சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனியிலிருந்து ஓபிஎஸ் திடீர் யூ டர்ன்.. சென்னை பயணம்! அலர்ட் செய்த ‘ஸ்லீப்பர் செல்”.. இவரா?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தேனியிலேயே தங்கியிருந்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீரென சென்னை புறப்பட்டு வந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் அவர் திடீரென சென்னை வந்ததற்கான காரணம் என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது வெடித்த ஒற்றை தலைமை விவகாரம் பொதுக்குழு கூட்டத்தில் விசுவரூபம் எடுத்தது. கட்சியை முழு கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்து இருப்பதையே நடந்து முடிந்த சம்பவங்கள் காட்டின.

ஸ்டாலின் சுற்றுப்பயணம்: 'அந்த மேட்டர் இல்ல’ 3 மாவட்டங்களுக்கு.. தள்ளிப்போனதை கையில் எடுத்த முதல்வர்!ஸ்டாலின் சுற்றுப்பயணம்: 'அந்த மேட்டர் இல்ல’ 3 மாவட்டங்களுக்கு.. தள்ளிப்போனதை கையில் எடுத்த முதல்வர்!

அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஏன் ஓபிஎஸ் மூலம் பதவிக்கு கொண்டு வரப்பட்ட அவைத் தலைவரான தமிழ்மகன் உசேன் முதற்கொண்டு எடப்பாடி அணிக்குத் ஆகிவிட்டனர்.

அதிமுக விவகாரம்

அதிமுக விவகாரம்

இதையடுத்து அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டு உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேனியில் தங்கியிருந்த தொண்டர்களையும் தனது ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தனது ஒப்புதல் இன்றி நடைபெறும் இந்த கூட்டம் சட்டப்படி செல்லாது என பன்னீர்செல்வம் அறிவித்தார். சாதாரண ஆலோசனைக் கூட்டத்தை கண்டு ஓபிஎஸ் பதறுவது ஏன் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தான் அவருக்கு எதிராக இந்த கூட்டம் நடைபெறுவது தெரியவந்துள்ளது.

ஓபிஎஸ் நீக்கம்?

ஓபிஎஸ் நீக்கம்?

அதாவது கட்சி விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாகவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்ததாக பன்னீர்செல்வம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்க இருப்பதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன இதனால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏராளமான உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை வருகை

சென்னை வருகை

இந்த தகவல்கள் காதுக்கு எட்டியதையடுத்து தேனியிலிருந்து அவசரம் அவசரமாக சென்னை விரைந்துள்ளார் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம். தேனி பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி தனது ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்துப் பேச திட்டமிட்டிருந்த அவர் ஒரு வாரத்திற்கும் மேலாக பண்ணையிலேயே தங்கியிருக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் அதிமுக தலைமை அலுவலக கூட்டத்தால் அதிமுகவில் தனது பதவி பறி போகும் வாய்ப்பு இருப்பதால் பதற்றமடைந்துள்ளார்.

போட்டி அதிமுக கூட்டம்

போட்டி அதிமுக கூட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் தானும் ஒரு போட்டி கூட்டம் நடத்தவும் அல்லது கட்சியிலிருந்து நீக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியான அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவே அவர் சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூடுதலாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் ஒருங்கிணைப்பாளர் பகுதியில் மட்டும் தொடர்வார். ஆனால் அந்தப் பதவியில் செல்லாது என முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெயக்குமார் சிவி சண்முகம் உள்ளிட்ட எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆதரவாளர்களில் யாராவது ஒருவர் அதிமுகவின் பொருளாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இறுதி வரை உறுதி

இறுதி வரை உறுதி

எதுவாக இருந்தாலும் சசிகலாவைப் போல தன்னை அவ்வளவு சீக்கிரம் கட்சியிலிருந்து நீக்கிவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார் ஓபிஎஸ். அந்த நம்பிக்கையில் தான் தேனி சென்றார். ஆனால் கட்சியில் இருந்து பொதுக்குழுவுக்கு முன்னதாகவே தன்னை நீக்கிவிடுவார்கள் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது நல்லது என அவரது ஆதரவாளர்கள் கூறியதன் எதார்த்தத்தை உணர்ந்த ஓபிஎஸ் சென்னை வந்துள்ளார். அதிமுக கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் முடிவு செய்வார் என்கின்றனர் அவரது ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள்.

Recommended Video

    OPS மீது Jayakumar பகிரங்க குற்றச்சாட்டு! ADMK கூட்டத்தில் நடந்தது என்ன? | *Politics
    இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல்?

    இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல்?

    பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நீக்க திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அது அடுத்த பொதுக்குழு வரை தள்ளி வைத்துள்ளது. இதனை எடப்பாடி அணியிலும் முழுவதும் இல்லாமல், ஓபிஎஸ் தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாமல் நடுநிலை வகித்து வந்த ஒரு தென்மாவட்ட நிர்வாகிதான் இந்த தகவலை கசிய விட்டுள்ளார். இதனால் இபிஎஸ் தரப்பு அப்செட்டில் உள்ளது. அந்த நிர்வாகி யார் என்பதை கண்டறியவும் சீனியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

    English summary
    Edappadi Palanichamy was holding consultations with his supporters at the AIADMK headquarters. Proponents of her case have been working to make the actual transcript of this statement available online.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X