சிஎம் ஆரம்பித்த உடனே கிளம்பிய ஆளுநர்.. ஜெர்க்கான எடப்பாடி.. சீறிய வானதி.. ஒரே நாளில் அதிர்ந்த சட்டசபை!
சென்னை: தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை நடக்காத அளவுக்கு சில விஷயங்கள் நடந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று காலை முதல் முதல்வர் தீர்மானம் வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று காலை பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கூடியது. இன்றைய தினம் ஆளுநர் உரையாற்றினார். ஏற்கெனவே தமிழகம், தமிழ்நாடு என்ற விஷயத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்ததால் அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதனால் ஆளுநர் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கும் என கருதப்பட்டது. காலை 10 மணிக்கு ஆளுநர் வருகை தந்தார். அவர் தனது உரையை தொடங்கினார். தமிழிலேயே தனது உரையை தொடங்கிய நிலையில் அவரை பேச விடாமல் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை கடும் அமளியில் ஈடுபட்டன.

தமிழ்நாடு
ஆளுநர் பேச பேச எங்கள் நாடு தமிழ்நாடு என கோஷமிட்டனர். இதையடுத்து ஆளுநருக்கு இருமல் வரும் அளவுக்கு மைக்கில் உரக்க தனது உரையை வாசித்து வந்தார். இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து ஆளுநர் தனது உரையில் ஆரம்பத்தில் தமிழ்நாடு என கூறினாலும் அடுத்தடுத்து தமிழ்நாடு அரசு என அந்த உரையில் இருந்ததை this government என்றே அழைத்தார்.

திராவிட மாடல்
அது போல் திராவிட மாடல் என அந்த உரையில் இரு இடங்களில் இருந்த போதிலும் அதை வாசிக்காமல் தவிர்த்தார். பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர் அடங்கிய பத்தியையும் மதநல்லிணக்கம், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை, பல்லுயிர் ஓம்புதல் உள்ளிட்ட வார்த்தைகள் அடங்கிய பத்தியையும் தவிர்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமைதி பூங்கா
இதையடுத்து தமிழகம் அமைதி பூங்கா என்ற வார்த்தையையும் அவர் தவிர்த்துவிட்டார். இதையடுத்து ஆளுநர் தனது உரையை படித்துவிட்டு அமர்ந்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையில் உள்ளனவற்றை தமிழில் வாசித்தார். சபாநாயகர் வாசித்து முடித்தவுடன் முதல்வர் ஸ்டாலின் எழுந்து, "அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை.

வருத்தம்
ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது. கொள்கைக்கு மாறாக அவர் செயல்பட்டுள்ளார். சட்டசபை விதிகளின்படி அரசு தயாரித்து கொடுத்ததை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். அது விதி மீறல் . ஆளுநரின் இந்த செயல் வருத்தம் தருவதால் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார்.

தமிழ்நாடு தமிழ்நாடு
அப்போது ஆளுநர் வேகமாக அவையை விட்டு வெளியேறினார், அவர் வெளியேறிய போது தமிழ்நாடு தமிழ்நாடு என திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர். தான் பேசி கொண்டிருக்கும் போதே ஆளுநர் வெளியேறியதை பார்த்து முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவுவை பார்த்து சிரித்தார். இதையடுத்து ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகள் அவைக் குறிப்பில் இடம் பெறாது, அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் இடம் பெறும் என அறிவித்தார் முதல்வர்.

தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை எப்படி தொடங்கியதோ அது போல் தேசிய கீதத்துடன் முடியும். அதன்பின்னர் சட்டசபை மரபுகளின்படி ஆளுநரை சபாநாயகரும் சட்டசபை செயலாளரும் வழி அனுப்பி வைப்பார்கள். ஆனால் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே அவர் வெளியேறிவிட்டார் என்ற குற்றச்சாட்டையும் திமுகவும் கூட்டணி கட்சியினரும் முன்வைத்தனர். ஆளுநர் இருக்கும் போது முதல்வர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள், அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர்
அப்போது வானதி சீனிவாசன் கூறுகையில், ஆளுநர் பேசும் போது கூச்சலிட்டது தவறு. கூட்டணி கட்சிகளை பேசவிட்டுவிட்டு முதல்வர் வேடிக்கை பார்த்துள்ளார். அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் திமுகவின் சித்தாந்தத்தை இதில் திணிப்பதை எல்லாம் அவர் படிக்க வேண்டும் என எப்படி சொல்லலாம். திமுக அரசு நினைப்பதையே ஆளுநர் படிக்க வேண்டும் என சொல்கிறார்களா. இவர்கள் முன்கூட்டியே உரையை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் அவசர அவசரமாக பிரிண்ட் செய்து , அதைதான் ஆளுநர் படிக்க வேண்டும் என சொல்வதா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஆளுநர் உரையை கேட்க வந்தோம். முதல்வர் உரையை கேட்க வரவில்லை. ஆளுநர் இருக்கும் போது முதல்வர் பேசியதுதான் வரம்பு மீறல் என்றார். இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது அநாகரீகமான செயல், ஆளுநரை உரைக்கு கடந்த 7ஆம் தேதியே அவர் ஒப்புதல் அளித்துவிட்டார். இதன் பிறகுதான் நாங்கள் அச்சடிக்க கொடுத்தோம் என்றார்.

சபாநாயகர்
சபாநாயகர் அப்பாவு பேசுகையில் ஆளுநரின் செயல்பாடுகள் வேதனையளிக்கும் வகையில் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் பெயரைக்கூட ஆளுநர் உச்சரிக்காதது வேதனையாக உள்ளது. உயர் பதவி கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஆளுநர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக எனக்கு சந்தேகமாக உள்ளது. எனக்கு வானாளவிய அதிகாரம் இருப்பதாக நான் கூறவில்லை. அரசு தயாரித்த உரையை புறக்கணித்து விட்டு தானாக பேசுவது அநாகரீகம். வேறு உயர்பதவிக்காக இதுபோல ஆளுநர் செயல்படுகிறாரோ என சந்தேகமாக உள்ளது. ஆளுநரின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications