"குலுங்குது" சென்னை.. அவசர அவசரமாக கிளம்பிய புள்ளிகள்.. ஓபிஎஸ் திடீர் அழைப்பு.. யார் அந்த வேட்பாளர்?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த ஓபிஎஸ் தயாராகி வருவதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி, வரப்போகும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகிவரும் நிலையில், ஓபிஎஸ்ஸும் கோதாவில் குதித்துள்ளார்.. இதுகுறித்த சில தகவல்களும் இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

ஓபிஸ்ஸை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு தொகுதியில் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை என்றே சொன்னார்கள்.. இரட்டை இலை இல்லாத சூழலில், போட்டியிட்டாலும் பெரிதாக பலன் கிடைக்காது என்றே நினைத்தாராம்.

மேலும் கொங்குவில் பெரிதாக செல்வாக்கும் இல்லாத சூழலில், இடைத்தேர்தலை, அமைதியாக கடந்து சென்றுவிடலாம் என்றுகூட முடிவெடுத்தாராம்.

அலர்ட்

அலர்ட்

அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி தரப்பு, திமுக கூட்டணியுடன் மோதி, எப்படியும் தோல்வியை சந்திக்க நிறைய வாய்ப்புள்ளதால், தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும், ஒருவேளை கூட்டணியான தமாகாவுக்கு தொகுதியை ஒதுக்க நேர்ந்தால், தாமும் தன் பங்குக்கு வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்துவிட்டு சென்றுவிடலாம் என்றும் கணக்கு போட்டாராம். ஆனால், அரசியல் கிளைமேட் டக்கென மாறிவிட்டதால், ஓபிஎஸ் தரப்பு அலர்ட் ஆகிவிட்டதாம்.. சின்னம் இல்லாமல், தமாகா போட்டியிட தயக்கம் காட்டுவதாகவும், அந்தவகையில் எடப்பாடி தரப்பே நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் கசிந்தபடியே இருந்தன.

 ஜஸ்ட் 12%

ஜஸ்ட் 12%

இப்படிப்பட்ட சூழலில்தான், "எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை நிறுத்தினால், அதற்கு மாற்றாக, நாமளும் வேட்பாளரை நிறுத்தியே ஆக வேண்டும், போட்டியிடாமல் போனால், நம்மை பலவீனமாக நினைத்துவிடுவார்கள்" என்று ஓபிஎஸ் தரப்புக்கு எடுத்து சொல்லப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, கொங்கு சமுதாய ஓட்டுக்கள் எடப்பாடிக்கு கிட்டத்தட்ட 12 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், பிற சமூகத்தினரின் ஓட்டுக்களை எளிதாக பெறலாம் என்றும் ஓபிஎஸ் டீம் யோசிக்கிறதாம். அதாவது, "முதலியார்" வேட்பாளர் ஒருவரை, இடைத்தேர்தலில் முன்னிறுத்தினால், கொங்கு அல்லாதவர்களின் வாக்குகளை அள்ள முடியும் என்பதே ஓபிஎஸ் போடும் கணக்காக இருப்பதாக கூறப்படுகிறது.

கேவிஆர்

கேவிஆர்

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கேவி ராமலிங்கம் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.. எனவே, இடைத்தேர்தலில் அதிமுக நேரடியாகவே போட்டியிடுவதால் ஓபிஎஸ்ஸும் தன்னுடைய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்... ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டது... இதன்படி ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சென்னைக்கு விரைந்துள்ளனர்..

 முதலியார்

முதலியார்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடுவதால் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.. இது தொடர்பாக ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அநேகமாக ஓபிஎஸ் தரப்பில் தேர்வு செய்யப்படும் வேட்பாளர், முதலியார் சமூக வேட்பாளராக இருக்க நிறைய சான்ஸ் இருப்பதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை இந்த அடிப்படையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, அதன்மூலம் எடப்பாடிக்கு நெருக்கடியை உண்டுபண்ணாலும், ஓபிஎஸ்-க்கு 2 விதமான சிக்கல்கள், ஈரோடு கிழக்கில் காத்துள்ளதாக சொல்கிறார்கள்.

 நிறைய புள்ளி

நிறைய புள்ளி

கட்சியின் முழு ஆதரவை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே சின்னம் இல்லாமல் ரிஸ்க் எடுக்கும்போது, ஓபிஎஸ் போட்டியிடும் சின்னம் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. இரண்டாவதாக, தன்பக்கமிருக்கும் மொத்த புள்ளிகளையும் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் எடப்பாடி பழனிசாமி இறக்கிவிட திட்டமிட்டுள்ளபோது, ஓபிஎஸ் எப்படிப்பட்ட பிரச்சாரத்தை கையில் எடுக்க போகிறார்? திமுக இல்லாவிட்டாலும், எடப்பாடி வேட்பாளரை எதிர்க்கக்கூடிய அளவுக்கு பிரச்சாரம் காட்டமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 மெகா சிக்கல்

மெகா சிக்கல்

அதைவிட முக்கியமாக, பாஜக தனித்து போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.. ஒருவேளை அப்படி தனித்து போட்டியிட நேர்ந்தால், ஓபிஎஸ் என்ன செய்வார்? தன் தரப்புக்கு வேட்பாளரை நிறுத்தி உள்ள சூழலில், பாஜகவுக்கு தன் ஆதரவை முழுமையாக தர முடியாத நிலையே ஏற்படும்.. அல்லது பாஜக போட்டியிடாமல், அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக மட்டுமே வைத்துக் கொண்டாலும், எந்த அதிமுகவுக்கு ஆதரவு தரும்? ஓபிஎஸ் நிறுத்த போகும் வேட்பாளருக்கா? எடப்பாடி நிறுத்த போகும் வேட்பாளருக்கா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!

 டபுள் இலை

டபுள் இலை

இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இடைத்தேர்தலில் அமமுக சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுகவை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்... ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்" என்று தன் கருத்தை தெரிவித்துள்ளார்.. எனினும், இடைத்தேர்தல் விவகாரத்தில், ஓபிஎஸ் சைலண்ட்டாக காய்நகர்த்தி வருவது எடப்பாடி ஆதரவாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா? அப்படி போட்டியிட்டால், ஓபிஎஸ் எந்தமாதிரியான முட்டுக்கட்டையை போடுவார்? என்ற கிலியும் எடப்பாடி கூடாரத்தை தொற்றிக் கொண்டுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+