சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாட்டிக்கிட்ட "பெரிய தலை".. ஓபிஎஸ் பக்கம் வருகிறாராமே.. அடுத்து அவங்களா.. கச்சித பிளான்.. இது எப்போ?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அடுத்த ஆட்டத்தை துவக்கி உள்ளாராம்

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தன்னுடைய அடுத்தக்கட்ட அதிரடிக்கு தயாராகிவிட்டாராம்.. அந்தவகையில், சில தகவல்கள் வட்டமடித்து வருகின்றன.

Recommended Video

    OPS EPSஅ சேர்த்துக்கணுமா? வேண்டாமா? ADMK தொண்டன் குரல்!

    பொதுக்குழு தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும் இன்னொருவர் அப்பீலுக்கு நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று முன்னமேயே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

    அதேசமயம், இந்த முறை ஓபிஎஸ் பக்கமே சாதகமான தீர்ப்பு வரக்கூடும் என்றும், கடந்த வாரம் முழுவதும் ஒரு சலசலப்பு இருந்துக் கொண்டே இருந்தது.

    அடுத்தக்கட்ட நடவடிக்கை! சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தீவிர ஆலோசனை.. மாஜிக்கள் பங்கேற்பு!அடுத்தக்கட்ட நடவடிக்கை! சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தீவிர ஆலோசனை.. மாஜிக்கள் பங்கேற்பு!

     பாயிண்ட்கள்

    பாயிண்ட்கள்

    இதற்கு காரணம், நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்புக்கு நீதிபதி முன்வைத்த கேள்விகள்தான்.. தற்போது, ஓபிஎஸ் பக்கம் சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட ஜரூர் வேலையில் இறங்கிவிட்டார் ஓபிஎஸ்.. முதல் வேலையாக, எடப்பாடியின் சேலம் தொகுதிக்குள் ஆட்டத்தை துவங்க போகிறாராம்.. சேலம் 4 ரோடு பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவசர ஆலோசனை கூட்டத்தை இதற்காகவே நடத்தி முடித்துள்ளனர்... அப்போது பல்வேறு விஷயங்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது..

     எடப்பாடி சீட்

    எடப்பாடி சீட்

    இந்த கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான எடப்பாடி ராஜேந்திரன், கடந்த 5 வருடங்களாகவே நிர்வாகிகளை குத்தகைக்கு எடுப்பதுபோல் விலைக்கு வாங்கி பொதுக்குழுவை நடத்தி வந்தார் எடப்பாடி பழனிசாமி... பொதுக்குழு நடத்தி எப்போதும் பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவிற்கு தான் என்றும், அந்த பதவி யாருக்கும் வழங்கப்பட மாட்டாது என்றும் எடப்பாடி பழனிசாமி சொன்னார்.. ஆனால் அந்த விதியை மாற்றி தானே பொதுச் செயலாளராக வேண்டும் என்ற ஆசையில் நிர்வாகிகளை விலைக்கு வாங்கி பொதுக்குழுவை நடத்தினார். அவரது இந்த செயலை கோடிக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை" என்றார் ராஜேந்திரன்.

     புது குண்டு

    புது குண்டு

    அதுமட்டுமல்ல, விரைவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்திப்பார்கள் என்றும் ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.. 10 நாட்களுக்கு முன்பே இதே சேலம் மாவட்டத்தில் இருந்து, எடப்பாடி ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து, ஓபிஎஸ்ஸுக்கு நிறைய பச்சை சிக்னல்கள் வந்துள்ளதாகவும், தீர்ப்பு வந்ததும் அவர்கள் அனைவருமே விரைந்து ஓபிஎஸ் பக்கம் தாவக்கூடும் என்றும் சலசலக்கப்பட்டது.. அந்தவகையில், ஒரு மாஜி பெண் அமைச்சரும் ஓபிஎஸ் பக்கம் வர போகிறாராம்.. அவர் அதே மாங்கனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் க்ளூ கிடைத்துள்ளது.

     சக்ஸஸ்

    சக்ஸஸ்

    இவரை வைத்து, மேலும் சில முக்கிய புள்ளிகளை, அங்கிருந்து கொண்டுவரவும் முயற்சி நடப்பதாக கூறப்படுகின்றன.. கொங்குவை தன் கையில் வைத்துக் கொண்டுதானே எடப்பாடி, அதிமுகவுக்குள் செக் வைக்கிறார் என்பதாலேயே, இந்த கொங்குவிலேயே அதுவும் எடப்பாடி சொந்த தொகுதியிலேயே முதல் பிளானை சக்ஸஸாக முடித்துள்ளாராம் ஓபிஎஸ்.. எடப்பாடியின் நண்பர் இளங்கோவனுக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு அன்று கிளம்பியபோதே, தகுதி இல்லாதவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கியதாக எடப்பாடி பழனிச்சாமி மீது அதிமுக ஒன்றிய செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.

    இளங்கோவன்

    இளங்கோவன்

    அப்போதிருந்துதான், சேலத்துக்கு ஓபிஎஸ் குறியை வைத்ததாக கூறப்படுகிறது.. இளங்கோவனுக்கு சீட் தராதவரை, இந்த அளவுக்கு எடப்பாடிக்கு எதிர்ப்புகள் சொந்த மாவட்டத்தில் இல்லை என்கிறார்கள்.. பொதுவாக, ஓபிஎஸ் அரசியல் இந்த அளவுக்கு அதிரடிகளை கொண்டது இல்லை.. ஜெயலலிதா காலத்தில் இருந்தே சாஃப்ட் அரசியல்தான் ஓபிஎஸ் செய்து வந்தார்.. காரணம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக விளங்குவதே ஒரு சாதனையாக கருதப்பட்ட காலம் அது.

     ஸ்பீடு + நுட்பம்

    ஸ்பீடு + நுட்பம்

    ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஏகப்பட்ட அவமானங்களை ஓபிஎஸ், எடப்பாடி அவையில் நேரடியாகவே சந்தித்தார்.. இதில் எடப்பாடியை மட்டும் காரணம் சொல்ல முடியாது.. ஓபிஎஸ்ஸின் வழவழ கொழ கொழா பேச்சுக்கள், தெளிவில்லாத முடிவுகள், உறுதிப்பிடிப்பில்லாத அணுகுமுறைகள், போன்றவைகளையும் காரணமாக சொல்லலாம்.. அதனால்தான், எடப்பாடியின் ஸ்பீடுக்கும் நுணுக்கத்திற்கும் ஓபிஎஸ்ஸால் ஈடுகொடுத்து 5 வருடங்களாக ஓட முடியவில்லை.. அவமானங்களை சந்திக்கவும் இவையும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

    மெஜாரிட்டி

    மெஜாரிட்டி

    கடந்த ஜுன் 23ம் தேதி பொதுக்குழுவில் ஓபிஎஸ் நுழைந்தபோதுதான், மெஜாரிட்டி பொதுக் குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் இருந்தனர் என்பதை அறிந்து அதிர்ந்தும் போனார்.. இனியும் பொறுமையாக இருந்து பலனில்லை, இது விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் என்பதையே அவரது ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.. அதிலும் ஓபிஎஸ் தற்போது எடுத்து வரும் முக்கிய முடிவுகள், வைத்திலிங்கம் போன்ற சீனியர்கள் உடனிருந்து எடுத்து சொல்வதால், அதில் வெற்றிகள் கிடைத்து வருவதாக தஞ்சை மண்டல நிர்வாகிகள் சொல்கிறார்கள். எப்படிப்பார்த்தாலும், சேலத்தில் இருந்து ஓபிஎஸ் கணக்கு தொடங்குகிறதாம்.. பார்ப்போம்..!

    English summary
    Who is the former ADMK Minister who can join the OPS team and Strategy against Edappadi Palanisamy in Salem district எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் அடுத்த ஆட்டத்தை துவக்கி உள்ளாராம்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X