"லவ் லெட்டர்" மாதிரி தர்றாரே எடப்பாடி.. லீக்காகும் "ரகசியம்".. ஒரிஜினல் கோமாளி.. சொல்றது யார் பாருங்க
சென்னை: "ஆளுநரிடம் ஒரு புகார் தந்தால், அந்த குற்றச்சாட்டுக்கு முதலில் முகாந்திரம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், பிறகு அந்த புகாருக்கான ஆதாரங்களை திரட்ட வேண்டும்.. அதற்கு பிறகுதான் ஆளுநரிடம் புகார்களை தர வேண்டும்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு லவ் லட்டரை தருவதுபோல, திமுக மீது புகார் சொல்லி கடிதம் தந்துவிட்டு வந்துள்ளார்" என, திமுகவின் செய்தி தொடர்பாளர் சிவ ஜெயராஜ் விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
ஆளும் திமுகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலையும் அப்போது வாசித்திருக்கிறார்.
"சங்கி" பழனிசாமி.. ஆஹா 4 பேர்.. ஒரே குட்டைதான்.. சிங்கிளாகவே "சிக்ஸர்" அடிக்கும் திமுக: சிவ ஜெயராஜ்

ஸ்பெஷல்ஸ்
அரசியல்ரீதியாகவும் இந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.. இந்நிலையில், திமுக-வின் செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜ் நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. எடப்பாடி பழனிசாமி எதற்காக ஆளுநரை சந்தித்து பேசியிருப்பார் என்ற கேள்வியை, அவரிடம் நாம் முன்வைத்தோம்.. அதற்கு சிவ ஜெயராஜ் நம்மிடம் பகிர்ந்து கொண்டு கருத்துக்கள்தான் இவை:

கூத்து கூவத்தூர்
"கூவத்தூரில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை எம்எல்ஏக்களுக்கு கொடுத்து முதலமைச்சரானார் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவின் ஜேசிடி பிரபாகரனே சொல்லியிருக்கிறார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணை தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ், "கூவத்தூர் ரகசியத்தை வெளியிடுவேன்" என்கிறார்.. இப்படி எடப்பாடி மீது அவங்க கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் உள்ளபோது, திமுகவை குறை சொல்ல, ஊழல் செய்த எடப்பாடிக்கு தார்மீக அருகதையே கிடையாது..

ரத்தபாசம்
இந்தியாவிலேயே, எந்த ஒரு முதல்வர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் பரிந்துரை செய்ததே கிடையாது.. அப்படி ஒரு உத்தரவை பெற்றவர் இந்த எடப்பாடி.. உடனே சுப்ரீம்கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கி கொண்டு, 4 வருடம் முதல்வராக இருந்தார். இவருக்கு ஊழல்பற்றி பேச தகுதி இல்லை.. இது சாத்தான் வேதம் ஓதுவதை போல இருக்கிறது.. ரத்த பந்தத்திற்கு டெண்டர் தரக்கூடாது என்று சட்டமே உள்ளது.. அப்படியிருந்தும் சம்பந்திக்கு டெண்டர் தந்தவர் இந்த எடப்பாடி பழனிசாமி..

சாத்தான் வேதம்
இதே எடப்பாடி மீது, முழு ஆதாரங்களுடன் 2020 பக்கத்துக்கு ஊழல் புகாரை ஆளுநரிடம் திமுக அன்று தந்தது.. பாமகவும் இதுபோல ஆதாரங்களுடன் எடப்பாடி பழனிசாமி மீது 3000 பக்கத்துக்கான புகாரை ஆளுநரிடம் தந்தது.. ஆனால், எடப்பாடி பழனிசாமி, என்னமோ லவ் லட்டர் தருவதுபோல, ஆளுநர்கிட்ட ஒரு கடிதம் தந்துட்டு வந்திருக்கார்.. லவ் லட்டரில்தான் ஆதாரங்கள் எதையும் தர மாட்டாங்க.. ஒரு ஊழல் குற்றச்சாட்டை சொன்னால், ஆதாரம் தரணும் இல்லையா? திமுக மீதான ஆதாரங்களை எடப்பாடி பழனிசாமி ஏன் தரவில்லை?

கிருஷ்ணசாமி
இவர் ஏன் ஆளுநரை சந்தித்தார் தெரியுமா? வித்யாசாகர் என்ற ஆளுநர் இருந்தாரே, அவர் ஓபிஎஸ் - எடப்பாடியின் கைகளை இணைத்து வைத்து விட்டு போனார்.. இப்போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், தன்னையே பொதுச்செயலாளராக அங்கீகரிக்கும்படியும்தான் ஆளுநரை சந்தித்து விட்டு வந்துள்ளார்.. நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்கிறார் அண்ணாமலை.. அவங்க கூட்டணியில் இருக்கும் கிருஷ்ணசாமியும், நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்கிறார்.. இதுவரை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, கூட்டணியில் இருந்த காங்கிரஸோ, விசிகவோ, கம்யூனிஸ்ட்டுகளோ, இப்படி யாராவது சொல்லி இருக்காங்களா?

நிரூபணம் ப்ரூப்
நாங்கள் அனைவரும் திமுகவுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது நிரூபித்தார்கள், இப்போது ஆளும் கட்சியாக இருக்கிறபோதும் நிரூபித்து கொண்டிருக்கிறார்கள்.. ஊழல் புகார் சொல்வதானால், அடிப்படை முகாந்திரம் இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும், பிறகு ஆதாரங்களை திரட்ட வேண்டும்.. அதுக்கப்புறம்தான் புகார் சொல்லி இருக்கணும்.. நாங்க எடப்பாடி மீது புகார் சொன்னபோது, ஆதாரங்களை தந்து நிரூபித்தோமே.. அதனால்தானே சுப்ரீம்கோர்ட் சென்று இவர் ஸ்டே வாங்கினார்?

ஆண்மைத்தன்மை
ஆண்மைத்தன்மை உள்ள அரசியல்வாதியாக இருந்தால், ஒரிஜினல் அரசியல்வாதியாக இருந்தால், உங்கள் மீது வழக்கு உள்ளதாக தீர்ப்பு வந்ததுமே, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வழக்கையும் நேருக்கு நேராக சந்தித்துவிட்டு, அதுக்கப்பறம் ஆட்சியை பிடித்து முதல்வராகி இருக்க வேண்டும்.. கூவத்தூரில் ஏலம்விட்டு முதல்வரானது போலவே, இப்பவும் ஆட்சி நடக்குது என்றால் எப்படி? எடப்பாடி ஆளுநரிடம் திமுக பற்றி புகார் தந்ததுகூட எனக்கு கவலையில்லை.. காரணம், எதிர்க்கட்சி என்றாலே ஆளும் கட்சி மீது புகார்களை தரத்தான் செய்வார்கள்.. அப்படித்தான் எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும்..

ஒரிஜினல் கோமாளி
ஆனால், அரசு கொண்டுவந்த 21 தீர்மானங்களில் 4 தீர்மானங்களை ஆதரித்தவர் எடப்பாடி பழனிசாமியும், அவரது 65 எம்எல்ஏக்களும்தான்.. அப்படி நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயற்றிய தீர்மானங்களை, இந்த ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.. 156 ஏக்கரில் உள்ள ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு, 3 லட்சத்து 83 ரூபாய் நம்முடைய வரிப்பணத்தில் சம்பளத்தையும் வாங்கி கொண்டு, தமிழக மக்களுக்கு விரோதமாகவே மேடையில் பேசுகிறாரே, தமிழக மக்களுக்கான தீர்மானங்களை கிடப்பில் போடுகிறாரே, இது ஒட்டுமொத்த எம்எல்ஏக்களையும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்தும் செயல்தானே? அப்படிப்பட்ட ஆளுநரை, "சிறந்த ஆளுநர்" என்று எடப்பாடி பேட்டி தருகிறார் என்றால், எடப்பாடியை அரசியல் கோமாளி என்பதில் தப்பே கிடையாது" என்றார்.