பெட்ரோல், டீசல் வரி- மத்திய அரசின் ஓரவஞ்சனை-மாநில அரசுகளுக்கு அநீதி- அம்பலப்படுத்தும் வெள்ளை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல் டீசல் வரியில் மத்திய அரசு, எப்படியெல்லாம் மாநில அரசுகளுக்கு அநீதியை செய்திருக்கிறது என்பதை தமிழக நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்ட நிதி நிலை அறிக்கையில் இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது;

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி விதிப்பு முறையில் மத்திய அரசு மேற்கொண்ட மாற்றங்கள் அதிர்ச்சி தரக்கூடியவையாகும். 2011-12-ம் ஆண்டில் 10.4 விழுக்காடாக இருந்த மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்கள் 2019-20ம் ஆண்டின் திருத்திய மதிப்பீட்டில் 20.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த மேல்வரிகள் மற்றும் கூடுதல் கட்டணங்கள் மாநிலங்களுடன் பகிரப்படாது.

மத்திய அரசுக்கான வரி அதிகரிப்பு

மத்திய அரசுக்கான வரி அதிகரிப்பு

மத்திய அரசால் பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளின் அளவு 2014-ம் ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக கணிசமாக அதிகரித்துள்ளது. லிட்டர் ஒன்றுக்கு 2014-ம் ஆண்டு மே மாதம் 10.39 ரூபாயாக விதிக்கப்பட்ட வரிகள், 2021-ம் ஆண்டு மே மாதத்துக்குள் 32.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 216% அதிகம். மத்திய அரசுக்கான வருவாய் தரும் வரிகள் அதிகரிக்கப்படுகின்றன. ஆனால் மாநிலங்களுடன் பகிர்ந்து அளிக்க வேண்டிய மத்திய அரசின் கலால் வரியின் பங்கு பெருமளவில் குறைக்கப்பட்டுவிட்டது. மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணம் மாநிலங்களின் வருவாயைக் குறைக்கும் வகையில் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் மேல்வரி, கூடுதல் கட்டணங்கள் 2020-ம் ஆண்டு மே மாதத்தில் லிட்டர் ஒன்றுக்கு முறையே 18 ரூபாய், 21 ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதே சமயம், பெட்ரோல், டீசல் மீதான ஆயத்தீர்வை (மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியது) லிட்டர் ஒன்றுக்கு ரூ6.50 குறைக்கப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசால் விதிக்கப்படும் வரிகள், கட்டணங்கள் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ11.50; டீசல் மீது ரூ14.50 என அதிகரித்தது. மேலும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு மேல்வரியாக பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ2.50; டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ4 விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தார். இந்த வரிவிதிப்பும் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவது இல்லை.

எவ்வளவு அதிகரிப்பு?

எவ்வளவு அதிகரிப்பு?

மத்திய அரசானது கூடுதல் வருவாயை பெட்ரோல், டீசல் மீதான வரிகள், கட்டணங்கள் மூலம் பெறுகிறது. ஆனால் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய மத்திய ஆயத் தீர்வை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 2020-21ல் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ3,89,622 கோடி. 2019-20ல் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ2,39,452 கோடி. அதாவது மொத்தம் 63 விழுக்காடு அதிகம்.

ஆயத்தீர்வை பகிர்வு

ஆயத்தீர்வை பகிர்வு

மாநிலங்களுடன் பகிரவேண்டிய ஆயத்தீர்வை நிலைமை என்ன? 2019-20ல் பெட்ரோல், டீசல் மீதான ஆயத்தீர்வை மூலம் தமிழ்நாடு அரசு பெற்றது ரூ1613.13 கோடி. 2020-21-ல் பெட்ரோல், டீசல் மீதான ஆயத்தீர்வை மூலம் தமிழகம் பெற்றது ரூ837.75 கோடி மட்டுமே. பெட்ரோல்-டீசல் மீதான நிகர வரிகளில் பெரிதளவில் மாற்றம் செய்யாத மாநில அரசுகள், ஒட்டுமொத்த வரிப் பகிர்வில் குறைவான தொகையை பெற்று பாதிப்புக்குள்ளாகிவிட்டன.

ஜிஎஸ்டி இழப்பீடு

ஜிஎஸ்டி இழப்பீடு

2021-22-ல் தமிழகத்துக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு (ஜிஎஸ்டி) ரூ20,033 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 10-வது நிதிக்குழுவில் மத்திய வரிகளின் பங்கு 6.63% ஆக இருந்தது. 15-வது நிதிக் குழுவில் இது 4.07% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் சில வரிகள் மீது விதிக்கப்படும் சலுகைகளால் மாநிலங்களுக்கான நிதி அளிப்பும் குறைந்தன. 2017-18ல் மத்திய பட்ஜெட்டில் பெருநிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டது மிக முக்கியமான காரணம். கேரளா, குஜராத், உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்கள் வரி அல்லாத வருவாயாக அதிக தொகையை திரட்டுகின்றன. சுரங்கங்கள், கனிமங்கள் மீதான உரிமத் தொகை, வட்டி வரவினங்கள், அரசால் விதிக்கப்படும் கட்டணங்கள் போன்ற வரி அல்லாத வரவினங்கள் மூலம் அதிக வருவாயைத் திரட்ட வாய்ப்புகல் உள்ளன. ஆனால் தமிழகத்தில் இந்த வருவாய் ஆதாரம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இவ்வாறு வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+