சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் லிஸ்ட் இதுதான்.. ஆறிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 6 தொகுதிகள் இன்று வெளியாகின. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

இதில் வைகோ தலைமையிலான மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் தொகுதிகள்

இதுதான் தொகுதிகள்

இந்த நிலையில் இன்று அவை எந்தெந்த தொகுதிகள் என்பதற்கான பட்டியல் வெளியானது. இதன்படி, பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் , சாத்தூர், அரியலூர், மதுராந்தகம் ஆகிய ஆறு தொகுதிகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வைகோ செல்வாக்கு

வைகோ செல்வாக்கு

இதில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தொகுதியில் வைகோவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. மற்ற தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் இந்த கட்சிக்கு வரவேண்டிய வாக்குகளில் முக்கிய பங்காற்றும் என்பது திமுக தலைமை எண்ணமாக இருக்கிறது.

செல்வாக்கு தொகுதிகள்

செல்வாக்கு தொகுதிகள்

விளாத்திகுளம் உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய மதிமுக செல்வாக்குள்ள தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்காது எனத் தெரிகிறது. ஏனெனில் வைகோ கட்சி இந்த முறை பம்பரம் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை.

திமுக திட்டம்

திமுக திட்டம்

மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மதிமுக பலமான தொகுதிகளில் திமுகவே நேரடியாக போட்டியிட்டு தனது அடிப்படையை வலுவாக்கிக் கொள்ள விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
DMK will allocate 6 constituencies name to mdmk on today says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X