• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லாத்துக்கும் ‘இதுதான்’ காரணம்! ஓபிஎஸ் டீம் எடிப்பாடி டீமுக்கு தாவிய பின்னணி? இத யாரும் யோசிக்கலயே

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் இருந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தாவியது எப்படி? எடப்பாடி தரப்பிலிருந்த வைத்தியலிங்கம் ஒபிஎஸ் முகாமுக்கு மாறியது எவ்வாறு, சிவி சண்முகத்தின் எடப்பாடி விஸ்வாசத்துக்கு வித்திட்ட பின்னணி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

Recommended Video

  அதிமுகவில் சதி வலை பின்னியவர்கள் யார்னு தெரியும்- OPS பரபரப்பு பேச்சு *Politics

  அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அதிமுக கட்சிக்குள்ளே ஒரு கலவரமே வெடித்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றி விட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

  பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் செல்லாமல் எடப்பாடி தரப்பில் தஞ்சமடைந்துள்ளனர். மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு ஆதரவாக உள்ளனர்.

  புரட்சி பயணத்தை தொடங்கிய சசிகலா.. அதிமுக கொடி கட்டிய பிரச்சார வாகனம்.. தொண்டர்களை நோக்கி கையசைப்பு! புரட்சி பயணத்தை தொடங்கிய சசிகலா.. அதிமுக கொடி கட்டிய பிரச்சார வாகனம்.. தொண்டர்களை நோக்கி கையசைப்பு!

  இபிஎஸ் தரப்பு

  இபிஎஸ் தரப்பு

  தொடக்கத்திலிருந்தே ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு நெருக்கமாக இருந்த நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் எடப்பாடி தரப்புக்கு தாவி விட்ட நிலையில், சார்பு அணிகளான எம்ஜிஆர் இளைஞரணி, புரட்சித் தலைவி அம்மா பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் இபிஎஸ் தரப்புக்கு தாவி விட்டனர். மேலும் ஓபிஎஸ்ஸின் வலது கரம் போல செயல்பட்ட கே.பி,முனுசாமி இப்போது இபிஎஸ்க்கு பக்கபலமாக நிற்கிறார்.

  ஒரே புள்ளி

  ஒரே புள்ளி

  இந்த விவகாரங்களை எல்லாம் ஒருங்கிணைத்து உன்னிப்பாக கவனித்தால் இவை அனைத்தும் ஒரு புள்ளியில் மையம் கொண்டிருப்பதை யூகிக்க முடியும். அது என்னவென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த மாநிலங்களை 'உறுப்பினர் தேர்தல்'. அக்கட்சியில் இரண்டு உறுப்பினர் தேர்வுக்கு ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரித்திருந்தால், ஒற்றைத்தலைமை விவகாரத்தை அவர் முதலில் வெளியில் பேசி, அதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கவும் மாட்டார் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்திருக்காது.

  முகாம் தாவிய நிர்வாகிகள்

  முகாம் தாவிய நிர்வாகிகள்

  ஓபிஎஸ் முகாமில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கே.பி.முனுசாமி மாநிலங்களவை எம்பி பதவியைக் கேட்ட போது மறுக்காமல் அவருக்கு அப்பதவியை வழங்க முன்வந்த காரணத்தால், முனுசாமி முகாம் மாறி எடப்பாடி பழனிசாமியில் தீவிர ஆதரவாளர் ஆனார். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பின், ராஜ்ய சபா எம்பியாக இருந்த வைத்திலிங்கம், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, தான் அமைச்சராகவே விரும்பிய நிலையில் அது ஈடேறாமல் போக, மீண்டும் உறுப்பினராவதற்கான வாய்ப்பைக் கூட கட்சி வழங்காத விரக்தியில், எடப்பாடி முகாமிலிருந்த வைத்திலிங்கம், இப்பொழுது ஒபிஎஸ்ஸோடு வலுவாகக் கரம் கோர்த்திருக்கிறார்.

  சிவி சண்முகம் ஆதரவு

  சிவி சண்முகம் ஆதரவு

  பலரும் முட்டி மோதிய ராஜ்யசபா பதவியை, ஓபிஎஸ் கோட்டா போக, மீதம் தனக்குரிய கோட்டாவின் மூலம் முன்னாள் அமைச்சரும், சொந்த தொகுதியிலேயே தோற்றாலும் சி.வி.சண்முகத்திற்கு பலத்தப் போட்டிக்கிடையே தந்த காரணத்தால், எடப்பாடியின் தீவிர ஆதரவாளராக மாறிப்போனார் சி.வி.சண்முகம். அவர் பொதுக்குழுவில் ஒரு கதாநாயகன் போலவே மாறி, எடப்பாடி பழனிசாமி மீது தனது ஆதரவு நிலையை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தினார்.

  காரணம் என்ன?

  காரணம் என்ன?

  இப்படி தொடர்ச்சியாக அக்கட்சியில் நிகழ்ந்த குழப்பங்களுக்கும் சிக்கல்களுக்கு, ராஜ்யசபா எம்.பி பதவி நியமனம் மற்றும் அதற்கு பிறகு நிகழ்ந்த நிகழ்வுகளே முக்கியக் காரணியாக அமைந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. கூட்டிக்கழிச்சிப் பார்த்தால் கணக்கு சரியாக வரும் என்பது போல், மேற்கண்ட நால்வரும் தான், இருதரப்பிற்கும் இடையே விரிசல் அதிகமாகக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதும் நிலை எழுகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

  English summary
  What is the reason for the problems that have been going on for so many days in the AIADMK How did the OPS executives jump to the Edappadi Palanisamy side in the AIADMK single leadership affair? You can see in detail how Vaithiyalingam from Edappadi side shifted to OBS camp and what is the background behind CV Shanmugam's Edappadi loyalty.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X