உங்க பார்வைக்கு சவால்.. படத்தில் காலியான ”கப்” எங்க இருக்கு? 4 செகண்ட் டைம்.. கண்டுபிடிங்க
சென்னை: இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காலியான கப் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். படம் முழுக்க கப்கள் குவிந்து இருக்கும் நிலையில் எல்லாவற்றிலும் எதாவது நிரம்பி இருக்கிறது. ஒரே ஒரு கப் மட்டும் காலியாக இருக்கிறது. அது எங்கே என 4 செகண்டில் கண்டுபிடித்து சொல்லுங்கள். இதுவே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும்.
மாயாஜால படங்கள் என்று சொல்லப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு இருக்கின்றன. பொழுது போக்கு மட்டும் இன்றி ஒருவரின் சிந்திக்கும் திறனை தூண்டுவதனால் இதுபோன்ற இல்யூஷன் படங்கள் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. பலரும் இந்த படங்களுக்கு நம்மால் விடையை கண்டுபிடிக்க முடிகின்றதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன்
ஒருவர் அந்த படத்தினை பார்க்கும் கோணம், அணுகும் முறை எப்படி என்பதை வைத்து அவரது சிந்திக்கும் திறனானது பார்க்கப்படுகிறது. விடையை தேடுவதனால் அவர்களுக்குள் தேடல் திறன் அதிகரிக்கிறது. விடையை கண்டுபிடிக்கும் போது அவர்களுக்கு மனப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால் பலரும் ஓய்வு நேரங்களில் இது போன்ற படங்களை பார்த்து விடையளித்து வருகிறார்கள்.
ஒருசிலர் தன்னால் கண்டுபிடிக்க முடிந்தால், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அந்த படத்தை பார்வேர்ட் செய்து அவர்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா என்று சோதித்து பார்க்கின்றார்கள். இதனால் இந்த படங்கள் அதிகம் இணையத்தில் பரவுகின்றன. அதுபோக இத்தகைய இல்யூஷன் புதிர் படங்கள் தற்போது போட்டித் தேர்வுகளிலும் கேட்கப்படுகின்றன. இதனால் இளைஞர்கள் பலரும் ஆப்டிகல் புதிர் படங்களை பார்த்து விடையளித்து வருகிறார்கள்.
காலியான கப் எங்கே?
இன்று ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் அதிகம் பரவி, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தில் நிறைய கப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படம் முழுக்க கலர் கலராக பல வண்ணங்களில் கப்களாக இருக்கும் நிலையில், ஒவ்வொன்றிலும் திட மற்றும் திரவ பொருட்கள் நிறைந்து இருக்கிறது உங்கள் கண்களுக்கு தெரியலாம்.
ஆனால் படத்தை ஒருமுறை பார்த்த பின்னரும், உங்கள் கண்களுக்கு தெரியாத வகையில் ஒரே ஒரு கப்பில் மட்டும் எந்த பொருளும் இல்லாமல் காலியாக உள்ளது. காலியாக உள்ள அந்த கப் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான இன்றைய சவால் ஆகும். அதுவும் 4 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன போட்டிக்கு தயாரா?
4 செகண்ட் டைம்
உங்களுக்கான டைம் தொடங்கியது. 1.. 2.. 3. . 4. ஓக்கே டைம் ஓவர். என்ன விடையை கண்டுபிடிக்க முடிந்ததா. குறிப்பிட்ட 4 செகண்டுக்குள் விடையை கண்டுபிடித்தால் உங்களுக்கு பாராட்டுக்கள். உங்கள் பார்வை பருந்துப் பார்வை தான். உங்கள் பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது.
ஆனால் இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லையே என்பவர்கள் வருத்தப்பட வேண்டாம். இன்னும் கூடுதலாக டைம் எடுத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை தேடிப்பாருங்கள். ஆனால் இப்போது கூட எங்கள் கண்களுக்கு காலியான கப் இருக்கும் இடம் தெரியவில்லையே என்று சொல்பவர்களுக்கு ஒரு டிப்ஸ் தருகிறோம்.
சூப்பரான டிப்ஸ்
இந்த டிப்ஸை உங்களிடம் சொன்னால் நீங்கள் விடையை கண்டிப்பாக கண்டுபிடித்துவிடுவீர்கள். அதாவது படத்தின் இடது புறம் ஓரம் மட்டும் உற்று பாருங்கள். அட.. ஆமா. இங்கே தான் இருக்கிறதா என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. உங்களுக்கு பாராட்டுக்கள். 100க்கு 99 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள். இருப்பினும் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலும் விடை குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications