Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல சாமியார் நித்யானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பரபரப்பை கிளப்பினார். தனது கைலாசா எங்கே உள்ளது என்பது குறித்து வாய் திறக்காமல் இருந்த நித்யானந்தா, தற்போது முதல் முறையாக கைலாசா அமைவிடம் என ஆப்பிர்க்க நாட்டில் உள்ள ஒரு பகுதியை அறிவித்து முகவரியையும் வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் பிரபல சாமியார் நித்யானந்தா. இவர் மீது பாலியல் வன்கொடுமை, குழந்தை கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கர்நாடகா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நித்யானந்தா தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்படார்.

Nithyananda Kailasa

வீடியோ வெளியிட்டார் நித்யானந்தா

இதையடுத்து யாருக்கும் தெரியாமல் நாட்டை விட்டு எஸ்கேப் ஆன நித்யானந்தா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்பொது வீடியோ வெளியிட்டு வருகிறார். மேலும், கைலாசா என்ற தனி நாட்டை இந்துக்களுக்காக உருவாக்கி இருப்பதாகவும் கூறி அதிர வைத்தார். அதோடு நிற்காமல், கைலாசாவுக்கு என தனி கொடி, நாணயம், வெளிநாட்டு தூதர்களுடன் சந்திப்பு என அவ்வப்போது நித்யானந்தா தரப்பில் இருந்து வெளியாகும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன.

தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அங்கு நித்யானந்தா இருப்பதாகவும் தகவல் வெளியானாலும் நித்யானந்தா தரப்பில் கைலாசா பற்றி மூச்சுகூட விடவில்லை. கைலாசா குறித்த வேடிக்கையான பதிவுகளும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், கைலாசா எங்கு இருக்கிறது என்று பல ஆண்டுகள் கழித்து நித்யானந்தா வாய் திறந்துள்ளார். கைலாசாவின் தூதரக முகவரி என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நல்ல நேரம் பிறந்தாச்சு

நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில், "மேற்கு ஆப்பிரிக்கா அருகே அட்லாண்டிக் பெருங்கடலோரம் கினி பிசாப்பில் கைலாசாவின் தூதரகம் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சமூக, கலாசார, பொருளாதார ரீதியாகவும், மன, உடல் ரீதியாகவும் நீங்கள் துன்புறுத்தப்பட்டது போதும். நல்ல நேரம் பிறந்து விட்டது. வாருங்கள், கைலாசாவில் தஞ்சம் புகுங்கள். இப்போது கைலாசாவின் தூதரக முகவரி கிடைத்துவிட்டது.

கைலாசா நாட்டின் தூதரகம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறி புதிய பரபரபை கிளப்பியிருக்கிறார் நித்யானந்தா. மேலும்,கைலாசா நாட்டின் தூதரக தலைமையகம், அமில்கர் கேப்ரல் அவென்யூ, கினி-பிசாவ் என்ற முகவரியில் செயல்படுவதாக அந்த வீடியோவில் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கைலாசாவின் அமைவிடம் என்று நித்யானந்தா கூறியிருக்கும் கினி-பிசாவ் குடியரசு என்பது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான கினி பிசாவில் நித்யானந்தா குடியேறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு நாட்டை எப்படி

அதே நேரத்தில் இன்னொரு நாட்டை தனது கைலாசா நாட்டின் தூதரகமாக அறிவித்து இருப்பது வெறும் வாயில் அவல் கிடைத்தது போல நெட்டிசன்களுக்கு விவாதப்பொருளாக சிக்கியுள்ளது. புதுச்சேரி கைலாச தியான பீடம் கும்பாபிஷேக விழாவில் நித்யானந்தா பங்கேற்க இருப்பதாகவும் அதற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் புதுவை அரசிடம் அண்மையில் நித்யானந்தா தரப்பினர் மனு அளித்து இருந்த நிலையில், தனது நாட்டின் முகவரி என்று வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நித்யானந்தா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+