• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்ன ஆச்சு சசிகலாவுக்கு.. தனித்து விடப்பட்டுள்ளாரா.. யாருமே சந்திக்கவில்லையே.. மயான அமைதியா இருக்கே?

|

சென்னை: சசிகலாவுக்கு முன்பிருந்ததை போல தாக்கம் அவ்வளவு இல்லை என்ற ஒரு பேச்சு எழுந்து வருகிறது.. சிறைக்கு செல்வதற்கு முன்பு இருந்த சசிகலா வேறு, சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா வேறு.. அவரது செல்வாக்கு தற்போது இல்லை என்ற பேச்சும் கூடவே சேர்ந்து கிளம்பி உள்ளது.. இது உண்மையா?

சசிகலா ஜெயிலில் இருந்து வெளி வருவதற்கு முன்னமேயே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்.. இதோ இன்னைக்கு வருகிறார், இந்த தேதியில் ரிலீஸ் ஆகிறார் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.. அந்த பரபரப்பிலேயே அதிமுகவை அமமுக வைத்திருந்ததும் உண்மை.

அதேபோல டிஸ்சார்ஜ் ஆகி ரிசார்ட்டுக்கு சென்றதில் இருந்து, அந்த ஒரு வார காலத்துக்கு இதே பரபரப்பு நீடித்தது.. ரிசார்ட் வாசலில் இருக்கும் இரும்பு கேட்டை தொண்டர்கள் கும்பிட்டு கொண்டிருந்த அதிசய நிகழ்வைகூட நாம் கண்ணால் பார்த்தோம்.

நாளைக்கு இருக்கு.. செம அறிவிப்பு.. தயாராகும் முதல்வர்.. ஆனால் "அவர்" முன்கூட்டியே ஊகித்து விட்டாரா!!

தொண்டர்கள்

தொண்டர்கள்

அதனால் சசிகலா சென்னைக்கு வரும் அதிமுகவே அதகளப்படுத்திவிடுவார், எனவே, அவரை எந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எதிர்கொண்டு வரவேற்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து எழுந்தது.. அதற்கேற்றபடி, "நீங்க வேணும்னா பாருங்க, சசிகலாவை வரவேற்க சென்னையின் எல்லைக்கே ஓபிஎஸ் வந்துவிடுவார்" என்று டிடிவி தினகரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிய செய்தியும் உண்டு.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.. ஒருத்தரும் சத்தமில்லாமல் இருக்கிறார்கள்.. மாறாக, சசிகலாவுக்கு எதிராக பேட்டி தருவதும், டிஜிபி ஆபீசில் புகார் தருவதும், டிடிவியை சீண்டுவதும் என அதிமுக தலைமை இயங்கி வருகிறது.. யாருமே சசிகலா பேச்சை இதுவரை எடுக்கவுமில்லை.. தி.நகர் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை.. அப்படியானால், சசிகலாவின் வருகை பெரிய தாக்கம் இல்லையோ என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.

ஏற்பாடு

ஏற்பாடு

அன்றைக்கு 23 மணி நேர வரவேற்பு என்பது தினகரனால் கிடைத்தது.. அவர்தான் அத்தனை ஏற்பாட்டையும் முன்னின்று செய்தார்.. வரவேற்க திரண்டவர்கள் மத்தியில் சசிகலா பாசம் தென்பட்டது என்னவோ உண்மை.. பனியில் இரவெல்லாம் காத்திருந்து ஆவலுடன் வரவேற்ற அன்புள்ளங்களும் இருக்கத்தான் செய்தன.. ஆனால், அவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் இல்லை. எனவேதான் சசிகலாவுக்கு மவுசு குறைந்துவிட்டதோ என்ற கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன.

பிளான்

பிளான்

ஆனால் இதை பற்றி வேறு சில விஷயங்களும் கசிந்து வருகின்றன.. சசிகலா பயங்கரமான பிளானில் இருக்கிறார்.. தன்னுடைய மூவ்கள் வெளிப்படையாக தெரியாதவாறு பார்த்து கொள்கிறார்.. இப்போது அதிமுக அரசு ஓடிக் கொண்டிருக்கிறது.. இன்னும் 10, 15 நாளில் அதாவது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இந்த பிப்வரியுடன் அதிமுகவின் அதிகாரம் மெல்ல மெல்ல குறைய தொடங்கவிடும். அநேகமாக அது காபந்து அரசாக நடக்கும்.

 முழு அர்த்தம்

முழு அர்த்தம்

அப்படிப்பட்ட சூழலில்தான், உண்மையான விசுவாசிகள், ஆதரவு விசுவாசிகள் யார் யார் என்பது தெரியவரும்.. ஸ்லீப்பர் செல்கள் என்று ஆளாளுக்கு சொல்லி கொண்டிருப்பதன் முழு அர்த்தம் அப்போதுதான் வெளிப்படும்.. அதுவரை சசிகலா தரப்பு பொறுமை காக்கும் என்கிறார்கள்.. இதற்கு நடுவில் மோடி வர போகிறார்.. 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் வர போகிறது.. அன்றைய தினங்களில் ஏதேனும் ஒன்றிரண்டு செயல்கள் அரங்கேற வாய்ப்புள்ளது.. மற்றபடி பிப்ரவரி முடியும்வரை கப்சிப் தான்..

பொறுமை

பொறுமை

அதுவரை சசிகலாவும் அமைதியாக இல்லை.. அனைத்தையும் கவனித்து வருகிறார்.. தன்னை வரவேற்க அதிமுக தரப்பில் யாரும் வராமல் போனது அவருக்கு ஷாக்தான் என்றாலும், பொறுமையை கடைப்பிடித்து வருகிறார், அவசரத்தை காட்டாமல் கட்சியின் அடித்தளத்தை ஸ்ட்டிராங் ஆக மாற்றி கொண்டிருக்கிறார் என்கிறார்கள்..!

 
 
 
English summary
When Sasikala starts her Political Move
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X