• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வாஷிங் மிசின் வேணாம்.. வூடு தான் வேணும்.. ராயபுரம் மக்களின் குமுறல்,ஜெயக்குமாருக்கு கூடும் நெருக்கடி

|

சென்னை: சிலிண்டர் குடுத்தாங்கன்னா.. பெட்ரோல், டீசல் விலை எல்லா விலையும் ஏறும்.. வாசிங் மெஷின் கொடுத்தாங்கன்னா கரண்ட் பில் ஏறும்.. எங்களுக்கு தேவை வூடு.. குடிக்க தண்ணி இல்லை.. எதுக்கு ஓட்டு கேட்டுன்ணு வாராங்க.. ராயபுரம்னா ஜெயக்குமார் அண்ணந்தான் செல்லப்பிள்ளை.. கேட்காமலே எல்லாம் செஞ்சு கொடுத்திடுவாரு.. இப்படி பல குரல்கள், ஆவேசமாகவும் அன்பாகவும் சென்னை தமிழில் பாய்ந்து வந்தது ராயபுரம் தொகுதியில் இருந்து தான்.

சென்னை ராயபுரம் தொகுதி என்பது மீனவர்கள், அடித்தட்டு ஏழை மக்கள், நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு மக்களின் எதிர்பார்ப்ப என்பது என்ன என்பது குறித்து தொகுதிக்கு நேரடியாக விசிட் செய்தோம்.

அங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குரலில் தங்கள் எதிர்பார்ப்பையும், தேவைகளையும் வெளிப்படுத்தின. தொகுதியில் முக்கிய பிரச்சனை குடிநீர் என்பது தெரிந்தது. இதேபோல் அங்கேயே காலம் காலமாக வாடகை வீட்டில் வசிக்கும் அடித்தட்டு மக்கள் தங்களுக்கு அரசாங்கம் ஹவுசிங் போர்டு மூலம் வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைப்பதை பார்க்க முடிந்தது.

கார்ப்பரேசன் ஊழியர்கள்

கார்ப்பரேசன் ஊழியர்கள்

கவுன்சிலர்களிடமும் கார்ப்பரேசன் ஊழியர்களிடமும் வைக்க வேண்டிய பல கோரிக்கைகள் ராயபுரம் தொகுதியில் எழுப்பினாரகள். கவுன்சிலர்கள் இல்லாததால் கார்ப்பரேசன் ஊழியர்கள் தான் அவர்களின் கோரிக்கையை தீர்க்க வேண்டியது அவசியம்.

சாக்கடை நீர்

சாக்கடை நீர்

அவர்கள் வைத்த பல கோரிக்கைகள் மிக அடிப்படையான கோரிக்கை என்பதே எதார்த்தம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம். ஒரு பெண்ணிடம் நாம் மைக்கை நீட்டிய உடன், இதற்காகவே காத்திருந்தவர் போல், பொருமி தள்ளிவிட்டார். காலத்திற்கும் வாடகை கொடுத்துக்கொண்டு எங்களால் இருக்க முடியாது என்றார். இன்னொரு பெண், ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருவோம் அத்தோட எங்கள் கடமை முடிச்சிடுது. அப்போன்னு உக்கார்ரதுதான் மிச்சம். ஏன்னா, ஒரே காவா தண்ணி (சாக்கடை நீரில் ஏரியா மிதக்கிறது), ரோடு எப்படி இருக்குன்ணு பாருங்க.. அந்த சுடுகாட்டுக்கு சுவர் வைக்க சொல்லுங்க முதல்ல. சரக்கு அடிக்கவணுங்க, கஞ்சா அடிக்கிறவணுங்க என எங்கிருந்தோ இங்கதான் வர்றாங்க பசங்க." என்றார் எதார்த்தமாக..!

முதியோர் உதவி தொகை

முதியோர் உதவி தொகை

ரோடு இல்ல.. தண்ணி இல்ல.. வூடு இல்ல.. கட்சிக்காரங்களுக்கு தான் வூடு வாசலு.. ஓட்டுப்போடுற எங்களுக்கெல்லாம் எதுவும் கிடையாது என்கிறார் இன்னொரு பெண்.. வயதான பெண் ஒருவர் நம்மிடம் பேசும் போது, நான் பக்க ஏடிஎம்கே, எம்ஜிஆர் காலத்தில் இருந்து இப்பவரைக்கும் இரட்டை இலைக்கு தான் ஓட்டுபோடுவேன்.. என் புருசன் செத்து 8 வருசம் ஆகுது.. ஆனால் இன்னைக்கு வரைக்கு விதவையர் காசுகூட வரல. எந்த உதவியும் கிடைக்கல என்கிறார் வேதனையுடன்..

செல்லப்பிள்ளை ஜெயக்குமார்

செல்லப்பிள்ளை ஜெயக்குமார்

ஒரு இளைஞரிடம் பேசும் போது, இங்கு மூன்று நாலு பேரு நின்று இருக்காங்க. ஆனால் தொகுதியில் எதுவும் கேட்காமலேயே அண்ணன் ஜெயக்குமார் செய்வாரு.. ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை செல்லப்பிள்ளை அண்ணன் ஜெயகுமாரு தான்.. எவ்வளவே பிரச்சனை வந்தது சுடுகாடு பக்கத்துல வீடுகள் கட்ட, ஆனால் எங்க ஜனத்துக்காக எல்லா எதிர்ப்பையும் மீறி மக்களுக்கு ஹவுசிங் போர்டுல வீடுகள் கட்டிக்கொடுத்திருக்காரு என்றார். எங்கள் ஹவுசிங் போர்டை ஜெயக்குமார் தான் தொறந்து வைக்கணும். ஆட்சி மாறுமான்னு கேட்காதீங்க.. ராயபுரம் தொகுதியை பொறுத்தவைரை ஜெயக்குமார் தான் வருவாரு.. எங்க தொகுதியில் எல்லா திட்டமும் வந்திருக்கு.. கல்யாணம்னா பத்தாயிரம் ரூபாய் சாவு வீட்டுக்கு வந்தா உதவியா காசு இப்படித்தான் இருப்பாரு என்றார்.

மக்களின் கோரிக்கை

மக்களின் கோரிக்கை

அப்படியே பெண்கள் கூட்டமாக இருக்கும் பகுதிக்கு மீண்டும் வந்த போது, பெண்கள் பேசுகையில் சிலிண்டர் கொடுத்தா பெட்ரோல் டீசல் விலை ஏறும், வாசிங்மெஷின் கொடுத்தா கரண்ட் பில் ஏறும், மூன்று செங்கல், பக்கத்துல சுடுகாட்டுல இருக்குற எரு இருந்தால் போது அதை வச்சு எரிச்சிக்குருவோம்.. எங்களுக்கு வாடகை வீடு வேண்டாம்,, எங்களுக்கு வீடு வேணும். அதுதான் எங்கள் பிரதான கோரிக்கை என்றார்கள் மொத்தமாக. வெற்றி பெறுபவர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவோம்..!

 
 
 
English summary
own house and good water service, smart road and clean drainage is the expectation of the people of Rayapuram assembly constituency in chennai.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X