திமுக எம்.பி.க்கள் தமிழகத்திற்கு சாதித்தது என்ன? காதில் பூ சுற்றுவது பரம்பரை பழக்கம்! எடப்பாடி சாடல்
சென்னை: கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக எம்.பி.க்கள் தமிழகத்திற்கு சாதித்தது என்ன? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார்.
மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பது திமுக வின் பரம்பரை பழக்கம் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம்' என்ற நம்பிக்கையுடன் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது திமுக. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன ?
குறிப்பாக, 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில், தலைப்பு 3ல் - மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவலக மொழி: தலைப்பு 6ல் ஈழத் தமிழர் நலன் தலைப்பில் பல வாக்குறுதிகள்; தலைப்பு 7ல் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளில் தகுதி வாய்ந்த தமிழர்களை இந்திய தூதர்களாக நியமிக்க வலியுறுத்தல்; தலைப்பு 8 ல் கச்சத் தீவு பிரச்சனை; தலைப்பு 16ல் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம்; தலைப்பு 20ல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு விலை குறைப்பு; தலைப்பு 21-அ கேபிள் டி.வி. கட்டணக் குறைப்பு; தலைப்பு 23ல் வருமான வரிச் சலுகைகள்; தலைப்பு 25ல் மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு; தலைப்பு 27ல் வேளாண்மை; தலைப்பு 46ல் நீட் தேர்வு ஒழிப்பு; தலைப்பு 47ல் கல்விக் கடன்தள்ளுபடி; தலைப்பு 56ல் தனியார் துறையில் இட ஒதுக்கீடு; தலைப்பு 57ல் சாதி வாரி கணக்கெடுப்பு; தலைப்பு 75ல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி நீக்கம்; தலைப்பு 80ல் தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களில் இரவு சேவை என்று சுமார் 100 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமுறையாவது திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஏதேனும் பேசினார்களா ? சபையின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு ஆர்ப்பாட்டங்களிலாவது ஈடுபட்டார்களா? 2019-ல் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் என்ற விவரங்களை திமுக தலைவரும், விடியா அரசின் முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிடத் தயாரா?
எனது மேற்கண்ட கேள்விகளுக்கான பதில் 'இல்லை' என்பதே. தமிழக மக்களின் கவனத்தை 'எளிதில் எதையும் மறக்கடித்துவிடலாம்' என்ற நம்பிக்கையுடன், அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பது திமுக வின் பரம்பரை பழக்கம்.
2006-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின்போது, "நிலம் இல்லாத அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்" என்று கருணாநிதி அளித்த வாக்குறுதியைப் போலவே, அவரது வாரிசான ஸ்டாலின், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி, நிறைவேற்ற முடியாத நூற்றுக்கணக்கான பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றார். 2019-ல் அளித்த வாக்குறுதிகள் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போதும் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்றது.''
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications