ஹைப்ஃபோக்ஸியா என்றால் என்ன?.. உயிரைக் குடிக்கும் நோயை கண்டறிவது எப்படி?
சென்னை: தெர்மாமீட்டர் போல் பல்ஸ் ஆக்ஸிமீட்டரும் வீடுகளில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொண்டு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை தெரிந்து கொண்டு உயிரிழப்பை தவிர்க்கலாம் என்கிறார்கள்.
Recommended Video
கொரோனா நோய் வந்தால் முதலில் நுரையீரலை தாக்குகிறது. இதனால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பொதுவாக கொரோனா பாதித்தால் சளி, காய்ச்சல், இருமல், வாசனை இல்லாத தன்மை, ருசி அறியாமை ஆகியவை ஏற்படும்.
இவ்வாறு ஏற்படும் போது நோயாளிகள் தங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப மருத்துவமனையிலோ வீட்டிலோ தங்கி சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து குணமடைகிறார்கள். ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பை கொடுக்கிறது.

ஆக்ஸிஜன்
பொதுவாக மனித உடலில் உள்ள ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு 95 சதவீதத்திற்கு மேல் இருக்கும். கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரலில் பாதிப்பை கொடுப்பதால் எதிர்பாராத வேளையில் திடீரென மூச்சுத்திணறலை கொடுக்கிறது. ரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்தும் மூச்சுத்திணறல் அறிகுறியே ஏற்படாமல் இருப்பதற்கு பெயர்தான் ஹைப்ஃபோக்ஸியா என்கிறார்கள்.

ஆக்ஸிஜன் அளவு
இந்த ஹைப்ஃபோக்ஸியாவை எப்படி கண்டறிவது என பார்ப்போம். இதற்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என ஒரு கருவி உள்ளது. இது பார்ப்பதற்கு சிறிய வத்திப்பெட்டி போல் இருக்கிறது. இதை ஆள்காட்டி விரலிலோ நடுவிரலிலோ அதை போட்டுக் கொண்டால் உடலில் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு, இதயதுடிப்பின் அளவும் தெரியவரும்.

நோயாளி
இந்த பல்ஸ் மீட்டரில் ஆக்ஸிஜனின் அளவு 95 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகலாம். அதைவிட்டுவிட்டு மூச்சுத்திணறல் அதிகரித்து ஆக்ஸிஜன் அளவும் 80 சதவீதத்திற்கு சென்றுவிட்டால் அந்த நோயாளியை பிழைக்க வைப்பது கடினம் ஆகும்.

விலை எவ்வளவு
இதனால் இந்த பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள், இதயம், நுரையீரல் நோய் உள்ளவர்கள், நாள்பட்ட நோயினால் பாதிக்கப்படுபவர்கள் உள்ளிட்டோர் வாங்கி வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு காலை, மதியம், மாலை, இரவு நேரங்களில் சோதனை செய்யலாம். இதன் விலை ரூ 1500 முதல் கிடைக்கிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications