Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் காலில் விரல் அகற்றம்! ரத்த ஓட்டம் தடைபட்டதால் அறுவைச் சிகிச்சை! தொண்டர்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அவரது வலது காலில் விரல் அகற்றப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்ட தகவலை தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

விஜயகாந்துக்கு சர்க்கரை வியாதி மட்டுமே பிரச்சனையாக இருப்பதாகவும் அவரது உடல்நலன் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை பொறுத்தவரை கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக முழு அரசியலில் இருந்து ஒதுங்கி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் விஜயகாந்துக்கு தலைசிறந்த மருத்துவர்களை கொண்டு உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்பட்டும் எதிர்பார்த்த அளவில் அவரது உடல்நலனில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை.

மருந்து மாத்திரை

மருந்து மாத்திரை

தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உட்கொண்டு வரும் விஜயகாந்துக்கு கடந்த வாரம் காலில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மியாட் மருத்துவமனையை பொறுத்தவரை விஜயகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை என்பதால், அவரது சிகிச்சை ஹிஸ்டரி அனைத்தும் அவர்களிடம் இருக்கின்றன.

கால் விரல்கள்

கால் விரல்கள்

விஜயகாந்த் உடலில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்த ஓட்டம் சீராக இல்லாததை கண்டறிந்ததோடு வலது காலில் உள்ள 3 விரல்களை அகற்றுவதால் மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் கூறியிருக்கின்றனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி விஜயகாந்தின் கால் விரலை அகற்ற அவரது குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்த பிறகு நேற்றிரவு அதற்கான அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. விஜயகாந்தின் காலில் விரல் அகற்றப்பட்டதை அவரது குடும்பத்தினர் யாருக்கும் தெரிவிக்கவில்லை.

 விரல் அகற்றம்

விரல் அகற்றம்

இதனிடையே விஜயகாந்த் உடலில் என்ன பிரச்சனை என்ற தலைப்பில் ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியில் இது குறித்து நாம் கூறியிருந்தோம். இப்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக தேமுதிக தலைமைக் கழகத்தில் இருந்தே அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நீரிழிவு பிரச்சனையால் விஜயகாந்தின் வலது கால் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு திரும்புவார்

வீடு திரும்புவார்

மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நலன் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நலம் விசாரிப்பு

நலம் விசாரிப்பு

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோரிடம் தேமுதிக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அலைபேசி தொடர்பு கொண்டு கேப்டனின் உடல்நலம் பற்றி விசாரித்து வருகிறார்கள். எப்படி இருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்ற தங்களது ஆதங்கத்தையும் நிர்வாகிகள் கொட்டித்தீர்த்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+