அப்பாவுக்கு திடீரென படபடப்பு வந்தது! தேவாவுக்கு இன்று காலை என்ன நடந்தது? ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனிசைத் தென்றல் தேவாவுக்கு இன்று காலை திடீரென படபடப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை அருகில் உள்ள வடபழனி சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை என மகன் ஸ்ரீகாந்த் தேவா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: அப்பாவுக்கு காலை படபடப்பு இருப்பதாக சொன்னார். ஆம்புலன்ஸுக்கு காத்திருந்தால் தாமதமாகிவிடும் என்பதால் உடனே அவரை தூக்கிக் கொண்டு காரில் அருகில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

deva chennai

இறுதி சடங்கு

அங்கு சிபிஆர் செய்த போதே அப்பாவுக்கு இதய துடிப்பு வரவில்லை என தெரிவித்தனர். எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லை, அப்பா மறைந்துவிட்டார். அவருடைய இறுதி சடங்குகள் நாளை நடைபெறுகின்றன. ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் கிராமத்திற்கு நாளை மதியம் 12 மணிக்கு அவருடைய உடலை கொண்டு சென்று அங்கு அடக்கம் செய்கிறோம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் அஞ்சலி

தேவாவின் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது அவரை பார்த்த ஸ்ரீகாந்த் தேவா, கதறி அழுதார். இதையடுத்து அவரை கட்டி அணைத்து விஜய் ஆறுதல் தெரிவித்தார். மேலும் விஜய் தனது முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தேவா மகள்களின் கைகளை பிடித்துக் கொண்டு ஆறுதல் தெரிவித்தார். தேவாவின் உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

மருத்துவர்கள் சொன்னது என்ன?

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியதாவது: தேவாவுக்கு காலை 9.30 மணிக்கு நெஞ்சு வலியும், படபடப்பும் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு காரில் அழைத்து வந்தனர். வீட்டிலேயே சிபிஆர் கொடுத்தும் பார்த்துள்ளனர். அவரை காப்பாற்ற நாங்கள் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனாலும் முடியவில்லை. அவருக்கு ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டன்ட் வைக்கப்பட்டுள்ளது. அவரை ஆம்புலன்ஸில் சிபிஆர் வைத்தபடியே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமாவோ என்னவோ தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவாவின் கடைசி ஆசை

தேவாவின் கடைசி ஆசை, நிறைவேறாமலேயே போய்விட்டதாம். ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் பாட்ஷா படத்தை விட சிறப்பாக செய்து தருவதே எனது ஆசை என கூறியிருந்தாராம். ஆனால் அது நடக்கவே இல்லை.

தேவாவின் இறப்புக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' தேவா மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

விஜய் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவாவின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

இசையமைப்பாளர் தேவாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் தேவாவின் இறுதி பயணத்திற்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+