MISA: மிசா! ஒரே பானையில் 10 கைதிகளும் சிறுநீர் கழிக்கணும்! துர்நாற்றம் வீசும்! ஸ்டாலின் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது தனக்கு நடந்த கொடுமைகளை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் உருக்கமாக விவரித்துள்ளார்.

வீடியோவில் ஸ்டாலின் கூறியதாவது: என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம்.. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சில சர்ச்சைகள், தமிழ் மக்களு்கும் நம் உடன்பிறந்தவர்களுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் உண்டாக்கியிருப்பதை நான் உணர்கிறேன்.

mk stalin joseph vijay

அதுவும் இந்த சர்ச்சையில் என்னுடைய சிறை வரலாறும் இருக்கிறதால், அதை பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தம்பி விஜய் நீங்க சொல்றது உண்மை தான். பொய் எல்லாம் அல்ல.. எமெர்ஜென்சில் காலத்தில் அதை எதிர்த்து கருணாநிதி மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசு 30.01.1976 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை கலைத்தார்கள்.

ஆட்சியை கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னை கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டிற்கு போலீஸார் சென்றனர். அன்னைக்கு நான் வீட்டில் இல்லை. "பையன் பிரசாரத்திற்கு போய் இருக்கான். நாளை வந்துவிடுவான். வந்ததும் நானே போன் பண்ட்ரேன்.. வந்து அரெஸ்ட் பண்ணிக்கோங்க" என கருணாநிதி போலீஸிடம் சொன்னார். அடுத்த நாள் போலீசிடம் என்ன கைது செய்ய சொல்லிவிட்டார்.

சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்துச்சு.. என்னை கொண்டு போய் அடைத்ததே தொழு நோயாளிகள் இருக்கும் இடத்தில் தான். 10 பேரை ஒரு சின்ன அறைக்குள் அடைத்து வைத்தார். அந்த அறைக்குள் ஒரு பானை தான் இருக்கும். அதில் தான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும்.

ரொம்ப துர்நாற்றமாக இருக்கும். இந்த அறையில்தான் நாங்கள் தூங்க வேண்டும். நைட்டில் தூங்க விடாமல் போலீஸ் லத்தியால் அடிப்பாங்க.. பூட்ஸ் காலால் மிதிப்பாங்க.. இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதியை வைத்து கொடூரமாக அடிப்பாங்க.

அவங்க அடித்ததில் என் அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு ஜெயிலிலேயே இறந்து போனார். அவங்க அடிச்சதில் என்னுடைய தாடை எலும்பு உடைந்தது. நீங்கள் கூட இப்படி கை வைத்து தாடையை காண்பித்தீர்கள் அல்லவா? அது சரிதான். நான் அடி வாங்கிய தழும்புகள் இன்றைக்கும் எனக்கு இருக்கிறது. நான் இல்லை என சொல்லவில்லை.

யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்ற முடியாது. அது காலத்திற்கும் அப்படியேதான் இருக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்காக போராடும் நிறைய பேருக்கு இந்த மாதிரி அடக்குமுறை நடந்துள்ளது. போராளிகள் எல்லாம் இதை தாண்டிதான் வந்துள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் போலீஸ், தீயணைப்புத் துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த திங்கள்கிழமை நடந்தது. அப்போது விஜய் ஒரு மணி நேரமாக ஆவேசமாக பேசியிருந்தார்.

மிசா குறித்து பேசும் போது சிறையில் ஸ்டாலினை போலீஸ் அடித்ததில் தாடை உடைந்தது குறித்து செய்கை காட்டினார். இது திமுகவினருக்கு மட்டுமல்ல, தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி கட்சியினருக்கே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

முன்னாள் முதல்வர் ஸ்டாலினை உருவகேலி செய்வதா என்றும் விஜய்யால் அரை மணி நேரம் சிறை கொடுமைகளை தாங்க முடியுமா என்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில் தான் யாரையும் உருவகேலி செய்யவில்லை என முதல்வர் விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+