பாமகவுக்கு "அருள்" வந்துட்டே! மோடியை பார்த்துவிட்டு.. அன்புமணி எடுத்த "அந்த" முடிவு! தகதக தைலாபுரம்
சென்னை: பிரதமர் மோடியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்த நிலையில், கட்சிக்குள் முக்கியமான சில மாற்றங்களை செய்ய போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாமகவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில்.. கட்சியிலும் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன என்று தைலாபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 28ம் தேதி பாமக சிறப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஜிகே மணி தலைவராக இருந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அந்த இடத்தை பிடித்தார்.

அன்புமணி நன்றி
இதையடுத்து தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்களை, அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். முதலில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார். அதன்பின் அதிமுக தலைவர்கள் பலரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார். பின்னர் ஆளுநர் ஆர். என் ரவியையும் மரியாதை நிமித்தமாக அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார்.

சந்திப்பு
இந்த சந்திப்பில் முத்தாய்ப்பாக பிரதமர் மோடியை டெல்லிக்கு சென்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றது. இதில் அன்புமணியிடம் பிரதமர் மோடி மிகவும் அன்பாக பேசி இருக்கிறார். கட்சியை நல்ல வழி நடத்துங்க. இளம் தலைவர் நீங்க.. கட்சியை உயரத்துக்கு கொண்டு போக வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.

விசாரணை
அதோடு அப்பா எப்படி இருக்காங்க என்று ராமதாஸ் குறித்தும் திடீரென மோடி விசாரித்து இருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த நலம் விசாரிப்பு, அன்பான அறிவுரைகளை கேட்டு அன்புமணி வியந்து போய் இருக்கிறாராம். இந்த நிலையில்தான் அன்புமணி தற்போது பாமகவில் முக்கியமான சில அதிரடி மாற்றங்களை செய்ய இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட ரீதியாக தற்போது பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் நிர்வாகிகளை மாற்றி வருகின்றன.

பாமக
2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாக ஒரு கட்சிக்கு புதிய தலைவர் தேர்வாகும் போது நிர்வாகிகள் மாற்றப்படுவது வழக்கம். அதன்படியே அன்புமணி ராமதாஸ் மாநிலம் முழுக்க நிர்வாகிகளை மாற்ற இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தனக்கு நெருக்கமாக இருக்கும் நிர்வாகிகளை நியமனம் செய்ய இருக்கிறாராம். அதோடு தனது பேச்சை கேட்கும் வகையில் இளம் ரத்தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறாராம்.

சீனியர்கள்
ஒரு சில சீனியர்கள் இதனால் ஓரம் கட்டப்பட வாய்ப்பு உள்ளது என்றும் அன்புமணிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். அதனபடிதான் தான் வகித்து வந்த பாமக இளைஞரணித் தலைவர் பொறுப்பை முக்கியமான நிர்வாகி ஒருவருக்கு அளிக்க அன்புமணி முடிவு செய்துள்ளதாக தைலாபுர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இர.அருள் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்.. சீனியர் என்றாலும் அன்புமணி, ராமதாஸ் இருவருக்கும் நெருக்கமானவர். இருவரின் குட்புக்கிலும் இருப்பவர். இவரை பெரும்பாலும் அந்த பொறுப்பிற்கு அன்புமணி கொண்டு வருவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications