விமர்சிக்காதீங்க..சமாதானம் செய்த தாமரை! கப்சிப் ஆன ‘வடக்கு’ மாஜி! எடப்பாடி பேச்சுக்கு இதுதான் காரணமா?
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்படும் பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி கழற்றிவிட மும்முரமாக காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவரது பேச்சு அதிமுகவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று வரை மாஜிக்கள் மூலம் பாஜகவை விமர்சித்து வந்தவர் தற்போது வேண்டாம் எனக் கூறுவதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை ரேசில் தற்போது முன்னணியில் இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி தான். காரணம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என சென்னை உயர்நீதிமன்றமும், கணக்கு வழக்குகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து இருக்கிறது.
இருந்த போதும் அதிமுகவின் தலைமை நான் தான் எனது கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் விட்டுக் கொடுக்காமல் தன்னால் என்னென்ன இடைஞ்சல்களை கொடுக்க முடியுமோ அனைத்தையும் எடப்பாடிக்கு வழங்கி வருகிறார்.

அதிமுக விவகாரம்
அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடுத்த வழக்கு வருகின்ற நான்காம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு நிச்சயம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தான் வரும் அதன் பிறகு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் மூத்த முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் என பலரும் தங்கள் தரப்புக்கு வருவார்கள் என ஓபிஎஸ் தரப்பு உறுதியாக கூறி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை பாஜகவின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றிணை வேண்டுமென அந்த கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பாஜக தலையீடு
மேலும் முதலமைச்சர் வேட்பாளர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆகிய விவகாரங்களிலும் பாஜக தலைமை கேட்டுக் கொண்டதால் தான் விட்டுக் கொடுத்தேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியை இதுவரை இல்லாத அளவு ஒருமையில் பேசியதோடு முடிந்தால் தனிக்கட்சி ஆரம்பித்து தெருவுக்கு வந்து பார் என சவால் விட்டார். இதனை அவரது ஆதரவாளர்களே எதிர்பார்க்கவில்லை. ஓ.பன்னீர் செல்வத்துக்கு பாஜகவின் ஆதரவு இருப்பதால்தான் இப்படி தைரியமாக பேசுகிறார் என்று யூகங்கள் கிளம்பியது.

மா.செ.க்கள் கூட்டம்
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் இருந்து போனவர்கள் போனதாகவே இருக்கட்டும் யாரையும் சேர்க்க வேண்டாம் எனக் கூறினர். இறுதியாக எடப்பாடி பழனிச்சாமி பேசிய பேச்சு தான் யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது. காரணம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக ஆதரவாக இருப்பதால் அந்த கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டிவிடலாம் என இபிஎஸ் நினைப்பதாக கூறிவந்த நிலையில் தற்போது அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

சிவி சண்முகம்
இதுவரையில் பாஜக அதிமுக விவகாரங்களில் தலையிட்டதில்லை எனவே அந்த கட்சியை விமர்சிக்க வேண்டாம் எனக்கு கூறினார். இது சிவி சண்முகம் போன்றோரை அதிருப்தியில் ஆழ்த்தியதாக கூறுகின்றனர் அதிமுகவினர். அதே நேரத்தில் இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒற்றை தலைமை விவகாரமாக இருந்தாலும் சரி அல்லது விசாரணை அமைப்புகளை எதிர் கொள்ள வேண்டியதாக இருந்தாலும் பாஜகவின் தயவு தேவை என கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மணியான மூத்த முன்னால் அமைச்சர்கள் எடப்பாடி இடம் வலியுறுத்தியதாகவும் அதன் வெளிப்பாடுதான் இந்த பேச்சு என்கின்றனர்.

பாஜக பேச்சுவார்த்தை
மேலும் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தரப்பிலிருந்து சில தலைவர்கள் எடப்பாடி இடம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தற்போதைக்கு திமுகவை எதிர்ப்பது தான் பிரதானம் ஓபிஎஸ் உள்ளிட்ட விவகாரங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் கூட்டணி தொடர வேண்டியது அவசியம் என பேசி உள்ளனர். அவர்களிடம் ஒரு நிபந்தனையை விதித்த எடப்பாடி அதிமுக குறித்து பாஜக தலைவர்கள் பேசக்கூடாது எனக் கூறியிருக்கிறாராம். அதனால் தான் ஓபிஎஸ் குறித்து கடந்த சில நாட்களாக வேறு தலைவர்கள் பேசவில்லை. அதற்கு முன்னதாக சிடி ரவி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அதிமுக இணைய வேண்டும் என பேசி வந்தது குறிப்பிடத்தக்கது. இனிமேல் அவ்வாறு நடக்காது என பேச்சுவார்த்தைக்கு வந்த தலைவர்கள் கூறியதால் தான் தற்போது பாஜக விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி கூறினார் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications