான் மழையின் தீவிரத்தை அதிகப்படுத்தி உள்ளது. ராஜஸ்தான், குஜராத் பகுதி, கடலோர & தெற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை தீவிரம் அடையும். மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் , சிக்கிம், ஒடிசா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் , திரிபுரா, குஜராத் பகுதி, மராத்வாடா, விதர்பா மற்றும் ராயலசீமா பகுதிகளில் வரும் வாரம் முழுக்க கனமழை பெய்யும், என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலா?
ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா அல்லது புயலாக மாறுமா என்று வானிலை ஆய்வு மையம் கூறவில்லை. தொடக்க காலம் என்பதால் 2-3 நாட்கள் கழித்துதான் இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்று கணிக்க முடியும். இந்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 60 கிமீ இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உள்மாவட்டங்களிலும் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications