‘தருமம்’ தலை காக்கும்! இபிஎஸ் அணியில் ஓபிஎஸ் ஸ்லீப்பர் செல்? தகவலை கசிய விடுவது யார்? பறந்த ஆர்டர்!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் எடப்பாடி அணியில் இருந்தாலும் அவர் தரப்பில் இருந்து சில முக்கிய தகவல்களை ஓபிஎஸ் அணிக்கு யாரோ ஒரு கடலோர மாவட்ட நிர்வாகி பகிர்ந்து வருவதாகவும் அவர் யார் என விசாரிக்கும்படி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஊர்களில் இன்று நேர்வழி சென்றாள் நாளை நமதே' என்ற எம்.ஜி.ஆரின் பாடல்களை கடந்த நான்கு ஆண்டுகளாக பாடி வந்த எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது எதிர் எதிர் துருவங்களாக நிற்கின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்சி இரண்டாக உடைந்து ஓபிஎஸ் அணி. இபிஎஸ் அணி என செயல்பட்ட நிலையில் மீண்டும் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இரு அணிகளும் ஒன்றிணைந்தன. அப்போது ஆட்சி அமைக்க ஓபிஎஸ் இன் ஆதரவு தேவைப்பட்டதால் துணை முதலமைச்சர் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழங்கி உரிய முக்கியத்துவத்தை அளித்திருந்தது.

எடப்பாடி பழனிச்சாமி
பின்னர் தேர்தல் நெருங்கிய நிலையில் கால நிலவரத்தை உணர்ந்த எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் முதலமைச்சர் வேட்பாளர் பதவியை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆட்சியை இழந்த போதும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தனக்கே வழங்க வேண்டும் என உறுதியாக இருந்ததோடு தனது ஆதரவாளர்கள் வட்டத்தின் மூலமாக அதனையும் சாதித்துக் கொண்டார். அதே நேரத்தில் கடந்த முறை ஓபிஎஸ் -ன் பக்கம் 15 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்து நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அவரது மெத்தனப்போக்கு காரணமாக ஆதரவு வட்டம் சரியாக தொடங்கியது.

ஓபிஎஸ்
கிடைத்த கேப்பில் தனக்கான ஆதரவாளர்கள் எண்ணிக்கையை கட்சியில் வலுப்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக தான் வர வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஜெயக்குமார் மூலமாக அதனை வெளிப்படுத்தி பின்னர் அதில் வெற்றியும் கண்டார். தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தீவிர ஆலோசனை
தற்போது ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் என தனது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காக போராடி வருகிறார். கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் தினமும் தனது ஆதரவாளர்கள் வழக்கறிஞர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே அதிமுக பொதுக்குழு கூட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர் இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஸ்லீப்பர் செல்
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு என்ன செய்கிறது என்பதனை அறிந்து கொள்ளும் வகையில் சில ஸ்லீப்பர் செல்களை எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஓபிஎஸ் உலாவ விட்டிருப்பதாக உறுதியாக கூறுகின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள். அதாவது கடந்த காலங்களில் ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கமாக இருந்த பல்வேறு மூத்த நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பக்கம் சாய்ந்து உள்ள நிலையில் பதவிகளை கொடுத்து சரி கட்டி வருகிறார். இதனால் எடப்பாடியின் நீண்ட கால ஆதரவாளர்களாக இருந்த ஒரு சில முன்னாள் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், சிலருடன் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் தரப்பு தீவிரம்
வட மாவட்டங்கள், கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மீது அதிர்ச்சியில் இருக்கும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக இருக்கும் நிலையில் அந்தப் பணியில் எடப்பாடி தரப்பில் உள்ள ஒரு கடலோர மாவட்ட நிர்வாகி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாகவே இந்த பணியானது நடைபெற்று வருகிறது. கட்சி நிர்வாகிகள் நீக்கும் உள்ளிட்ட தகவல்கள் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையாக வெளியிடுவதற்கு முன்னரே ஓபிஎஸ் தரப்புக்கு எப்படி தெரிகிறது என்பது புரியாமல் இருக்கிறது. என்ன இருந்தாலும் சட்ட விதிகளின்படி தற்போது எடப்பாடி பழனிச்சாமி கையை ஓங்கி இருப்பதால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் தற்போது வேறு வழியின்றி எடப்பாடி தரப்பில் தங்கி உள்ளனர். ஆனாலும் விசுவாசத்தை ஓ பன்னீர் செல்வத்துக்கே காட்டி வருவதாக கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications