உதயநிதி முதல்வராவாரா? அண்ணாமலை அரசியல் பயணம் எப்படி, நயன்தாராவிற்கு திருமணம் எப்போ? கிளி சொன்ன பலன்
நயன்தாராவிற்கு எப்போது வேண்டுமானாலும் திருமணம் நடைபெறும் என்று கிளி ஜோதிடக்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
சென்னை: நயன்தாராவிற்கு திருமண தோஷம் எதுவும் இல்லை என்றும் அவருக்கு எப்போது வேண்டுமானாலும் திருமணம் நடைபெறும் என்றும் கிளி ஜோசியர் ஒருவர் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம், சீமான், அண்ணாமலை ஆகியோரின் அரசியல் பயணத்தையும் கணித்து கூறியுள்ளது கிளி.
புகாரி ஜங்சன் என்ற யுடூயூப் சேனலில் கிளி ஜோதிடரிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் தங்களின் வாழ்க்கை முறை பற்றி விளக்கம் தருகிறார் ஜோதிடர். திருவிழா காலங்களில் கூட்டமாக இருக்கும் இடங்களில் ஜோதிடம் பார்ப்பதாகவும் ஜோதிடர் கூறினார்.
அரசு உத்தரவினால் கிளி வளர்க்க தடை உள்ளது. இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் ஜோதிடர் கவலையுடன் கூறியுள்ளார்.

பிரபலங்களுக்கு கிளி ஜோசியம்
தமிழகத்தின் பிரபலங்களுக்கும் கிளி ஜோசியம் பார்க்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர், விஜய் ,நயன்தாரா சீமான் பிஜேபி தலைவர் அண்ணாமலை ,ஸ்டாலின் மற்றும் சசிகலா ஆகியோருக்கும் கிளி ஜோசியம் பார்க்க சுவாரஸ்யமாக தொடங்குகிறது வீடியோ.

நயன்தாரவுக்கு ஆண்டாள்
நயன்தாராவுக்கு சீட்டெடுத்த கிளி,ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சீட்டு எடுத்துக்கொடுக்க, நிறைய சோதனைகளை கடந்த இந்த நபருக்கு அவர் மனது வைத்தால் எப்போது வேண்டுமானாலும் திருமணம் நடக்கலாம், திருமண தோஷம் எதுவும் இல்லை என்று சொல்கிறார். வாழ்க்கையில் நயன்தாராவிற்கு பெரிய அளவில் பிடிமானம் இல்லை என்றும் கூறியுள்ளார் கிளி ஜோசியர். பிரபலமாக இருந்தாலும் நிம்மதியில்லாத வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார் நயன்தாரா என்று கூறியுள்ளார் ஜோசியர். ஆனால் அவர் அதை பெரிதாக நினைப்பதில்லை. புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளார்.

சசிகலா அரசியல் வரவு
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, அவருக்கு இப்போது சீட்டு சரியில்லை என்று கூறுகிறார். அவருக்கு இன்னும் சில சிக்கல்கள் இருக்கிறது என்றும் பாம்பு சீட்டு எடுத்து போட்டிருப்பதால் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் கிளி கணித்துள்ளது.
அவர் வருவது கஷ்டம்தான் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வருவாரா
விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாக இருக்கிறது.விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, சிவன் பார்வதியுடன் இருக்கும் சீட்டினை கிளி எடுத்து போட, விஜய் தற்போது அரசியலுக்கு இப்போதைக்கு வரமாட்டார்,ஆனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தி விஜய் தான் என கிளி சீட்டெடுத்திருப்பதாக சொல்கிறார். திரைப்பட உலகில் இன்னும் அதிக பிரபலமாக இருப்பார் என்று ஜோதிடர் கூறுகிறார். அப்பா பிள்ளைகள் பிரச்சினை முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை
இதுபோல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அண்ணாமலையார் படமும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாகூராண்டவர்,ஐயப்பன் என இரண்டு சீட்டுகள் எடுத்துக்கொடுத்திருக்கிறது கிளி,

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் இப்போதைக்கு முதல்வராக வாய்ப்பு இல்லை என்றும், மு.க ஸ்டாலின் அடுத்த தேர்தலிலும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார் கிளி ஜோதிடர். உதயநிதி ஸ்டாலின் இன்னும் திரைத்துறையில் சாதிப்பார் என்றும் கூறியுள்ளார் கிளி ஜோதிடர்.

எச். ராஜா யாரென்று தெரியாது
எச்.ராஜாவுக்கு சீட்டு எடுத்து பார்க்க சொல்லி கேட்கிறார்,ஆனால் எச்,ராஜா என்பவர் யாருன்னே தெரியாது என்கிறார் கிளி ஜோசியர் ராஜூ. பாஜக தலைவர்,டிவில எல்லாம் பேசுவார் என சொல்லியும் கடைசி வரை தெரியாது என்று சொல்லிவிட்டார். தமிழகத்தின் முன்னணி பிரபங்களுக்கு பார்த்த இந்த கிளி ஜோசியம் வீடியோ வைரலாகி வருகிறது y
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications