சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முடிஞ்சிடுச்சோ".. கரெக்ட்டா வந்துட்டாரே.. "நீலமலை"யில் மொட்டுவிடும் தாமரை! ஸ்பீடா ரெடியாகுதா திமுக?

எல்.முருகன் நீலகிரியில் போட்டியிட போவதாக செய்திகள் கசிந்து கொண்டேயிருக்கின்றன

Google Oneindia Tamil News

சென்னை: நீலகிரி தொகுதியில் பாஜக விழுந்து விழுந்து களப்பணி செய்து கொண்டிருப்பதை பார்த்தால், நீலகிரி மலையிலேயே தாமரை மலர்ந்துவிடும்போல் உள்ளது.. அந்த வகையில், பலரது கவனத்தையும், தமிழக பாஜக ஈர்த்து கொண்டிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளை கேட்பது என்று பிளான் வைத்திருக்கிறார்களாம்.. அதில், ஐபி ரிப்போர்ட்படி பாஜகவுக்கு சாதகமானது மொத்தம் 10 தொகுதிகள் என்கிறார்கள்.

அதற்கான வேட்பாளர்கள் லிஸ்ட்டும் 3 மாதங்களுக்கு முன்பேயே ரெடியானதாக சொல்கிறார்கள். இந்த பேச்சு வரும்போதே, நீலகிரி தொகுதியில் எல்.முருகன், இந்த முறை போட்டியிட போவதாக பேச்சு அடிபட்டது.

விபி துரைசாமி

விபி துரைசாமி

ஆனால், எல்.முருகன் பெயர் அடிபட்டபோதே, இவருக்கு போட்டியாக விபி துரைசாமியின் பெயரும் அடிபட்டது.. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய மகனுக்கு கெங்கவல்லி தொகுதியை கேட்டிருந்தார் துரைசாமி.. ஆனால், அது கிடைக்கவில்லை.. எனவே, இந்த முறையாவது தன்னுடைய மகனுக்காக நீலகிரி தொகுதியை தர வேண்டும் என்று கேட்டு வருவதாக தகவல் கசிந்தது.. எல்.முருகனும் துரைசாமியும் தெலுங்கு பேசும் அருந்ததியர்கள் ஆவார்.. அத்துடன் இருவருமே ஒருவகையில் உறவினரும்கூட. அதனால், நீலகிரியை யாருக்கு தருவது என்று மேலிடம் குழம்புவதாக சலசலக்கப்பட்டது.

கன்பார்ம்டு

கன்பார்ம்டு

இந்த சலசலப்பெல்லாம், சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் நட்டா, கோவை வந்தபோதே உதிர்ந்துபோய்விட்டது.. அப்போது மேடையில் பேசிய நட்டா, கோவை, நீலகிரியில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று கூறியிருந்தார். இணை அமைச்சர் எல் முருகன் நீலகிரியில் கவனம் செலுத்தி வருகிறார் என்று அண்ணாமலையும் கூறியிருந்தார்.. எனவே, எல்.முருகன் நீலகிரியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அப்போதே சமிக்ஞைகள் தென்பட்டன. அதிமுக, திமுக என இரு கட்சிகளும் மாறி மாறி நீலகிரியை கைப்பற்றினாலும், பாஜகவும் ஓரளவு வலுவாகவே உள்ளது..

வித்துடுங்களேன்

வித்துடுங்களேன்

கடந்த முறையே நீலகிரியை கேட்டு வாங்கியது பாஜக.. அதற்கு பிறகு, தொடர்ச்சியான களப்பணிகளையும் மேற்கொண்டு வந்தது.. சமீபத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்திலும் அண்ணாமலை பங்கேற்று, இதனை உறுதி செய்திருந்தார். "உங்களால் டேன் டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால், பேசாமல் அதை மத்திய அரசுக்கு விற்றுவிடுங்களேன்" என்று அதிமுகவையும் சேர்த்து அண்ணாமலை சீறியிருந்ததும், மொத்த திராவிட கட்சிகளையும் கடுப்பாக்கியிருந்தது. அத்துடன், நீலகிரியை பாஜக யாருக்கும் இந்த முறை விட்டுத்தராது என்பதும் நிரூபணமானது.

ஹெத்தையம்மா

ஹெத்தையம்மா

இப்போது விஷயம் என்னவென்றால், நீலகிரியில் எல்.முருகன்தான் போட்டியிட போகிறார் என்பது இன்னும் கன்பார்ம் ஆகி உள்ளது.. காரணம், நீலகிரி மாவட்டத்தில், 14 கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடந்து வருகிறது... இதில் மூலஸ்தானமாக விளங்குவது கோத்தகிரி பேரகனி ஹெத்தையம்மன் திருவிழாவாகும்.. இந்த திருவிழாவில் காணிக்கை செலுத்துவது என்பது மிக மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.. இந்த விழாவுக்குதான், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன் வள துறை இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். . அங்கு அவருக்கு படுகர் இனத்தின் பாரம்பரியமான டிரஸ் அணிவிக்கப்பட்டது. அப்போது மக்களின் பாரம்பரியமாக விளங்கும் காணிக்கை கட்டும் நிகழ்ச்சியிலும் முருகன் பங்கேற்று காணிக்கை செலுத்தினார்.

பெரிய லிஸ்ட்

பெரிய லிஸ்ட்

இப்படி, காணிக்கை செலுத்துவது என்பது சாதாரண நிகழ்வு கிடையாது.. பொதுவாக, நீலகிரி தொகுதியில் எம்பி, எம்எல்ஏ, பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள், தேர்தலுக்கு முன்பாக, இப்படித்தான், இந்த ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு நேரடியாக பங்கேற்று காணிக்கை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.. இப்படித்தான் இதற்கு முன்பு எம்பி பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாஸ்டர் மாதன், திமுகவின் ஆ.ராசா, ராமச்சந்திரன், அதிமுகவின் புத்திசந்திரன் என பலரும் இங்கு வந்துதான் காணிக்கை செலுத்திவிட்டு சென்றுள்ளனர்..

வோட் பேங்க்

வோட் பேங்க்

அந்தவகையில், இப்போது எல்.முருகனும் வந்துள்ளதால், பாஜக சார்பில் முருகன்தான் போட்டியிட போகிறார் என்பது கிட்டத்தட்ட கன்பார்ம் போலவே தெரிகிறது. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன.. சட்டப்பேரவைத் தேர்தலில் ஊட்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போஜராஜன் சுமார் 5,300 ஓட்டு வித்தியாசத்தில்தான், காங்கிரஸ் வேட்பாளர் கணேஷிடம் கடந்த முறை தோற்றுப்போனார். அதனால், மலைவாழ் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதாக அளவுக்கு அதிகமாகவே நம்புகிறாராம் எல்.முருகன்.

கணிக்கும் கணக்கு

கணிக்கும் கணக்கு

அதுமட்டுமல்ல, எல்.முருகன். நீலகிரி தொகுதியின் சிட்டிங் எம்பி-யான ஆ.ராசா சமீபத்தில், இந்து மதம் குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததால், நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.. மேலும், இந்து அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய இந்தப் போராட்டத்திற்கு பெரும்பாலான இடங்களில் பொதுமக்களின் ஆதரவும் கிடைத்தது.. இதுவும் எல்.முருகனுக்கு புது தெம்பை தந்திருந்ததாம்.. இதையெல்லாம் கணக்கு போட்டுத்தான், நீலகிரி மலைக்கே, வலையை விரித்துள்ளார் முருகன் என்கிறார்கள்.. அப்படியானால், ஆ.ராசா என்ன செய்ய போகிறார்? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!

English summary
Where is DMK A Raja going to compete and Is L Murugan contesting from Nilgiris constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X