அமித்ஷாவுக்கே ஜெர்க்.. 2 மேட்டரை எடுத்த பாஜக.. மறுபடியும் வெடித்த டமார்.. டெல்லி விரைகிறார் ரங்கசாமி

புதுச்சேரியில் அடுத்த துணை நிலை ஆளுநர் யார் என்ற ஆர்வம் எகிறி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 விஷயங்கள் புதுச்சேரியில் புதிதாக தலைதூக்கி உள்ளது.. இந்த 2 விவகாரங்களிலுமே அமித்ஷா கறாராக இருக்கிறாராம்.. ஆனால், ரங்கசாமியோ அதற்கு மேல் கெத்தாக இருக்கிறாராம்.. அதனால் இன்னும் சில நாட்களில் டெல்லியே அதிர போகிறதாம்..!

சில தினங்களுக்கு முன்பு எல்.முருகன் தந்த பேட்டியில், புதுச்சேரியில் வீசும் அலை, தமிழகத்திலும் கூடிய சீக்கிரம் அடிக்கும் என்றார்..

ஆனால், அந்த அலை திருப்பி யூடர்ன் எடுத்து புதுச்சேரிக்குள்ளேயே வேறுவிதமாக அடித்து கொண்டிருக்கிறது.

மோதல்

மோதல்

பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ரங்கசாமி முதல்வராகி விட்டாலும், இன்னும் மாநில அரசின் விவகாரங்கள் தீர்ந்தபாடில்லை.. என்ஆர் காங்கிரசுக்கும் - பாஜகவுக்கும் தொடர்ந்து அமைச்சர் பதவி நியமனங்களில் லடாய் ஏற்பட்டு வருகிறது. இரண்டு தரப்பில் ஒருத்தரும் விட்டுக்கொடுக்கவில்லை.. அமைச்சரவையும் முழுமையாக தயாராகவில்லை.. மக்களையும் கவனிக்கவில்லை..

பிடிவாதம்

பிடிவாதம்

பதவிகளை கேட்டு பாஜக பிடிவாதம் பிடித்து கொண்டும், அதற்கு மறுத்து ரங்கசாமி முரண்டுபிடித்து கொண்டும் நாட்களை நகர்த்தி கொண்டிருக்கிறார்கள். கடந்த மாதம் அமித்ஷாவே போனை போட்டு ரங்கசாமியிடம் பேசியபிறகுதான், இந்த நிலைமை ஓரளவு சமாளிப்புக்கு வந்ததாக கூறப்பட்டது. ஆனால், சபாநாயகர் பதவி நியமனம்தான் நடந்ததே தவிர, இன்னபிற விஷயங்கள் இழுபறியில் உள்ளன.

 பாஜக

பாஜக

இப்போது 2 விஷயங்கள் தலைதூக்கி உள்ளது.. இதில் முதலாவது பிரச்சனை, யார் அங்கு அடுத்த ஆளுநர் என்பதுதான்.. சில தினங்களுக்கு முன்பு, அமைச்சர்கள் லிஸ்ட் தயார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமார், சாய் சரவணகுமார் இவர்கள் இருவருமே அமைச்சர் பதவியை கேட்டு அடம் பிடித்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. பாஜக ஒரு கணக்கு போட்டு கொண்டிருக்கும் நிலையில், ரங்கசாமி இதில் வேறு ஒரு கணக்கு போட்டு வருகிறார்.

 ரங்கசாமி

ரங்கசாமி

அதனால், யார் அடுத்த ஆளுநர் என்பதிலும் பிரச்சனை வெடித்துள்ளதாம்.. எனவே, கூடிய சீக்கிரம் பிரதமரையும், அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளாராம் முதல்வர் ரங்கசாமி... அப்போதுகூட, புதுச்சேரிக்கு துணை நிலை கவர்னராக யாரை நியமிப்பது என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷாதான், முதல்வர் ரங்கசாமிக்கு தெரியப்படுத்துவார் என்கிறார்கள்.

 டெல்லி

டெல்லி

இன்னொரு விஷயமும் கசிகிறது.. இந்த ஆண்டு கடைசியில், புதுச்சேரியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா பதவி காலியாக போகிறது.. அந்த சீட்டை பாஜகவுக்கு தரும்படி அமித்ஷா இப்போதே வலியுறுத்த ஆரம்பித்துவிட்டாராம்.. ஆனால், வழக்கம்போல், ரங்கசாமி இதுக்கும் முரண்டு பிடிக்கிறாராம்.. முடியாது, ராஜ்யசபா சீட்டை தரவே முடியாது என திட்டவட்டமாக அமித்ஷாவிடம் சொல்ல போகிறாராம்.. ரங்கசாமி சொல்வது இருக்கும்.. அமித்ஷா அதற்கு என்ன சொல்ல போகிறார் என்பதே ஃபைனல் முடிவாக இருக்கும் போலும்.. பார்ப்போம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+