"அவரே" போனில் கூப்பிட்டு.. புது தெம்பில் பாஜக.. திமுகவை டேமேஜ் செய்ய அடுத்த அஸ்திரம்.. பரபர களம்
தமிழக பாஜக எம்பி தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறது
சென்னை: நடந்து முடிந்த தேர்தல் தந்த தெம்பினால், அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது தமிழக பாஜக.. அக்கட்சியின் ஒவ்வொரு நகர்வும் திமுகவை மையப்படுத்தியே நகர போகின்றன என்பதும் தெரியவந்துள்ளது..!
எதிர்பார்த்த வெற்றிகிடைக்காவிட்டாலும், மோசமான தோல்வி இல்லாவிட்டாலும், ஓரளவு சொல்லி கொள்ளும்படியான இடங்களை ஆங்காங்கே தக்க வைத்துள்ளது தமிழக பாஜக.
தனித்து போட்டியிட்டதால்தான் வெற்றி என்று பாஜகவும், கூட்டணி இல்லாததால்தான் தோல்வி என்று அதிமுகவும் ஆளுக்கு ஒரு பக்கம் காரணம் சொல்லி கொண்டிருந்தாலும், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது பாஜக மேலிடம்.

தனித்து போட்டி
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே, அக்கட்சிக் மாற்று நாங்கள்தான் என்பதை மறுக்காமல் சொல்லி வருகிறார் மாநில தலைவர் அண்ணாமலை.. ஒரு வலுவான கட்சிக்கு நிகராக, தங்களது பாஜகவை நிறுத்தி கொள்ளும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. தேசிய கட்சிகள் இதற்கு தயாராகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தமிழக பாஜகவும் சில வியூகங்களை இப்போதே கையில் எடுத்துள்ளன.

பிரமுகர்கள் - பிரபலங்கள்
அதன்படி, படித்தவர்கள், இளைஞர்கள், பிரபலங்கள், விஐபிக்கள் போன்றோரை கட்சிக்குள் இணைத்து, கட்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் முதல்கட்டமாக இறங்கி உள்ளது.. மாநில தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றபோது, இந்த காரியத்தைதான் முதலில் செய்தார்.. அதன் பலனாக குஷ்பு முதல் விபி துரைசாமி வரை எண்ணற்றோரை மாற்று கட்சிகளில் இருந்தும் கொண்டு வந்தார்.. அண்ணாமலை பொறுப்பேற்றபோது, உறுப்பினர் சேர்க்கையைவிட, கட்சியை பிரபலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.. இப்போது, மீண்டும் பல புதுமுகங்களை இணைத்து, பலப்படுத்த தமிழக பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

டேமேஜ்
அடுத்ததாக, திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியில் இறங்க போவதாக தெரிகிறது.. இந்த முறை திமுக மீதான பொய் வாக்குறுதிகள் குறித்த பிரச்சாரங்கள் ஓரளவு எடுபடவும், அதே பாணியில் சென்று, திமுகவின் பொய் பிரசாரங்களை முறியடிக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.. ஆனால், எத்தனை திட்டங்களை தீட்டினாலும், திமுக அவைகளை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறது என்பது வேறுவிஷயம்.. அதேபோல, மத்தியஅரசின் பல்வேறு திட்டங்களால் தமிழகத்திற்குஒதுக்கப்பட்ட நிதி, அவற்றினால் அடைந்த பயனாளிகளின் விபரங்களை மக்களிடம் சேர்ப்பதே இதன் முதல்பணியாக இருக்கும் என்கிறார்கள்..

சோஷியல் மீடியா
முக்கியமாக, சமூக ஊடகங்கள் வாயிலாக, அனைத்து தரப்பு மக்களிடமும் மத்திய அரசின் திட்டங்களையும் சேர்க்கும் பணியை, தமிழக பாஜக தீவிரப்படுத்தி உள்ளது.. பாஜகவை சோஷியல் மீடியாவில் பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் வகையில், அவர்களுக்கு பதிலடி தரும் வகையிலும் இந்த சோஷியல் மீடியா பணிகள் இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மத்திய அரசின் திட்டங்களில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள், நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டுள்ளனவாம்..

பாஜக ரிப்போர்ட்
அவற்றையும் தமிழில் மொழி பெயர்த்து, சோஷியல் மீடியா மூலமாக மக்களிடம் சேர்க்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.. கடந்த வாரம் பிரதமர் மோடி, தேர்தல் ரிசல்ட் அன்று அண்ணாமலைக்கு போனை போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும், அப்போது, சில அறிவுறுத்தல்களை கூறியதாகவும் செய்திகள் கசிந்தன.. இதுபோக, திமுக அரசு மீது எழும் குற்றச்சாட்டுகள், புகார்கள், போன்றவைகள் குறித்தும் அவ்வப்போது ரிப்போர்ட் தயார் செய்து மேலிடத்துக்கு அனுப்பும் பணிகளும் இனி ஆரம்பமாகலாம் என்கிறார்கள்..

பிரதமர் மோடி
அதாவது, "கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையில் கிடைத்த வெற்றி எதிர்பார்த்தது என்றாலும், சென்னை மாநகராட்சியில், ஒரே ஒரு வார்டில் பாஜக வெற்றி பெற்றது ஆச்சரியம் அளிக்கிறது.. எப்போதுமே தனித்து போட்டியிட்டால் தான், ஒவ்வொரு கட்சியின் முழுமையான பலம் தெரியும்... அப்போதுதான், அடுத்தடுத்த தேர்தல்களில் நம்மை பலப்படுத்தி கொள்ள, தேர்தல் வியூகங்களை அமைத்து கொள்ள முடியும்.. அடுத்த தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டாம்.. இப்போதுள்ள நிலைமையே தொடருங்கள்.. ஆனால் எம்பி தேர்தலில் கவனம் செலுத்துங்கள்" என்றும் அறிவுறுத்திய நிலையில், இதுவும் பாஜகவுக்கு புது தெம்பூட்டி வருகிறது. ஆக மொத்தம், பாஜகவுக்கான அடுத்த இன்னிங்ஸ் இனிதே ஆரம்பமாகி உள்ளது..!
-
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி












Click it and Unblock the Notifications