தாழ்வு மண்டலம் எவ்வளவு தூரத்தில் உள்ளது? அடுத்த 2-3 நாள் என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அது எந்த திசையில் செல்லும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் அமைப்பு மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆகியோர் முக்கிய அப்டேட்களை வெளியிட்டு உள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்பார்த்தபடியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி வேகமாக வலுவடைந்து வருகிறது.
நேற்று தாழ்வு மண்டலமாக மாறிய இது வேகமாக நகரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதன் வேகம் குறைத்து மிக மிக மெதுவாக நகர தொடங்கி உள்ளது. இதனால் என்ன மாதிரியான பாதிப்பை இது கொடுக்கும், மழை எவ்வளவு பெய்யும் என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது,

விளக்கம்
இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் அமைப்பு மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஆகியோர் முக்கிய அப்டேட்களை வெளியிட்டு உள்ளனர். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக சென்னை ரெயின்ஸ் அமைப்பு செய்துள்ள போஸ்டில், இந்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு தென் கிழக்கு பகுதியில் 425 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது மேலும் மேலும் வேகம் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு போக போக அப்படியே நகராத நிலையை கூட இது நெருங்கும். இரவோடு இரவாக இது ஆற்றலையும் இழக்கும். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மழைக்காக இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும், என்று கூறியுள்ளது.

சென்னை ரெயின்ஸ்
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அப்டேட்டில், பகல் பொழுதில் மேகங்கள் நிலைத்து இருப்பது கஷ்டம். சாரல் மழையை தவிர பகல் நேரத்தில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மழை மேகங்கள் நகருகிறதா என்பதை பார்க்க இரவு வரை காத்திருக்க வேண்டும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரிதாக எங்கும் நகரவில்லை. இது நமது கடல் பகுதியில் அடுத்த 2-3 நாட்களுக்கு அப்படியே நிலைகொண்டு நிற்கும். எல்லோரும் போய் வேலையை பார்க்கலாம். லேட் நைட் மீட் பண்ணலாம் என்று, தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டு உள்ளார்.

வெதர்மேன் பிரதீப்
இந்திய வானிலை மையத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் பெரிதாக மழை பெய்யாது,. அதேபோல் நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் மற்றும் அதற்கு மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை நிலை
சென்னையில் பெரிதாக கனமழை மாலை வரை இருக்காது . சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதே சமயம் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

கடல் காற்று
இன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளையில் இருந்து மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். ஆனால் இது சராசரி காற்று வீசும் அளவுதான். மற்றபடி இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மீன் பிடிக்க வங்கக்கடல் செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. .
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications