கோட்டையில் ஓட்டை! யாரெல்லாம் அது? விசாரணையில் குதித்த எடப்பாடி.. பற்ற வைத்த ஓபிஎஸ்.. நடுவில் திமுக!
சென்னை: நேற்று முதல்நாள் ஓ பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டி ஒன்று அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கேம்பை அதிர வைத்துள்ளது. அவர் பேட்டியில் சொன்னதெல்லாம் உண்மையா என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறதாம்.
தெரிவித்தார்
எங்களுடன் இன்னும் பலர் இணைய போகிறார்கள். எங்களுடன் இணைய போவது யார் யார் என்பது பரம ரகசியம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவையும் டிடிவி தினகரையும் விரைவில் சந்திக்கவுள்ளேன், என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
ஓ பன்னீர்செல்வமின் இந்த பேட்டிதான் எடப்பாடி தரப்பை கிலியில் ஆழ்த்தி இருக்கிறதாம்.

விசாரணை
சமீபத்தில் சேலத்து நிர்வாகிகள் சிலர் ஓ பன்னீர்செல்வம் கேம்பிற்கு சென்றனர் . அதேபோல் எம்பி தர்மர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இன்னொரு பக்கம் ஆர்.பி உதயகுமாரின் உள்ளூர் கோட்டையில் ஓட்டை போட்டு ஐயப்பனை தன் பக்கம் இழுத்து இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். இதன் காரணமாகவே எடப்பாடி தரப்பு டென்ஷனில் இருக்கிறதாம். நேற்று திருச்சியில் கூட்டம் முடிந்து நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி இதை பற்றி விசாரித்ததாக கூறப்படுகிறது.

விசாரணை
அதிமுகவில் இன்னும் சிலர் தன் பக்கம் வர போவதாக ஓபிஎஸ் சொல்லி இருக்கிறாரே. யார் அது? யாரெல்லாம் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல போகிறார்கள்? எந்த மண்டலத்தில் நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல இருக்கிறார்கள். பரம ரகசியம் என்று சொல்கிறாரே? இது உண்மையா.. இல்லை நியூசில் பீதி கிளப்ப வேண்டும் என்று இப்படி பேசுகிறாரா என்று எடப்பாடி தரப்பு தங்களுக்கு நெருங்கிய நிர்வாகிகளிடம் விசாரணை செய்து இருக்கிறதாம்.

பணம்
அவ்வளவு செலவு செய்தோமே.. எல்லாம் எதுக்கு என்பது போல் எடப்பாடி தரப்பு டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் பொதுக்குழு உறுப்பினர்களை வளைக்க ஓபிஎஸ் முயலவில்லை. அவர்களின் பிளானே வேறு என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுக்குழு இனி ஓபிஎஸ் அனுமதி இன்றி நடக்க வாய்ப்பே இல்லை. அவரின் நோக்கம் எல்லாம் எம்எல்ஏக்களை கைப்பற்றுவதே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சின்னம்
எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தால் சின்னத்தை மீட்க முடியும். இதன் மூலம் சட்டசபையில் தாங்கள்தான் அதிமுக என்று நிருபிக்க முடியும். அதோடு எடப்பாடி பழனிசாமியின் எதிர்கட்சித் தலைவர் பதவியையும் பறிக்க முடியும். அதனால்தான் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்தாமல் எம்எல்ஏக்கள் மீது கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் இந்த மோதல் எல்லாம் நடந்து கொண்டு இருக்க நடுவில் திமுக மாட்டிக்கொண்டு உள்ளது.

நடிப்பில் மாட்டிய திமுக
அதிமுகவின் டாப் தலைகள் மாறி மாறி திமுகவை விமர்சனம் செய்து தொண்டர்கள் மத்தியில் ஸ்கோர் செய்ய முயன்று வருகின்றனர். ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் ஆளும் திமுகவிற்கு எதிராக தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சியில் திமுகவை மிக கடுமையாக தாக்கி பேசினார். இன்று காலை அமமுக டிடிவி தினகரனும் மக்கள் விரோத திமுக அரசு என்று விமர்சனம் செய்தார். நாங்கள்தான் திமுகவை கடுமையாக எதிர்ப்போம் என்பதை தொண்டர்கள் மத்தியில் நிரூபிப்பதற்காக அதிமுக, அமமுக டாப் தலைவர்கள் மாறி மாறி திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications