புதுவையில் விஜய் கூட்டத்தில் துப்பாக்கியுடன் பிடிபட்ட நபர் யார்? வெளியான பரபர பின்னணி
சென்னை: புதுவையில் விஜய் பிரசார பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாரிடம் சிக்கிய அந்த நபர், சிவகங்கையை சேர்ந்தவர் என்பதும், மத்திய பாதுகாப்பு படை வீரராக 24 ஆண்டுகளாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்த பரபரப்பான தகவல்களை பார்க்கலாம்.
தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று புதுவையில் நடைபெற்றது. புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு காலை 6 மணி முதல் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரத்தொடங்கினர். பொது மக்களை கட்டுப்படுத்துவதற்காக உப்பளம் சாலையில் 5 இடங்களில் பேரி கார்டுகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்திருந்தனர்.

ஹெலிபேடு மைதான மெயின் கேட்டில் போலீசார் குவிக்கப்பட்டு பொதுகூட்டத்திற்கான கியூ ஆர் கோடுடன் கூடிய பாஸ் வைத்திருந்தவர்களை மட்டுமே அனுமதித்தனர். மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கான நுழைவு வாயில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது காலை 8 மணியளவில் அங்கு வந்த நபர் ஒருவர், மெட்டல் டிடெக்டரை கடந்து சென்ற போது எச்சரிக்கை ஒலி எழுந்தது.
உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரை சோதனையிட்ட போது, அவரது இடுப்பில் துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு இருந்த போலீசார், அவரை அழைத்து சென்று பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் எடுத்துவந்தீர்கள்? என கேள்வி எழுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பது தெரிய வந்தது. மேலும் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அந்த நபர், டேவிட் என்பதும் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் கண்டறியப்பட்டது.
இவர் த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவின் தனி பாதுகாவலராக இருப்பதும் தெரிய வந்தது. புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு பிரபுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.
24 ஆண்டுகளாக சிஆர்பிஎப்பில் இவர் பணியாற்றியதும் தெரியவந்துள்ளது. கடந்த வாரம்தான் டாக்டர் பிரபுவிடம் பணியில் சேர்ந்துள்ளார்.
-
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!











Click it and Unblock the Notifications