"தாமரை" கனவு தகர்கிறதா.. "அண்ணி" சொன்ன ஒரே சொல்.. மிரண்டு போன அதிமுக + பாமக + திமுக + பாஜக..!
திமுகவின் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்று பிரேமலதா சொல்கிறார்
சென்னை: திடீரென தங்களுக்கு எதிராக, இத்தனை கட்சிகள் வண்டியை கிளப்பிவிட்டுள்ளது, தமிழக பாஜகவுக்கே சற்று ஷாக்தான்.. அதிலும் தேமுதிக வேற லெவலில் நின்று யோசித்துள்ளது.. அதையும் பேட்டியாக வெளிப்படுத்தி உள்ளது..!
திமுகவுக்குள் நிறைய உட்கட்சி விவகாரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.. அதிமுகவுக்குள் யார் தலைவர் என்ற விவகாரம் ஓடிக் கொண்டிருக்கிறது.
பாமக கட்சியை பலப்படுத்தி கொண்டிருக்கிறது.. காங்கிரஸ் வழக்கம்போல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.. பாஜக தாமரையை மலர வைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அண்ணாமலை
இப்படி ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு விவகாரங்களும் ஓடிக் கொண்டிருந்தாலும், நாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதை விடாமல் சொல்கின்றன. இதை முதலில் ஆரம்பித்து வைத்ததே பாஜகவின் அண்ணாமலைதான்.. திமுகவுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்தால் பரபரப்பாக தமிழகத்தில் பேசப்படுவோம் என்பதுடன் ஆளுங்கட்சியை கேள்வி கேட்டால், அதன்மூலம் மக்களிடம் எளிதாக செல்லலாம் என்பதே அந்த கணக்கு.

எடப்பாடி பழனிசாமி
அதனால், அதிமுகவை முந்திக் கொண்டு, சில சமயம், அதிமுகவை டேமேஜ் செய்துவிட்டு, நாங்கள்தான் எதிர்க்கட்சி என்பதை சொல்லி கொண்டிருக்கிறது.. பொறுத்து பொறுத்து பார்த்த அதிமுகவோ, அவ்வப்போது இரண்டாம் கட்டதலைவர்களை வைத்து, பாஜகவின் தலையில் ஒரு கொட்டு கொட்டி, நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.. ஓபிஎஸ் இது பற்றி விரிவாக ஒரு அறிக்கையே வெளியிட்டார்.. எடப்பாடியோ, செய்தியாளர்கள் கூட்டத்திலேயே இதை ஓபனாக போட்டு உடைத்தார்.
Recommended Video

அதிருப்தி ஓட்டுக்கள்
ஆனாலும் பாஜக, திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்பதில் உறுதியாக உள்ளது.. இந்த சூழலில்தான், பாமக என்ட்ரி தந்தது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு, லேசான விரிசல் பாஜக - அதிமுக கூட்டணிக்குள் எழுந்த நிலையில்தான், பாஜக இல்லாத கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசிந்தன.. பாஜக இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி, அதன் மூலம் பாஜகவின் அதிருப்தி ஓட்டுகள், மற்றும் திமுகவின் அதிருப்தி ஓட்டுகள் இரண்டையுமே தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பதே அன்புமணியின் நம்பிக்கையாக உள்ளதாக தெரிகிறது.

கூச்சமாக இருக்கிறது
எனினும் 2 நாட்களுக்கு முன்பு அன்புமணி ஒரு பேட்டி தந்தார்.. அதில், "சட்டப்பேரவையில் அதிமுக எண்ணிக்கை அடிப்படையில்தான் எதிர்க்கட்சியாக உள்ளது...ஆனால், மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசியும் அதை நிறைவேற்றவும் வைப்பது எதிர்கட்சியின் வெற்றியாக உள்ளது... அந்த வகையில் நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி... இதை திரும்ப திரும்ப சொல்வதில், எங்களுக்கே கூச்சமாக உள்ளது" என்றார். இந்த பேட்டி மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை தந்தது.

பாமக
இப்போது விஷயம் என்னவென்றால், வாக்குவங்கியிலும் சரிந்துவிட்டு, சமீபகாலமாக எந்த தேர்தலிலும் வெற்றியும் பெறாத நிலையில், திடீரென தேமுதிக என்ட்ரி தந்துள்ளது.. அக்கட்சியின் பொருளாளார் பிரேமலதா ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், 'தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததாலேயே அதிமுக ஆட்சியை இழந்தது.. உண்மையான எதிர்க்கட்சி தேமுதிகதான்.. விஜயபிரபாகரனுக்கு கட்சி பொறுப்பை வழங்குவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார் என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த்
பிரேமலதாவின் இந்த பேட்டியை பார்த்துவிட்டு நெட்டிசன்களே பதிலடி தர ஆரம்பித்துவிட்டனர்.. எல்லாரும் எதிர்க்கட்சிதான் என்றால் எங்களுக்கு யார்தான் உண்மையான எதிர்க்கட்சி? அக்கா, லைன்ல வந்து நில்லுங்க.. சரி, சரி, சண்டை போடாம யார் எதிர்க்கட்சின்னு முடிவு பண்ணுங்க என்று கலாய்த்து வருகின்றனர்.. மேலும் சிலரோ, இந்த ஒரு வருடத்தில் மக்கள் நலனுக்காக எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தீர்கள்? என்று பிரேமலதாவிடம் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

பாமக - தேமுதிக
பிரேமலதா ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை.. அவரது தன்னம்பிக்கை பாராட்டுக்குரியதுதான் என்றாலும், சோர்வடைந்து போன தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி சொன்னாரா? அப்படியே பிரேமலதா சொன்னாலும் அதை தொண்டர்கள் உண்மைத்தன்மை தெரியாமல் என்று நம்பிவிடுவார்களா? என்று தெரியவில்லை.. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது. கடந்த முறை, தேமுதிகவுடன் சீட் தருவதற்கு அதிமுகவுக்கு சுத்தமாக விருப்பமில்லை.. பிரேமலதாவே வாய்விட்டு எங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட போறீங்களா? இல்லையா? என்று வெளிப்படையாகவே கேட்டார்.

அமமுக
பிறகு வேறு வழியின்றி, சீட் கொடுக்க முன்வந்தால், தேமுதிக காட்டிய கறார்தன்மையை பார்த்து, அதிமுக மேலிடம் கூட்டணி கதவை படாரென சாத்திவிட்டது. அதற்கு பிறகுதான், அமமுக வந்து தேமுதிகவுக்கு கை கொடுத்தது.. இதையெல்லாம் மறந்துவிட்டு, மறைத்தும்விட்டு, எங்களை சேர்த்து கொள்ளாததால்தான், அதிமுக தோற்றது என்று பிரேமலதா சொல்வது வேடிக்கையாக உள்ளதாக கூறுகிறார்கள். அப்படியானால், அமமுக - தேமுதிக கூட்டணிதானே கடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று, இந்நேரம் கோட்டையை பிடித்திருக்க வேண்டும் என்ற சந்தேகமும் வருகிறது.

ஓவர் கான்பிடன்ஸ்
இதில ஒரு ஹைலைட் என்னவென்றால், பாமகவும் சரி, பாஜகவும் சரி, தேமுதிகவும் சரி, அதிமுக தோளின் மீதேறிதான் சவாரி செய்ய வேண்டும்.. திமுகவைவிட ஓட்டு வங்கி அதிகம் உள்ள கட்சி அதிமுகதான் என்பது தெரிந்துதான், அக்கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைமையில் உள்ளன.. இதில் ஒரு கட்சிகூட தனித்து போட்டியிடும் அளவுக்கு துணிச்சல் முடிவை எடுக்கவில்லை.. அதிமுகவிலேயே இருந்துகொண்டு, அதிமுக தயவிலேயே போட்டியிட்டு, அதிமுகவையே டார்கெட் செய்து நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சொல்லி வருகின்றன.. பிரேமலதா சொன்னது தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகவே இருந்தாலும், "ஓவர்கான்பிடன்ஸ்" உடம்புக்கு ஆகாதுதானே..!












Click it and Unblock the Notifications