பெரியாருக்கு பாரத ரத்னா.. விலைவாசிக்காக திமுக அரசுக்கு கண்டனம்.. அதிமுக பொதுக்குழு 16 தீர்மான விவரம்
சென்னை : அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கிய நிலையில், ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஒற்றை தலைமை ஆக இருக்கிறார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேட்டப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்..
Recommended Video
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விவாதம் முடிந்ததை தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு உத்தரவு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கு முன்னதாக இபிஎஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் தடை போட மறுத்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேட்டப்பட்ட 16 தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்துப் பார்க்கலாம்..

1) அதிமுக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்..
2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்..
3) அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
4) அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
5) அதிமுகவின் இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்..
6) அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது..
7) அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்..
8) மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல் பட்ட அதிமுக அரசின் வரலாற்று வெற்றிகளும்.
9) அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்...
10) விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்.
11) சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.
12) மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியிறுத்தல்.
13) இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
14) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்.
15) நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்.
16) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்." உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications