டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அரசு என்ன செய்ய வேண்டும் - ஹைகோர்ட் உத்தரவு
டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள், கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம், இரு வேறு உத்தரவுகளை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் கடைகள் தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகளும், கிராம சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினால் அதைச் செயல்படுத்துவது தொடர்பாக விதிகளில் திருத்தம் கொண்டுவருவது பற்றி அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டாஸ்மாக் கடைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி, திருத்த விதிகளை தாக்கல் செய்தார்.
ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் எந்த கடைகளையும் திறக்க அனுமதிக்க கூடாது என்றும் அந்த திருத்த விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்குகளை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கேள்வியை முடித்து வைத்தனர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications