சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆணி வேர்".. ஒருத்தரும் அசைக்க முடியாது.. மலரபோகும் 10 தாமரை.. "மாத்தி யோசி" பாஜக.. கவனிக்கும் திமுக

சிவகங்கை தொகுதியின் பாஜக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எம்பி தேர்தலுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில், தமிழகத்தின் சில முக்கிய தொகுதிகளுக்கும் குறி வைத்துள்ளது. அதில் ஒன்றுதான் சிவகங்கை...!!

என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது, இந்த முறை 10 தாமரைகளாவது தமிழகத்தில் இருந்து மலர வேண்டும் என்று அமித்ஷா மறைமுக உத்தரவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜகவும் மும்முரத்தில் இறங்கி உள்ளது.

பூத் கமிட்டிகளை தமிழகம் முழுக்க நியமிக்கும்படி ஏற்கனவே பிரதமர் மோடி அட்வைஸ் தந்திருந்த நிலையில், அந்த வேலையும் கட்சிக்குள் நடந்து வருவதாக தெரிகிறது.

பிஎப்ஐ-க்கு நெருக்கடி: 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ.ரெய்டு.. இன்றும் 100-க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது! பிஎப்ஐ-க்கு நெருக்கடி: 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ.ரெய்டு.. இன்றும் 100-க்கும் மேற்பட்டோர் அதிரடி கைது!

 10 தாமரைகள்

10 தாமரைகள்

தமிழகத்தின் 10 தொகுதிகளில், சிவகங்கை தொகுதிக்கு பாஜக குறி வைத்து வருகிறது.. இந்த தொகுதியை பொறுத்தவரை எப்போதுமே அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜாதான் போட்டியிடுவார்.. ஆனால், ஒருமுறைகூட அவர் வெற்றிபெற்றது கிடையாது.. ஒவ்வொரு முறை தோற்றாலும் எச்.ராஜாவுக்குதான் சீட் தரப்படும்.. இந்த முறை, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே தீர்வது என்று கங்கணம் கட்டி கொண்டுள்ளதாம் பாஜக தலைமை.

 மாத்தி யோசி

மாத்தி யோசி

அதற்காகத்தான், அந்த தொகுதிக்கான பொறுப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலையையே நியமித்துள்ளது.. இந்த முறை வேட்பாளரை "மாற்றி யோசிப்பாரா அண்ணாமலை" என்ற ஏக்க கேள்வி தொகுதிக்குள் வட்டமடிக்க துவங்கி உள்ளது.. காரணம், திமுக விஸ்வரூப வளர்ச்சியை ஒருபக்கம் பெற்று வருவதுடன், வரும் தேர்தலில் காங்கிரசுடன்தான் நிச்சயம் கூட்டணி வைக்கக்கூடும்.. அப்படி கூட்டணி வைக்க நேர்ந்தால், மறுபடியும் இந்த தொகுதி, ப.சிதம்பரம் குடும்பத்துக்குதான் ஒதுக்க நேரிடும்.. எனவே, இந்த முறை திமுக கூட்டணியை வெல்ல வேண்டும் என்றால், வலுவான நபரை நிறுத்த வேண்டும் என்கிறார்களாம்.

 ஐடியா புதுசு

ஐடியா புதுசு

அதுமட்டுமல்ல, எப்படியும் அதிமுகவை பாஜக விட்டுவிடாது என்பதால், இந்த கூட்டணியே வரும் காலத்திலும் தொடரும் பட்சத்தில், தொகுதியை அதிமுகவுக்கு விட்டுத்தந்துவிடலாம் அல்லது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால் கட்டாயம் திமுகவை வென்று காட்டலாம் என்று யோசனை சொல்லி வருகிறார்களாம்.. இதை மேலிட பாஜக எப்படி அணுக போகிறது? என்ன முடிவு எடுக்க போகிறது என்று தெரியவில்லை.. கடந்த முறை தேர்தலின்போது, எச்.ராஜா தோற்றது, தொகுதிக்குள்ளேயே நிறைய அதிருப்திகளை பெற்று தந்ததாக கூறப்பட்டது.

காரைக்குடி

காரைக்குடி

அதாவது, கட்சி நிர்வாகிகள் சிலர் சரியாக தேர்தலில் வேலை செய்யவில்லை என்றும், கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்த பணத்தை முறையாக பட்டுவாடா செய்யாததால் தான் தன்னுடைய தோல்விக்கு காரணம் என்றும் எச்.ராஜா அன்று பேசியதாக கூறப்படுகிறது... மேலும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் கடுமையாக பேசியதாக செய்திகளும் வெளியானது.. இதனால் கோபமடைந்த பாஜக காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா, கண்ணங்குடி ஒன்றிய தலைவர் பிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த நிகழ்வும் அரங்கேறியது. இவை அனைத்துமே செய்திகளாகவும் அன்று வெளிவந்திருந்தன.

 தர்மசங்கடம்

தர்மசங்கடம்

இதுபோன்ற தர்மசங்கடங்கள் இனி ஏற்படக்கூடாது என்றால், திமுகவுக்கு டஃப் தரும் நபரை நிறுத்த வேண்டும் என்கிறார்களாம்.. ஆனால், எச்.ராஜாவை அவ்வளவு சீக்கிரம் தவிர்த்து விட முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. கட்சியின் மூத்த தலைவர் மட்டுமல்ல, கட்சிக்கு மிகப்பெரிய தூணாகவும், ஆணி வேராகவும் எச்.ராஜா திகழ்ந்து வருகிறார்.. திமுகவை எதிர்த்து கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் எச்.ராஜா போன்ற தலைவர்கள் நிச்சயம் தேவை என்றும் சொல்கிறார்கள்.. இப்படி இரு வேறு கருத்துக்கள் இணையத்தில் வட்டமடித்தாலும், மேலிடம் என்ன முடிவு செய்ய போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Who is the BJP candidate for Sivagangai constituency and what will DMK do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X