அடி தூள்.. மக்கள் ஐடியை வைத்து ஸ்டாலின் போடும் மாஸ் திட்டம்.. தமிழக அரசின் உத்தரவு.. குஷி செய்தி!
சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த திட்டத்திற்கு பின் என்ன காரணம் உள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஐடி துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் மக்கள் ஐடி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மக்கள் ஐடியை பலரும் ஐடி கார்ட் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இதற்காக சர்வே, ஆய்வுகள் செய்யப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதற்காக நேரடி சர்வே எதுவும் எடுக்கப்படாது. அதேபோல் ஆதார் கார்ட் போல கையில் இதற்காக கார்ட் எல்லாம் கொடுக்க மாட்டார்கள்.

மக்கள் ஐடி
இது தொடர்பாக ஐடி துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முக்கிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், இது முதல்வரின் கனவு திட்டம். அவர் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய முக்கியமான திட்டம். மக்களுக்கு தரவுகளின் அடிப்படையில் அரசு திட்டங்களை ஏற்படுத்தி கொடுப்பது. பல்வேறு துறைகள் உள்ளன, திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் எல்லாம் சாப்ட்வேரில் இருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைப்போம்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
எந்த திட்டம் யாருக்கு சென்றுள்ளது, யாருக்கு செல்லவில்லை என்பதை கண்டுபிடிப்போம். திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றுள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியாது. பயனாளர்களுக்கு திட்டங்கள் செல்லவில்லை என்றால், அதை அரசே உடனடியாக சென்று சேர வைப்பதும், பயனாளர்களுக்கு சென்று சேரவில்லை என்றால் அதை கண்டுபிடித்து அதில் குறைகளை சரி செய்வதும். திட்டங்கள் மூலம் பயன் பெறும் தவறான நபர்களை நீக்குவதும்தான் இதன் நோக்கம். இதற்காகவே முதல்வர் இந்த கனவு திட்டத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறார், என்று அமைச்சர் கூறியுள்ளார்.

விளக்கம்
மக்கள் ஐடி என்பது ஆதார் கார்ட் போல இருக்காது. ஆனால் இதில் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கும். இது மாநில குடிமக்களுக்கான ஒரு டேட்டா பேஸ் அடையாள எண் ஆகும். இந்த ஒரு டேட்டா பேசில் உங்களை பற்றிய எல்லா தகவலும் இருக்கும். உதாரணமாக கார்த்திக் என்ற நபரை எடுத்துக்கொள்வோம். கார்த்திக் என்ற நபருக்கு என்று ஒரு ஐடி கொடுக்கப்படும். இது அவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அரசு அவருக்காக இந்த ஐடியை உருவாக்கி டேட்டா பேஸில் வைத்து இருக்கும். 12 இலக்கம் கொண்ட ஐடி ஆகும் இது.

12 இலக்கம்
இந்த ஐடியில் கார்த்திக் பற்றிய எல்லா தகவலும் இருக்கும். அவர் எங்கே படித்தார், அவரின் வருமானம் என்ன, அவர் ஏழையா,அவர் என்ன ஜாதி, இடஒதுக்கீடு இருக்கிறதா என்றெல்லாம் விவரங்கள் இருக்கும். அவர் பெற கூடிய திட்டங்களின் பயன்கள் என்னென்ன, அவர் வீட்டில் சிலிண்டர் எத்தனை உள்ளது, அவர் ரேஷனில் எவ்வளவு பொருட்கள் வாங்குகிறார் போன்ற விவரங்கள் எல்லாம் இருக்கும். ஒருவேளை அவர் ஏழையாக இருந்து, அவருக்கு ஏதாவது ஒரு அரசின் திட்டம் சென்று சேரவில்லை என்றால் அதை உடனே அவருக்கு வழங்க முடிவு எடுக்கப்படும்.

எல்லா திட்டமும் இருக்கும்
அரசின் 30 + துறைகளும் இந்த ஒரு எண்ணுக்குள் வந்துவிடும். ஆம் அனைத்து துறைகளில் இருந்தும் ஒருவருக்கு கிடைக்கும் திட்டங்களுக்கான விவரங்கள் இந்த ஐடிக்குள் வந்துவிடும். அரசு அலுவலகங்களில் ஏதாவது திட்டத்திற்காக நீங்கள் சென்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது போன்ற சமயங்களிலும் கூட இந்த ஐடி மூலமாக உங்களுக்கு அந்த திட்டம் ஏற்புடையதா, நீங்கள் தகுதியானவரா என்று எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதே சமயம் கார்த்திக் வேற்று மாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாடு திட்டங்களை பெறுகிறார் அல்லது பணக்காரராக இருந்து ஏழைகளுக்கான திட்டங்களை பெறுகிறார் என்றால் அதையும் கண்டிபிடித்து நீக்க முடியும் என்று தமிழக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications