பம்பரத்துக்கு பதில்.. 2 சின்னத்தை குறிவைத்து தேர்தல் ஆணையத்திடம் கேட்ட மதிமுக! எதுவெல்லாம் தெரியுமா?
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் வைகோவின் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தான் பம்பரத்துக்கு பதில் வேறு 2 சின்னங்களை குறிவைத்து மதிமுக இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் லோக்சபா தேர்தலில் வைகோவின் மதிமுக கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட உள்ளது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி லோக்சபா தொகுதியில் மதிமுக வேட்பாளராக வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக கோரிக்கை வைத்தது. ஆனால் வைகோ அதனை ஏற்க மறுத்துவிட்டார். அதோடு வரும் லோக்சபா தேர்தலில் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அவர் கூறினார். அதேபோல்
மேலும், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய துரை வைகோவும், "செத்தாலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்" என்று கண்ணீர் மல்க பேசினார்.
இதற்ககிடையே தான் தேர்தல் ஆணையத்தில் மதிமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாமல் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் கேட்கப்பட்டது. மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில் வரும் லோக்சபா தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சின்னம் தொடர்பாக முடிவினை தெரிவிக்க இன்று காலை வரை தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஒரு தொகுதியில் மட்டுமே மதிமுக போட்டியிடுவதால் பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாதற்கான காரணமாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலையில் மதிமுக உள்ளது.
‛‛பானை சின்னம் கிடையாது’’.. உறுதியாக கூறிய தேர்தல் ஆணையம்.. திருமாவின் விடுதலை சிறுத்தைகள் ஷாக்
இந்நிலையில் தான் பம்பரம் சின்னத்துக்கு பதில் தீப்பெட்டி அல்லது கியாஸ் சிலிண்டர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மதிமுக கேட்டுள்ளது. இதில் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் வரும் லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ புதிய சின்னத்தில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications