குமுறி குமுறி கொட்டிய "பிரபலம்"..அமைதியாக பார்த்த எடப்பாடி பழனிசாமி.. "பிரிச்சிடாதீங்க".. இது எப்போ?
சென்னை: பாஜகவை மீண்டும் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள அதிமுகவில் வாய்ப்பே இல்லை போல தெரிகிறது.. இதுகுறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, இதுவரை அதிமுகவுடன் சமசரம் என்ற பேச்சை எடுக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியையும் சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கவில்லை.. ஆனால், மேலிட பாஜகவை, அதிமுக தரப்பு இதுவரை பகைத்து கொள்ளாமல் இருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.

மற்றொருபுறம், முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கூட்டணியை வலுப்படுத்துவது போன்ற அஜெண்டாவையும், தமிழக பாஜக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, அமமுக, ஓபிஎஸ், சசிகலா 3 பேருமே பாஜகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், பாமக, தேமுதிகவை கண்டிப்பாக கூட்டணியில் பாஜக இணைத்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்..
பாஜக கூட்டணி: தமாகா வாசன், ஜான்பாண்டியன், ஏசி சண்முகம், பாரிவேந்தர், டாக்டர் கிருஷ்ணசாமி, போன்றோரெல்லாம் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாம். எனினும், மேலிட பாஜகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்தன.
ஆக, அமமுக + ஓபிஎஸ் + சசிகலா + தமாகா + பாரிவேந்தர் + ஜான்பாண்டியன் + பாமக + தேமுதிக + டாக்டர் கிருஷ்ணசாமி, இவைகளுடன் பாஜக கூட்டணி அமைத்தால், எடப்பாடி பழனிசாமி யாருடன் கூட்டணி வைக்க போகிறார்? எப்படி எதிர்கொள்வார் என்ற சந்தேகமும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
வாசன் ஆதங்கம்: இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடி பழனிசாமியும், தமாகா தலைவர் ஜிகே வாசனும் கோவை விமான நிலையத்தில், எதிர்பாராமல் சந்தித்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இவர்கள் பேசியதாக தெரிகிறது.
இதில் பெருமளவு ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தது வாசன் தானாம்.. கூட்டணி பிரிவு நமக்கு நல்லதல்ல, திமுக எதிர்ப்பு அணிகள் நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்... அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் இப்படி எல்லாருமே ஒரே அணியாக நின்றால் எளிதில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றிதான், வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்றெல்லாம் வாசன் சொன்னாராம்.
எடப்பாடி பழனிசாமி: ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பெரிய அளவில் எந்த ரியாக்ஷனும் காட்டப்படவில்லையாம்.. அந்த அளவுக்கு அண்ணாமலையின் விமர்சனமும், மேலிடத்தின் பாராமுகமும் அதிமுகவுக்கு மனவருத்தத்தையும் அதிருப்தியையும் தந்ததாக, எடப்பாடியின் பேச்சுக்கள் இருந்ததாம். "உடைந்தது உடைந்ததுதான்... இனி ஒட்டுவதற்கான வாய்ப்பில்லை.. கதம் கதம் கதம்" என்று மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முற்றுப்புள்ளி வைத்ததாக தகவல்கள் கிடைக்கின்றன.
"உடைந்தது உடைந்ததுதான்... இனி ஒட்டுவதற்கான வாய்ப்பில்லை.. கதம் கதம் கதம்" என்று மீண்டும் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி தரப்பில் முற்றுப்புள்ளி வைத்ததாக தகவல்கள் கிடைக்கின்றன.
ஆனால், அதிமுக 3 ஆக உடைந்துள்ளதும், பாஜகவை கழட்டிவிட்டுள்ளதும், திமுகவுக்கே சாதகம் என்பதை, வாசனை தவிர, மேலும் சில தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்து சொல்லி வருகிறார்களாம். எனவே, நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக பாஜகவை ஆதரிக்கும் முடிவை, அதிமுக எடுக்கக்கூடும் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!












Click it and Unblock the Notifications