சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கலக்கல் ஸ்டாலின்.. தமிழகத்திலேயே முதல்முறை.. பவித்ரா, மோனிஷா, சுமதி என 7 போலீஸ்.. அதுவும் சபாரியில்

முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்பு பணியில் பெண்கள் நியமனம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலேயே முதன்முறையாக முதல்வர் பாதுகாப்புக்கு பெண் எஸ்ஐ தலைமையில் 7 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. ஒவ்வொரு துறையிலும் இந்த அதிரடிகள் நடப்பதை மக்கள் உன்னிப்பாக கவனித்தும், பாராட்டியும் வருகிறார்கள்.
அவ்வளவாக புகழ்பெறாத துறையாக விளங்கி கொண்டிருந்த இந்து சமய அறநிலைய துறையையே இன்று சென்னை ஹைகோர்ட் பாராட்டுகிறது என்றால், அந்த துறையில் திமுக அரசு வெறும் 8 மாதத்தில் மேற்கொண்டே செயல்பாடுகள்தான்.

 திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி- முதல்வர் அறிவிப்பு திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி- முதல்வர் அறிவிப்பு

போக்குவரத்து

போக்குவரத்து

அதுபோலவே, பாதுகாப்பு பணியிலும், சில மாறுபாடுகள் செய்யப்பட்டன.. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்க வேண்டாம் என்பதற்காக முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டன.. இதுவும் மக்களை ஈர்த்தது.. இப்போது அதே பணியில் முதன்முறையாக பெண் காவலர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.. அதாவது, தமிழக காவல் துறை சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு, 2 வகையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

 கருப்பு பூனைப்படை

கருப்பு பூனைப்படை

இந்த பாதுகாப்பு பிரவுக்கு "கோர்செல்" என்று பெயர்.. காவல் துறையில் சிறந்த காவலர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய வகையில் பயிற்சிகளை தந்து, அதற்கு பிறகு இந்த பணியில் நியமிப்பார்கள்.. அதனால்தான், இந்த பிரிவில் உள்ள காவலர்கள், மத்திய அரசின் கருப்பு பூனைப்படைக்கு நிகரானது என்றும் சொல்வார்கள்.

 முதல்வர் பாதுகாப்பு பணி

முதல்வர் பாதுகாப்பு பணி

எஸ்பி தலைமையில் இயங்கும் இந்த 'கோர்செல்' பிரிவில், ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 150 காவலர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் முதல்வர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதுதவிர 'செக்யூரிட்டி சென்னை போலீஸ்' பிரிவும் உள்ளது. இந்த பிரிவில் உள்ள காவலர்கள் முதல்வர் செல்லும் இடங்கள், நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் வெடிகுண்டு சோதனை, மோப்பநாய் சோதனை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

 சபாரி உடை

சபாரி உடை

கோர்செல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் சபாரி உடையுடன் முதல்வருக்கு பாதுகாப்பு அரண் போன்று பணிகளில் ஈடுபடுவார்கள்... முதல்வரை பார்க்க வேண்டும் என்றால்கூட 'கோர் செல்' பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளித்தால் மட்டும் பார்க்க முடியும். அவர்களை மீறி முதல்வரிடம் யாரும் நெருங்ககூட முடியாது... அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த இந்த பாதுகாப்பு பிரிவில், முதல்முறையாக திறனும் பயிற்சியும் பெற்ற பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 பெண் காவலர்கள்

பெண் காவலர்கள்

பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் 7 பெண் காவலர்கள் என மொத்தம் 8 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஆதம்பாக்கம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி தலைமையில் ஆயுதப்படையை சேர்ந்த காளீஸ்வரி, பவித்ரா, மோனிஷா, சுமதி, ராமி, வித்யா, கவுசல்யா ஆகிய 7 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட இவர்கள், தற்போது முதல்வர் பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களும், சபாரி உடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு என தனி கார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது..

English summary
What a special announcement: 7 member team of female guards form in the security division for cm mk stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X