சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதரிக்க வேண்டியது உங்க கடமை ரஜினி.. கிடுக்கிப் பிடி போட்ட கமல்.. என்ன சொல்வார் சூப்பர் ஸ்டார்?

Google Oneindia Tamil News

சென்னை: என்னை ஆதரிக்க வேண்டியது உங்கள் கடமை என ரஜினிகாந்திடம் நேற்றைய சந்திப்பில் கமல்ஹாசன் கறாராக சொல்லிவிட்டு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபை தேர்தலில் கமலை போல ரஜினியும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நிலை பாதிப்பால் ரஜினி அரசியல் கட்சியை தொடங்கவில்லை என கூறிவிட்டார். இதனால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் நிம்மதி பெரூமூச்சுவிட்டன.

எனினும் கமல்ஹாசன், ரஜினி அவருடைய உடல்நிலையை பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். அதே சமயம் தமிழகத்தில் லஞ்ச லாவண்யமற்ற ஆட்சி நடக்க அவரிடம் நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன் என சொல்லியிருந்தார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

இதனிடையே கமல்ஹாசன் நேற்றைய தினம் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது இன்றைய தினம் மக்கள் நீதி மய்யம் தொடங்கி 4ஆவது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும் அவரது உடல்நிலை குறித்து கமல் கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ரஜினியிடம் கமல் என்ன பேசினார்?

ரஜினியிடம் கமல் என்ன பேசினார்?

ஆனால் 45 நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். கட்சி நிர்வாகிகள் யாரையும் கமல் அழைத்து செல்லாமல் ரகசியமாக சந்தித்துவிட்டு வந்ததால் நிச்சயம் ரஜினியிடம் கமல் ஆதரவு கேட்டிருப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் ரஜினியிடம் கமல் என்ன பேசினார் என்பது குறித்து உறுதி செய்யப்படாத சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாற்றம் இப்ப இல்லாட்டி எப்போ

மாற்றம் இப்ப இல்லாட்டி எப்போ

அதில் "மாற்றம் இப்போது இல்லன்னா எப்பவும் இல்லை என்றீர்கள். நீங்கள் செய்ய நினைத்ததை நான் செய்ய விரும்புகிறேன். அதற்காக எனக்கு உருதுணையாக நிற்பது உங்கள் கடமை, நீங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து மக்களிடம் சொல்ல வேண்டும் என நான் சொல்லவில்லை, ஆனால் எனக்கு ஆதரவாக ஒரு முறை குரல் கொடுத்தால் போதும் என ரஜினியிடம் கமல் பேசியதாக தெரிகிறது.

ஆச்சரியம் இல்லை

ஆச்சரியம் இல்லை

கமல் சொன்ன மாதிரி ரஜினியிடம் கேட்டிருப்பார், ஆனால் இதற்கு ரஜினி ஆதரவு தருவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ரஜினியும் கமலும் ஒன்றாகவே பயணித்தவர்கள், ஒரே இடத்தில் "வளர்ந்தவர்கள்". ரஜினி நினைத்ததைதான் கமல் செய்ய வருகிறார். எனவே ரஜினி ஆதரவு குரல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தெரிகிறது.

ரஜினியின் ஆதரவு

ரஜினியின் ஆதரவு

என்னதான் சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என மக்கள் மன்றம் சார்பாக அறிக்கை வெளியானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ரஜினியின் மனம் மாறும் என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கூட தேர்தல் நெருங்கும் நேரத்திலும் கூட ரஜினி கமலுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க வாய்ப்புள்ளதாகவே சொல்லப்படுகிறது.

ஆதரவு

ஆதரவு

நிச்சயம் கமல்ஹாசன் சும்மா போய் ஆதரவு தாருங்கள் என கேட்காமல் அவர் செய்யவுள்ள திட்டங்களை ரஜினியிடம் எடுத்துரைத்திருக்கலாம். அதில் இம்ப்ரஸ் ஆன ரஜினிக்கு லேசான மனம் மாற்றம் ஏற்பட்டு நாளடைவில் ஆதரவு குரலாக மாறலாம் என்கிறார்கள். தமிழக மக்களுக்கு நல்லதை தான் செய்தால் என்ன? கமல் செய்தால் என்ன? என்ற மனநிலை அவருக்கு நிச்சயம் ஏற்படும் என்கிறார்கள்.

English summary
What did Rajinikanth and Kamal haasan discuss yesterday? Kamal asked Rajini to support him?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X