பிரபல நடிகை "இங்கே" வர்றாராமே.. சைக்கிள் கேப்பில் நுழைந்த கட்சி.. அதிர்ந்த கமலாலயம்.. காயத்ரிக்கு வலை
சென்னை: பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் குறித்த செய்தி ஒன்று பரபரத்து வருகிறது.. இது தமிழக பாஜகவுக்கு எரிச்சலை தந்து வருகிறது.
தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல்கள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.. ஒருபக்கம் திமுகவை டேமேஜ் செய்துகொண்டும், இன்னொரு பக்கம் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டும், பாஜக தன் அரசியலை செய்து வந்தது.
ஆனால், இப்போது அந்த கட்சியிலேயே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வெடித்து கிளம்பி உள்ளன.. தினம் தினம் ஒரு வீடியோ அல்லது ஆடியோ வெளியாகி கொண்டிருக்கிறது.. கமலாலயம் மீதே சில பெண் நிர்வாகிகள் புகார்களை வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள்.
அங்கே போட்ட அச்சாரம்.. எடப்பாடி 'கிரீன் சிக்னல்’.. உடனே ஓகே சொன்ன பாஜக! பின்னணி இதானா? அப்போ ஓபிஎஸ்?

ஜூனியர்
அதுவும் சீனியர், ஜூனியர் என்றெல்லாம் யாரும் பார்ப்பதில்லை.. மனதில் பட்டதை அப்படி அப்படியே ஓபனாக சொல்லி வருகிறார்கள்.. இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், புகார் சொல்லப்படும் பாஜக பெண் நிர்வாகிகள் மட்டும் சஸ்பெண்ட் ஆகி வருகிறார்கள்.. புகார்களுக்கு காரணமான ஆண் நிர்வாகிகள், இன்னும் பலத்துடன் வலிமை பொருந்தி, அக்கட்சியில் நீடித்து வருவதாக பரவலாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.. திருச்சி சூர்யா விவகாரத்தை பொறுத்தவரை, அசிங்க அசிங்கமாக பேசிய சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல், அதற்கு கருத்து சொன்ன காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டபோதே இப்பிரச்சனை வெடித்தது.

செயல்வீரர்
நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு, மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் ஒரு ஸ்பெஷல் பேட்டி தந்திருந்தார்.. அப்போது காயத்ரி விவகாரம் குறித்து அவரிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.. அதற்கு காந்தராஜ் நம்மிடம் சொன்னபோது, "காயத்ரி விவகாரத்திலாவது, ஆடியோவை வைத்துதான் விவகாரம் நடக்கிறது.. ஆனால், கேடி ராகவன், "செயல்வீரராகவே" அந்த வீடியோவில் இருந்தார்.. கட்சிக்குள்ளே சகஜகமாக நடப்பதை, பிரச்சனையாக்கிவிட்டதால்தான், காயத்ரியை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்கள்..

டாக்டர் ஷர்மிளா
ஆண்கள் இப்படித்தான் பெண்களிடம் நடந்துகொள்வோம், இதை போய் வெளியே சொல்லிவிட்டாயே என்று காயத்ரி மீது கோபம் வந்தள்ளது.. அதனால்தான் நீக்கிவிட்டார்கள்.. பாஜககாரர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் திருச்சி சூர்யாவும் நடந்து கொண்டுள்ளார்.. சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்களே? இவங்க கட்சிக்குள்ளேயே இப்படி நடந்ததற்கு, சூர்யாவை 7 நாள் பேசாதே என்பதுதான் இவங்களுடைய நடவடிக்கையா? உடனே திருச்சி சூர்யா சொன்ன அந்த வார்த்தைகள் எல்லாம் புனிதமாகிவிட்டதா? இதுதான் இவர்கள் நடவடிக்கை என்றால், சைதை சாதிக்கையும் 7 நாள் பேசாதே என்று திமுக சொல்லி இருக்கலாமே" என்று கூறியிருந்தார்.

மேஜர் தப்பு
அதுபோலவே, நம் ஒன் இந்தியாவுக்கு டாக்டர் ஷர்மிளாவும் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "எந்த ஒரு விளக்கத்தையும் காயத்ரியிடம் கேட்காமல் சஸ்பெண்ட் செய்துள்ளது, ஒருதலைப்பட்சமாக தெரிகிறது.. என்னதான் பிரச்சனை என்று கட்சி அவரிடம் விசாரித்திருக்கலாம்.. இதுக்கும் ஒரு குழுவை போட வேண்டியதுதானே? விசாரித்துவிட்டு எங்கே தப்பு நடந்திருக்கிறது என்று தெளிவாக கண்டுபிடிக்கலாமே? ஆனால், விசாரிக்க அவர் தயாரில்லை.. காயத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட தயாரில்லை.. தமிழ்நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைமையில்தான் பாஜக போய் கொண்டிருக்கிறது" என்றார்.

வானதி ஹோப்
அரசியல் விமர்சகர் ராம சுப்பிரமணியமும் ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், கேடி ராகவன் விவகாரம் குறித்து விசாரிக்க கமிட்டி போட்டாங்க.. அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.. நடந்த சம்பவங்கள் குறித்து காயத்ரி டெல்லிக்கு காயத்ரி ரிப்போர்ட் அனுப்பி உள்ளதாக தெரிகிறது.. வானதி சீனிவாசன், பாஜக மகளிர் பெண்கள் அகில இந்திய தலைவி என்பதால், அவரிடம் புகார் தந்ததாகவும், அதை மேலிடத்துக்கு அனுப்புவதாக காயத்ரியிடம் வானதி நம்பிக்கை கூறியதாகவும்கூட செய்திகள் வருகின்றன.. நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதே என்று அவர் சொன்னாராம்.. எனவே, பாஜக மேலிடம் நிச்சயம், நடந்த சம்பவங்களை கண்டிக்கும் என்றே தெரிகிறது" என்று நம்பிக்கை கூறியிருந்தார்.

அட்டெண்ட்
இப்படி காயத்ரி விவகாரம் குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை சொல்லி வரும் நிலையில், தற்போது காயத்ரி என்ன செய்ய போகிறார்? என்பது குறித்தும் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.. மாநில தலைவர் அண்ணாமலையிடம் பேச காயத்ரி முயற்சித்தும், அவரது லைனை அண்ணாமலை அட்டெண்ட் பண்ணாமல் புறக்கணிக்கவும், இந்த செயல், காயத்ரியை மிகவும் கோபப்பட வைத்தது... தமிழக பாஜகவில் சர்வாதிகாரம் அதிகரித்து வருவதாக நினைக்கும் காயத்ரி, தன்னிடம் விளக்கம் கேட்காமலே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், இதனை மாநில தலைமையிடம் விளக்க எனக்கு வாய்ப்புத் தரப்படவில்லை என்றும் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் புகார் தெரிவிக்க முயற்சித்தாராம்..

கதர் வலை
ஆனால், தேசிய தலைமையும் காயத்ரியை சந்திக்க நேரம் தரவில்லையாம்.. இந்த நிலையில், தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்திக்க காயத்ரி நேரம் கேட்டும் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. இதனால், மிகவும் நொந்துபோன காயத்ரிக்கு, தமிழக காங்கிரஸ் வலை வீசியிருக்கிறதாம். விசிக, திமுகவை சரமாரியாக விமர்சித்து வந்த காயத்ரியை, இக்கூட்டணிகளில் ஒன்றான காங்கிரஸ் வலையை விரித்துள்ளது வியப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது.. ஒருவேளை காயத்ரி, காங்கிரஸில் இணைந்தால், அது தமிழக பாஜகவுக்கு மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்