"மிஸ்டர் பிஸி பிரதமரே.. மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.." என்னை முடித்து விட முடியாது.. மமதா ஆவேசம்
சென்னை: மிஸ்டர் பிஸி பிரதமர்.. மிஸ்டர் மன் கி பாத் பிரதமர்.. என்னை முடித்து விட நீங்கள் நினைத்தாலும் அது முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மமதா பானர்ஜி மற்றும் நரேந்திர மோடி இடையேயான மோதல் போக்கு, சமீப காலத்தில் உச்சத்திற்கு போயுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் அரசு தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயவை மத்திய அரசுப் பணிக்காக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தமது அரசுப் பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவரை தமது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

மோடி அரசு சொல்ல வருவது என்ன?
இந்த நிலையில்தான், மமதா பானர்ஜி அளித்த பேட்டியில், நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது: இது நாட்டுக்கு மோடி அரசு என்ன செய்தி சொல்ல விரும்புகிறது? கூட்டாச்சி தத்துவத்தை உடைத்தெறிகிறார்களா? எங்களது தலைமை செயலாளரை அவர்கள் இஷ்டத்துக்கு பணிமாற்றம் செய்ய முற்பட்டது ஏன்? அதிகாரிகள் அவர்கள் கொத்தடிமைகள் கிடையாது.

மம்தா பானர்ஜி ஆவேசம்
மாநில அரசுடன் கலந்து பேசாமல் ஐஏஎஸ் அதிகாரிகளை உங்கள் விருப்பத்திற்கு பணி மாற்றம் செய்ய முடியாது. மத்திய அரசு பணிகளில் மேற்கு வங்க மாநில கேடர் அதிகாரிகள் நிறைய பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களை எங்கள் மாநிலத்துக்கு நான் திருப்பி அழைக்கவா? இப்படி மோதிக்கொண்டு இருந்தால் நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும்.

மன் கி பாத் பிரைம் மினிஸ்டர்
"மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. மிஸ்டர் பிஸி பிரைம் மினிஸ்டர்.. மிஸ்டர் மன் கி பாத் பிரைம் மினிஸ்டர் உங்களுக்கு என்ன வேண்டும்? என்னை முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களால் முடியுமா? முடியாது. எப்போதும் முடியாது. மக்கள் ஆதரவு எனக்கு இருக்கும் வரை உங்களால் செய்ய முடியாது."

அனைவரும் இணைய அழைப்பு
அனைத்து மாநில அரசுகள் அனைத்து மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புத்திஜீவிகள் அனைத்து அரசியல்வாதிகள் அனைத்து ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். இந்த போராட்டத்தில் நாம் போராடி ஆகவேண்டும். இது எங்கள் மாநிலத்துக்கு மட்டுமேயான பிரச்சனை கிடையாது. அனைத்து அதிகாரிகளுக்குமான போராட்டம் இது. அதிகாரிகள் தற்போது அச்சத்தில் உள்ளனர்.

நீதிமன்றம் ஏற்காது
நான் ஒரு வழக்கறிஞர் என்ற வகையிலும் சொல்கிறேன் இதை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றால் அங்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு ஆவேசமாக கூறியுள்ளார் மமதா பானர்ஜி.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications