• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாஜக "கேம் பிளான்.." திகுதிகுவென கிளம்பிய தகவல்.. சசிகலா வீட்டுக்கு விரைந்த தினகரன்.. என்ன நடந்தது?

|

சென்னை: என்ன நடந்ததோ தெரியவில்லை.. திடீரென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், பாஜகவும் கூட்டணி வைக்கப்போகின்றன. அதிமுக கூட்டணிக்குள் தனக்கு கிடைக்கும் தொகுதிகளில் 15 சீட்களை அமமுகவுக்கு பாஜக கொடுக்கும் என்றும் பேசப்பட்டது.

திடீரென இப்படி ஒரு பேச்சு கிளம்ப காரணம் என்ன? டிடிவி தினகரன் ஏன் திடீரென நேற்று சசிகலாவை பார்க்க அவர் வீட்டுக்கு விரைந்தார்? என்பது போன்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தளவில் எப்போதுமே திமுகவை விட அதிமுக அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சி.

தொகுதிகளையே தீர்மானித்து களமிறங்கிய பாஜக- வெல்லும் இடங்களை கேட்கும் பாமக- விழிபிதுங்கும் அதிமுக! தொகுதிகளையே தீர்மானித்து களமிறங்கிய பாஜக- வெல்லும் இடங்களை கேட்கும் பாமக- விழிபிதுங்கும் அதிமுக!

அதிமுக பலமான கட்சி

அதிமுக பலமான கட்சி

எம்ஜிஆர் கட்சி துவங்கிய காலம் முதல், கடந்த சட்டசபை தேர்தல் வரை இந்த டிரெண்ட் தொடருகிறது. எப்படியும், திமுகவை விட 5 முதல் 9 சதவீதம் வாக்குகளை பெறும் கட்சி அதிமுக. இந்த நிலையில், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அமமுகவில் தனித்து செயல்பட்டால் இந்த ஓட்டு வங்கியில் ஓட்டை விழும். இது திமுகவுக்கு சாதகமான அம்சம்.

எடப்பாடியார் நலத் திட்டங்கள்

எடப்பாடியார் நலத் திட்டங்கள்

அதேநேரம், 10 வருடங்கள் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை மாற்றிப் பார்க்கும் மக்களை கொண்ட தமிழகம், 10 வருடங்கள் ஒரே கட்சியிடம் ஆட்சியை கொடுத்தது அதிசயம்தான். எனவே, இந்த முறை இயல்பாக திமுக சற்று upper hand நிலையில்தான் உள்ளது. இதை எடப்பாடியாரின் மக்கள் நலத் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கை பாதுகாத்தது, கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகள்தான் தடுக்கவல்லது. இதைத்தான் பாஜகவும் பெரிதாக நம்புகிறது.

பாஜக பிளான்

பாஜக பிளான்

இந்த தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்பதை உளவுத்துறை மூலம் மத்திய அரசும் தெரிந்தே வைத்துள்ளது. எனவேதான், அமமுகவை 'அக்ரசிவ் மோட்' போக விடாமல் தடுப்பதில் பாஜக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. பாஜக-அதிமுக கூட்டணியில் எப்படியும் அமமுக இடம் பிடிக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதன் மூலம் பாஜகவுக்கு பல நன்மைகள் உண்டு.

கூட்டணி திட்டம்

கூட்டணி திட்டம்

அதில் ஒன்று, அதிமுக-அமமுக எல்லாம் கிட்டத்தட்ட ஒரே கொள்கையுள்ள கட்சிதான். எனவே இரட்டை இலைக்கே ஓட்டுப் போட்டுவிட்டு போய்விடலாம். எதற்கு தனியாக 'குக்கர்' என்ற எண்ணம் வாக்காளர்களிடம் ஏற்படும்.

தாமதம்

தாமதம்

அடுத்ததாக கூட்டணி பேச்சுவார்த்தை எனக் கூறி, சசிகலாவை பிரச்சாரத்திற்கு போவதில் இருந்தும், தினகரனை கட்சி வேட்பாளர்களை அறிவிப்பதில் இருந்தும் தாமதிக்க வைப்பது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம்தான் உள்ளது. எனவே, ஒவ்வொரு நாள் தாமதமாவதும் முக்கியமானது. இவ்விரண்டு வியூகங்களும் இதுவரை பலன் அளித்துள்ளது தெளிவாக தெரிகிறது.

சசிகலாவுடன் சந்திப்பு

சசிகலாவுடன் சந்திப்பு

கடைசி வரை பாஜக இழுத்தடித்த நிலையில்தான், விஷயத்தை புரிந்து கொண்டார் டிடிவி என்கிறார்கள். எனவேதான் நேற்று அவசரமாக, தி.நகர் இல்லத்திற்குச் சென்று சசிகலாவை சந்தித்து இதுகுறித்தெல்லாம் பேசியுள்ளார். இனியும் தாமதிக்க வேண்டாம் என கூறிவிட்டு வந்துள்ளார்.

 தினகரன் பேட்டி

தினகரன் பேட்டி

இதன்பிறகு நிருபர்களை சந்தித்தபோது, எங்கள் தலைமையில் வேண்டுமானால் பாஜக, அதிமுக வரட்டும் என தடாலடியாக கூறிவிட்டார். இப்போது அமமுக வேகமாக தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளது. ஆனால் இத்தனை நாட்களாக அந்த கட்சியை சைலன்ட் மோடில் போட்டதன் மூலம், தனது வியூகத்தில் வவெற்றி பெற்றுள்ளது பாஜக தலைமை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 
 
 
English summary
Why sudden talk on BJP-AIADMK-AMMK alliance are raising? here is the background story.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X