சென்னை ஏர் ஷோவிற்கு போனவர்களுக்கு ஷாக்.. அடுத்தடுத்து பலியான 4 பேர்.. என்ன காரணம்? பின்னணி
சென்னை: சென்னை ஏர் ஷோவிற்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக.. 4 பேர் இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளனர். 4 பேர் அந்த நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய நேரத்தில் பலியாகி உள்ளனர்.
மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்து உள்ளது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பைக்கில் திரும்பியபோது ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் மயங்கியுள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சீனிவாசன் பலியாகி உள்ளார்.

சென்னை மெரினாவில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தவர்களில், 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (48) மயக்கமடைந்து பலியாகி உள்ளார். திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (34) நெஞ்சுவலி ஏற்பட்டும் பலியாகி உள்ளார். அதேபோல் 60 வயதான ஜான் என்ற நபர் மெரினாவில் சாகச நிகழ்ச்சியைப் பார்த்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த நிலையில், அவர் மயங்கியதை அருகே இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இவரும் பலியாகி உள்ளார்.
இந்த விழாவிற்கு சென்றவர்கள் 4 பேர் அடுத்தடுத்து பலியாக என்ன காரணம்.. இவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
1. சென்னையில் நிலவும் கடுமையான வெயில்தான் அனைத்திற்கும் காரணம். இன்று மெரினாவில் கிட்டத்தட்ட 35 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது.
2. கடுமையான வெயில் காரணமாக பலருக்கும்.. கடுமையான நீர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. நீர் இழப்பு காரணமாக மக்கள் அங்கே கடுமையாக துடித்து உள்ளனர்.
3. சிக்கலே ஒருமுறை உள்ளே சென்றால் வெளியே வருவது சிக்கல். அண்ணா சிலையில் இருந்தோ.. மெரினாவில் மற்ற பகுதியில் இருந்தோ அண்ணா சாலைக்கு செல்ல வேண்டும் என்றால் நடந்தே செல்ல வேண்டும்.
4. இதற்கு குறைந்தது 1 மணி நேரம் ஆகும். கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக கூட்டத்தில் ஊர்ந்து செல்ல வேண்டும்.
5. கார் வாகனங்கள் டிராபிக்கில் செல்வது போல நடந்து செல்லும் போது கூட ஊர்ந்து செல்லும் அளவிற்கு அங்கே கூட்டம் நிலவியது.
6. கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டதே சிக்கல். இத்தனை பேர் இங்கே ஒரே இடத்தில் கூடி இருந்ததால்.. மக்கள் வெளியே செல்வது சிக்கலாக இருந்தது.
7. இந்த நெரிசல் காரணம்.. பலருக்கும் மூச்சு திணறல், படபடப்பு, கடும் நீர் இழப்பு ஏற்பட்டு உள்ளது . பலருக்கும் அங்கே நீர் இழப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டாலும் கூட அவர்களை வெளியே கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. அங்கு டிராபிக் மோசமாக இருந்ததால் உடனடியாக யாரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை
8. அங்கேயே தற்காலிக மருத்துவ சேவை மையம் இருந்தது. ஆனால் அங்கே அவசர சிகிச்சை தவிர மற்ற சிகிச்சைகளை செய்ய முடியாது. இதனால் மோசமான நிலையில் இருந்தவர்களை அங்கே இருந்து வெளியே மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெரிய சிக்கலாக மாறி உள்ளது. இதுவே மரணத்திற்கும் காரணமாக மாறி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications