Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேக்ஸ்வெல்லை மணக்கும் தமிழ் பெண்.. யார் இந்த வினி ராமன்? காதலில் விழுந்தது எப்படி? ஸ்வீட் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இந்திய பெண்மணி வினி ராமன் குறித்து பலர் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர். யார் இவர்? எப்படி கிளென் மேக்ஸ்வெல்லுடன் இவர் காதலில் விழுந்தார் என்று பலரும் இணையத்தில் தேட தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    Glenn Maxwell To Marry Indian Fiancee, Tamil Invitation Card Goes Viral | Oneindia Tamil

    இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினி ராமனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். கடந்த 2020ம் வருடம் பிப்ரவரி 21ம் தேதி இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

    அதன்பின் கடந்த வருடம் இவர்கள் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது, ஆனால் கொரோனா காரணமாக இவர்கள் திருமணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் மார்ச் 27ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையில் இந்த திருமணம் நடக்க உள்ளது.

    கிளென் மேக்ஸ்வெல்

    கிளென் மேக்ஸ்வெல்

    இவர்கள் இருவரும் இப்போது அல்ல கடந்த 2013லேயே சந்தித்துவிட்டனர். ஆம் அப்போதில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். முதலில் வினி ராமனை கிளென் மேக்ஸ்வெல்தான் சந்தித்து பேசி இருக்கிறார். அடிக்கடி சந்தித்த இவர்கள் நண்பர்களாக பழகி இருக்கின்றனர். இந்த நிலையில் வினி மீதான தனது விருப்பத்தை கிளென் மேக்ஸ்வெல் 2017ல் தெரிவித்துள்ளார்.

    டேட்டிங்

    டேட்டிங்

    2017ல் இருந்து இவர்கள் இருவரும் இதையடுத்து டேட்டிங் சென்றுள்ளனர். அதன்பின் அதே வருடம் கிளென் மேக்ஸ்வெல் வினியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு பின் வினி கிளென் மேக்ஸ்வெல் காதலை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. நிச்சயம் முடிந்த பின் இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. பல நாடுகளுக்கு இவர்கள் ஒன்றாக பயணம் செய்தனர்.

    கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ஐபிஎல் தொடருக்காக இந்தியா வந்த போதும், மற்ற தொடர்களின் போதும் கிளென் மேக்ஸ்வெல் வினியை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார். தமிழ் பின்னணியை கொண்ட வினி ராமன் தமிழ்நாட்டில் பிறந்தவர் கிடையாது. இவர் பிறக்கும் முன்பே வினியின் பெற்றோர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டனர். ஆனாலும் தமிழ் பாரம்பரியத்தை இவர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அதனால்தான் திருமண பத்திரிக்கையை தமிழ் பாணியில் மஞ்சள் நிறத்தில் அடித்துள்ளனர்.

    மெல்போர்ன்

    மெல்போர்ன்

    மெல்போர்னில் பிறந்து வளர்ந்து Pharmacy படித்தவர் வினி ராமன். இவர் மேக்ஸ்வெல் உடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் மேக்ஸ்வெல் மன அழுத்தம் காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். அந்த காலத்தில் மேக்ஸ்வெல்லுக்கு வினி ராமன் மிகவும் நெருக்கமாக இருந்து உதவி செய்ததாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண பத்திரிக்கை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+