முதல்வர் சொன்னதை கவனிச்சீங்களா.. சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெள்ள நிவாரணம்.. எப்போது?
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நிவாரணத் தொகை கேட்டு 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்றும் அவர்களின் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு உரிய வகையில் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த டிசம்பரில் வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப்பு மிக கடுமையாக இருந்தது. தரைத்தளத்தில் இருந்த அத்தனை வீடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை மாநகரமே வெள்ளம் வடியும் வடிகால்கள் போல், காட்டாறாக தண்ணீர் ஓடியது. சென்னையின் ஆற்றுப்பகுதிகளில் மட்டுமல்லாமல், எல்லா பகுதிகளிலும் வெள்ளம் சீரிப்பாய்ந்தது. பள்ளிக்கரணை, கோவிளம்பாக்கம்,பெரும்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், பெருங்குடி, முடிச்சூர், கீழ்கட்டளை உள்ளிட்ட தென்சென்னையின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

எண்ணூர் முதல் தண்டையார்பேட்டை வரை, கொளத்தூர் முதல் அம்பத்தூர், அண்ணா நகர் வரையிலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வெள்ளத்தால் வடசென்னையும் முழுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு முழுமையாக சரியாக ஒரு வாரத்திற்கு மேல் ஆனது. சென்னையில் வெள்ளபாதிப்பை சந்தித்த மக்களுக்கு 6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் கார்டு வைத்துள்ள அரிசி அட்டை கார்டுகள் அனைத்திற்கும் வெள்ள நிவாரணம் உடனடியாக ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. சர்க்கரை கார்டுகள் மற்றும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வங்கி கணக்கில் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்கான விண்ணப்பங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. மொத்தம் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை பெரம்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், " நம் நாடு என்பது பல்வேறு மதத்தை பின்பற்றும் மக்கள் ஒற்றுமையுடன் வாழும் நாடு. எல்லா மதமும் அன்பை மட்டும்தான் வலியுறுத்துகிறது. எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பது இல்லை. நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் சகோதரர்களாக இருக்கிறோம். இந்த ஒற்றுமை உருவாக நாம் கூடி இருக்கிறோம். ஆனால் இந்த ஒற்றுமை உருவாகுவதை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
அரசியல் லாபங்களுக்கு மத ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஒற்றுமையும், நல்லிணக்கமும் ஏற்பட பாடுபடுகிற தி.மு.க.வையும் அந்த வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பிரிவு மக்களும் அமைதியாக, நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய் தவிக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த கூட்டத்தால் இந்த மண்ணில் நிச்சயம் வெற்றி பெற முடியாது.
அண்மையில் சென்னை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மழைவெள்ளம் வந்தபோது, மக்கள் எல்லோருக்கும் அரசின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினோம். மழைவெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தோம்.
இதை அறிவித்து 2 வாரங்களுக்கு கொடுத்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. நான் இங்கே வரும் போது அதிகாரிகளிடம் தொலைபேசியில், சென்னை மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தில் எவ்வளவு பேருக்கு இருப்பு இருக்கிறது என்று கேட்டேன். 98 சதவீதம் பேருக்கு கொடுத்துவிட்டோம் என்று சொன்னார்கள். எங்களுக்கு கிடைக்கவில்லை என்று 5 லட்சம் பேர் கோரிக்கை வைத்துள்ளார்கள். அந்த கோரிக்கையும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு உரிய வகையில் இந்த நிவாரண தொகை வழங்கப்படும் என்று உறுதியாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications