இனி "இவர்களுக்கு" மட்டுமே லோயர் பெர்த்! ரயில்வே விதிகளில் முக்கிய மாற்றம்! டிக்கெட் போடும்போது கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் ரயில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தப் பயணத்தை மேம்படுத்த ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே முதியவர்களும் பெண்களும் சிரமமில்லாமல் பயணிக்க ஏதுவாக அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சில முக்கிய மாற்றங்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

நமது நாட்டில் ரயில்கள் தான் எப்போதும் நீண்ட தூரப் பயணங்களுக்கு முதல் சாய்ஸ்ஸாக இருக்கிறது. டாய்லெட் வசதி, படுத்துத் தூங்கப் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் பெரும்பாலான பயணிகள் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்களில் பயணிக்கவே விரும்புகிறார்கள். இந்திய ரயில்வேயிலும் சமீப காலங்களில் பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Indian railway train
Photo Credit:

லோயர் பெர்த்

இருப்பினும், ரயில் பயணங்களில் முதியவர்களும் பெண்களும் லோயர் பெர்த் கிடைக்காமல் அடிக்கடி சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேல் பெர்த் கிடைத்தால் ஒவ்வொரு முறையும் சக பயணிகளிடம் சென்று லோயர் பெர்த் தரும்படி கோரிக்கை வைக்கும் சூழலே இருக்கிறது. இதற்கிடையே லோயர் பெர்த் புக்கிங் செயல்முறையை எளிதாக்கும் வகையில், இந்திய ரயில்வே தனது முன்பதிவு விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

இந்த புதிய விதிகளின்படி முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு லோயர் பெர்த் கிடைப்பதில் முன்னுரிமை வழங்கப்படும். முதியவர்கள் என்றால் 60 வயதைக் கடந்த ஆண்களுக்கு லோயர் பெர்த்திற்கு முன்னுரிமை தரப்படும். அதேபோல 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் லோயர் பெர்த்தை தானாகவே ஒதுக்கும் வகையில் ரிசர்வேஷன் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

டிடிஆருக்கு அதிகாரம்

அதேநேரம் எப்போது புக் செய்தாலும் லோயர் பெர்த் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. அதாவது அடுத்த வாரம் நீங்கள் பயணத்திற்கு நீங்கள் இந்த வாரம் டிக்கெட் புக் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது லோயர் பெர்த் இல்லை என்றால் வேறு பெர்த் தான் ஒதுக்கப்படுமாம்.. இதுபோன்ற சூழல்களில் மிடில் அல்லது அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டவர்களுக்குக் காலியாக உள்ள கீழ் படுக்கைகளை ஒதுக்கும் அதிகாரம் டிடிஆர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

எப்போது தூங்கலாம்

அதேபோல லோயர் பெர்த் அல்லது மிடில் பெர்த் கிடைத்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம் என்று இல்லை. அதற்கும் சில கடுமையான டைமிங் உள்ளன. அதாவது இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை மட்டுமே தூங்கும் வசதி பயணிகளுக்குக் கிடைக்கும். மற்ற நேரங்களில் இருக்கை வசதி மட்டுமே வழங்கப்படும்.

இது முக்கியம்

RAC சீட்களை பொறுத்தவரை சைட் அப்பர் பெர்த் கிடைத்தவர்கள் கீழே இருக்கும் இருக்கையை மற்றும் RAC பயணிகளுடன் பகல் நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேநேரம் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை சைட் அப்பர் பெர்த்தில் உள்ள பயணிகள், கீழே இருக்கும் படுக்கை மீது உரிமை கோர முடியாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணங்களில் லோயர் பெர்த் கிடைப்பதில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்குச் சிரமங்கள் இருந்து வந்த நிலையில், அதைச் சரி செய்யும் விதமாகவே விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், தூங்கும் வசதியை எப்போது பயன்படுத்தலாம் என்பதிலும் இருந்த குழப்பத்தை இது நீக்குவதாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+