பாஜகவின் வேற மாதிரி கணக்கு.. டெல்லியில் ‘தலைவன்’! எடப்பாடி பிடிவாதம்.. மொத்தமா போச்சே! ஆப்ஷனே இல்ல!
சென்னை : பாஜகவின் கால்குலேஷனை ஏற்றுக்கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முரண்டு பிடித்தால், 2024 தேர்தலில் பாஜக எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் ஒரு முக்கியமான கோணத்தை முன்வைக்கின்றனர்.
2024 லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தமது கூட்டணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது பாஜக. அதற்கு, ஓபிஎஸ் - எடப்பாடி இணைந்து செயல்பட வேண்டும் என்ற அறிவுரையையும் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
எனினும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உடன் மீண்டும் இணைந்து செயல்படும் யோசனையை மறுத்துள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க, 2024 தேர்தலில் ஒரு யுக்தியை பாஜக கையாளும் எனக் கூறப்படுகிறது.

அதிமுக விவகாரம்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே நிகழ்ந்து வரும் மோதலால் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. இருவருமே பாஜக ஆதரவைப் பெற பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்சியில் தனக்கே 90% செல்வாக்கு, தன் தலைமையிலேயே கட்சி வழிநடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஓபிஎஸ், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதிக அளவில் நிர்வாகிகள் ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தாலும், டெல்லி பாஜக தலைமை, எடப்பாடிக்கு ஆதரவளிக்காமல் இழுத்தடித்து வருகிறது.

பாஜக நிலைப்பாடு
பாஜகவின் குறி 2024 லோக்சபா தேர்தலாகவே இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு, அதிமுக இணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் ஓரணியாக நின்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் தான் திமுக கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்பது பாஜக தலைமையின் கணக்காக இருக்கிறது. இதனை ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் ஏற்றுக்கொண்டாலும், ஈபிஎஸ் மட்டும் முரண்டு பிடித்து வருகிறார்.

பாஜக கணக்கு
கட்சியில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு தனக்கே இருக்கும் நிலையில், எதற்காக ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டும் என்பது ஈபிஎஸ்ஸின் கேள்வியாக இருக்கிறது. எனினும், ஓபிஎஸ் ஆதரவும் இருந்தால் தான் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியும், இதனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைவது அவசியம் என பாஜக தலைமை கருதுகிறது. இதனால், இந்தப் பிரச்சனை முடிவுக்கு வராமல், இழுத்துக் கொண்டே செல்கிறது. எப்படியும், பாஜக, தன்னைக் கைவிடாது என்ற முடிவில் இருக்கிறார் ஓபிஎஸ்.

50-50 - நோ சான்ஸ்
எடப்பாடி பழனிசாமியோ 50-50 என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. ஈபிஎஸ் அணியில் உள்ள ஜெயக்குமார், முனுசாமி, பொன்னையன் உள்ளிட்ட சீனியர்கள் சிலர் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அதேநேரம், எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமான எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பாஜகவை விட்டுத்தரவும் தயாராக இல்லை, ஓபிஎஸ்ஸுடனும் இணக்கமாகச் செல்லத் தயாராக இல்லை, இதனால் பாஜக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சின்னம் ஃப்ரீஸ்
இந்நிலையில் தான் அரசியல் நோக்கர்கள் சில விஷயங்களை முன்வைக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அறிவுரையை ஏற்காத பட்சத்தில், எந்த மாதிரியான முடிவை எடுத்து பாஜக 2024 தேர்தலை எதிர்கொள்ளும் என்பது பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. ஓபிஎஸ்ஸை பழையபடி சம அதிகாரம் கொடுத்து சேர்த்துக்கொள்ள ஈபிஎஸ் தயாராக இல்லை என்றால், இருவருக்குமே சின்னம் கிடைக்காமல் இரட்டை இலை முடக்கப்படலாம். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தனித்தனியாகச் செயல்படும்.

கூட்டணிக்கு ராஜா பாஜக
2024 லோக்சபா தேர்தலில் தமிழகத்திலும் கூட்டணிக்கு பாஜக தலைமை வகிக்கும். அதிமுகவின் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பாஜகவே சீட் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. பாஜக கணக்குப்படி, அரசியல் செல்வாக்கு அடிப்படையில் பாஜக அளிக்கும் எண்ணிக்கையிலான சீட்களில் எடப்பாடி அணி உள்ளிட்ட கூட்டணி கட்சியில் போட்டியிடும் சூழல் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி, பாஜக பேச்சைக் கேட்காமல் முரண்டு பிடித்தால் சின்னத்தை முடக்கிவிட்டு செக் வைப்பதுதான் திட்டமாக இருக்கும் என்கிறார்கள்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் - 2 அணிகள்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இடையே மோதல் தொடர்ந்தாலும் கூட, அவர்களின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் வாக்களித்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட கூட்டணி கட்சி என்ற முறையில் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். இப்படியாக இணக்கமில்லாத அணிகளின் கூட்டணியை உருவாக்கினாலும் நமக்கு பாதிப்பில்லை என்ற அடிப்படையில் பாஜக அப்படியான முடிவை எடுக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இது அதிமுகவின் எதிர்காலத்திற்கு ஆபத்து என்பதால், அதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக் கொள்ளவேண்டும் என்பது தான் அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications