சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது? உலகத்தில் இருக்கும் பறவைகள் எல்லாமே பொய்யா? அப்போ நாம் பார்ப்பது? புயலை கிளப்பும் "க்ரூப்"!

Google Oneindia Tamil News

சென்னை: உலகத்தில் இருக்கும் பறவைகள் எல்லாம் பொய்யானது என்று ஒரு குழு தீவிரமாக வாதாடி வருகிறது.

உலகம் முழுக்க பல வித்தியாசமான கல்ட் குழுக்கள் இருக்கின்றன. உதாரணமாக.. உலகத்தில் நடப்பது எல்லாத்திற்கும் இலுமினாட்டிதான் காரணம் என்று இலுமினாட்டிகளை நம்பும் குழுக்கள். 11 குடும்பங்கள்தான் உலகத்தையே கட்டிப்படுத்துகின்றன என்று சொல்லிக்கொண்டு திரியும் குழுக்கள், பூமி கோளம் கிடையாது அது வட்டமாக தட்டையாக இருக்கும் என்று சொல்லும் "பிளாட் எர்த்தர்ஸ்" குழுக்கள் என்று பல குழுக்கள் உலகம் முழுக்க உள்ளன.

இன்னும் சிலர் நாம் வாழும் உலகம் என்பதே ஒரு கம்ப்யுட்டர் சிமியுலேஷன் போன்றதுதான். நாம் நிஜ உலகத்தில் வாழவில்லை என்று கூறும் குழுக்கள் உள்ளன.

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.. 50 பேர் பலி.. கொடுமை.. விளாசும் மேற்கு உலகம்! ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.. 50 பேர் பலி.. கொடுமை.. விளாசும் மேற்கு உலகம்!

பறவைகள்

பறவைகள்

இந்த நிலையில் உலகத்தில் இருக்கும் பறவைகள் எல்லாம் பொய்யானது என்று ஒரு குழு தீவிரமாக வாதாடி வருகிறது. என்னது பறவைகள் எல்லாம் பொய்யா? அப்படி என்றால் நாம் வானத்தில் பார்ப்பது என்ன? வானத்தில் மாலை நேரத்தில் வரிசையாக பறப்பது என்ன என்று கேட்க தோன்றுகிறதா? முதலில் இந்த குழுக்களை பற்றி பார்ப்போம். இந்த குழுக்களின் பெயர் Birds Aren't Real. அதாவது பறவைகள் எல்லாம் உண்மை இல்லை. இவர்கள் சொல்வது உலகம் முழுக்க உள்ள பறவைகள் எல்லாமே டிரோன்கள்தான்.

செயற்கை

செயற்கை

இந்த பறவைகள் எல்லாம் செயற்கையாக அந்த நாட்டு அரசுகள் மூலம் இயக்கப்படுகின்றன. முக்கியமாக அமெரிக்க அரசு நேரடியாக பல நாடுகளில் இப்படி பறவைகளை இயக்குகிறது என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். பீட்டர் மெக்லோண்டே என்பவர் இந்த குழுவை உருவாக்கினார். 2017ல் இந்த குழு உருவாக்கப்பட்டது. டிரம்பிற்கு ஆதரவாக டென்னிஸியில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அவர் Birds Aren't Real என்று போஸ்டர்களை பல இடங்களில் ஓட்டினார்.

குழு உருவாக்கப்பட்டது எப்படி?

குழு உருவாக்கப்பட்டது எப்படி?

அதன்பின்புதான் இந்த குழு உருவாக்கப்பட்டது. முதலில் இவர் காமெடியாகத்தான் இந்த குழுவை தொடங்கி உள்ளார். அதாவது ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்று கூறுவார்கள். அப்படித்தான் இவரும் பறவைகள் உண்மை இல்லை என்பதை திரும்ப திரும்ப சொல்லி அதை பின்பு அவரே நம்ப தொடங்கி உள்ளார். Birds Aren't Real என்பது இப்போது மிகப்பெரிய குழுவாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. சில நபர்கள் அண்டை நாடுகளில் இருந்தும் கூட வந்து இந்த குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.

பறவைகள் பொய்யா?

பறவைகள் பொய்யா?

1959 முதல் 1971 ஆண்டுகளில் பல நாடுகளில் இருக்கும் பறவைகளை அரசு பிடித்து கொன்றுவிட்டதாக இந்த குழு கூறுகிறது. அந்த பறவைகளை கொண்டு அதை போலவே இருக்கும் பொய்யான ரோபோட்களை பறக்கவிட்டு உள்ளனர். மக்களை கண்காணிக்க இப்படி செய்துள்ளனர். நாம் பார்க்கும் எதுவும் பறவைகள் கிடையாது. நாம் வீட்டில் வளர்க்கும் பறவைகளில் கூட சில பறவைகள் கிடையாது. இப்போது உலகில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பறவைகள் இருக்கும் என்று Birds Aren't Real குழு தெரிவிக்கிறது.

 Birds Aren't Real

Birds Aren't Real

இந்த பொய்யான விஷயத்தை அந்த கும்பல் உண்மை என்று சீரியசாக நம்புகிறது. அதோடு பறவைகள் மின்சார வயர்களில் உட்காருவதே தன்னை ரீசார்ஜ் செய்து கொள்வதற்காகத்தான். அதன் மூலம்தான் பறவைகளுக்கு உண்மையான பவர் கிடைக்கிறது. அவர் ரீசார்ஜ் செய்து பின்னர் பறக்கும். பறவைகள் மனிதர்கள் மீதும், கார்கள் மீது "கக்கா" செல்வது கூட அவர்களை டிராக் செய்யத்தான். அதில் உள்ள மூலக்கூறுகள் மூலம் மக்களை அந்த ரோபோட்கள் டிராக் செய்யும் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

வாதம் என்ன?

வாதம் என்ன?

அதோடு ஒருபடி மேலே போய் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி, பறவைகளை கொள்வதற்கு மறுப்பு தெரிவித்தார். அதனால்தான் அவரை கொலை செய்தனர் என்றும் இவர்கள் வாதம் வைக்கின்றனர். இவர்கள் வார வாரம் அல்லது மாதம் ஒரு முறை இதற்காக அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்துகின்றனர். அதோடு பேரணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவில் தற்போது 1000க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

சீரியஸ் இயக்கம்

சீரியஸ் இயக்கம்

இந்த இயக்கம் மிகவும் சீரியஸானது. உண்மையில் உலகில், முக்கியமாக அமெரிக்காவில் இப்போது பறவைகள் இல்லை. பறவைகள் என்று ரோபோட்களை வானில் பறக்கவிட்டுள்ளனர். எங்களை காமெடியான இயக்கம் என்று மட்டும் நீங்கள் நினைக்க வேண்டாம், என்று சீரியஸாக பேசுகின்றனர் இந்த குழுவினர். ஆனால் மக்களே.. யார்னா இவனுங்க.. ஒவ்வொரு நாட்டுலயும் அரசு அவ்வளவு தப்பு பண்ணுது. அதை எல்லாம் எதிர்க்காமல் இதை போய் சர்ச்சையாக பரப்பிக்கொண்டு இருக்கின்றனர், என்று இவர்களை கிண்டல் செய்து வருகின்றனர்.

English summary
What is birds are not real group? Why they are claiming birds are robots?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X