• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரஜினியின் "ரைட் ஹேன்ட்" அர்ஜூன் மூர்த்தி யார்னு தெரியுமா.. அவரது தொடர்புகள் என்னன்னு தெரியுமா?

|

சென்னை: ரஜினி கட்சி தொடங்கியதை விட ஆச்சரியம், அவர் தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளாரே.. அவர் யார் என்பதில்தான்!

ஒரு வருடத்துக்கு முன்பு, ரஜினி ஒரு டிவி ஆரம்பிக்க போகிறார் என்று திடீரென ஒரு தகவல் கசிந்தது.. இதற்காக ரஜினி லெட்டர்பேடு ஒன்றும் வட்டமடித்தது.

இது உண்மையா? இல்லையா என்று உறுதியாக தெரிவதற்கு முன்பேயே அந்த டிவியில் இவர்தான் எடிட்டர் என்று ஒரு பிரபலத்தை முன்னிறுத்தி செய்திகளும் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன.. இறுதியில், ரஜினி டிவியே ஆரம்பிக்கவில்லை என்றாலும், ரஜினி பற்றிய செய்தி என்றால், ஒருகுறிப்பிட்ட நபர்களை முன்னிறுத்தியே அனைத்தும் பார்க்கப்படுகிறது.. சந்தேகிக்கிக்கப்படுகிறது.

கொட்டும் மழையில் டமால் டுமீல்.. ஸ்வீட் சாப்பிட்டு ... திருச்சியை தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்!

 ரஜினி கட்சி

ரஜினி கட்சி

அப்படித்தான் ரஜினி அரசியலும் பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் எந்த நபரையுமே நாம் யோசிக்கவில்லை.. காரணம், ரஜினி கட்சியே ஆரம்பிக்க போகிறாரா இல்லையா என்ற நிச்சயமற்ற நிலை இருந்தது. நேற்றுதான் திடுதிப்பென்று ட்வீட் போடவும், அடுத்தடுத்த நிகழ்வுகள் உடனுக்குடன் அரங்கேறின.. ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

 யார் இவர்?

யார் இவர்?

அர்ஜுன் சம்பத், முதல் தமிழருவி மணியன் வரை எத்தனையோ அபிமானிகள் ரஜினியை சுற்றி வந்த நிலையில், இந்த பெயர் நேற்றுதான் பலரும் அறிந்தனர்.. முதல்நாளிலேயே யார் இவர்? ரஜினியுடன் இவ்வளவு நெருக்கமாக பதவியை தரும் அளவுக்கு இருப்பவர் என்ற ஆச்சரியத்தை கிளப்பினார்.

 தமிழருவி மணியன்

தமிழருவி மணியன்

இவர் பாஜகவை சேர்ந்தவர், பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர் என்பதையும் தாண்டி இவரது பின்னணி என்ன? எதற்காக ரஜினி இவரை தேர்ந்தெடுத்துள்ளார் என்ற முக்கியமான கேள்விதான் எழுகிறது. கொங்கு மண்டத்தை சேர்ந்தவர் இவர்.. அர்ஜுன்மூர்த்திக்கும் திமுகவுக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உள்ளது.. இவரது மகளை ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் மாமா மகனுக்கு தான் கல்யாணம் செய்து கொடுத்திருந்தனர்.. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு டைவர்ஸ் ஆகிவிட்டது.

 வேல் யாத்திரை

வேல் யாத்திரை

இப்போதைக்கு ரஜினியின் ட்விட்டர் பக்கம் உட்பட அவரது அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுன்மூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது. பாஜக தொடங்கிய வேல் யாத்திரையில் இவரது பங்கு அளப்பரியது.. அர்ஜுன்மூர்த்திதான் முக்கிய காரணியாக விளங்கினார்.. பாஜகவின் தமிழக பொறுப்பாளர் கர்நாடாகாவை சேர்ந்த சிடி ரவிக்கு அர்ஜுன்மூர்த்தி நெருங்கிய நட்பு கொண்டவர்.

 பாஜக

பாஜக

இது எல்லாவற்றிற்கும் மேலாக மறைந்த முரசொலி மாறனின், அரசியல் ஆலோசகராக இவர் இருந்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதை அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்த் அவர்களால் துவங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி, எனது தந்தை மறைந்த திரு முரசொலி மாறன் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என கூறப்படுவது தவறானது என்று தெளிவுபடுத்தியுள்ளார் தயாநிதி மாறன். அதேசமயம், அர்ஜூன் மூர்த்தியின் மனைவி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளிதோழியாம்.. தமிழக பாஜக தலைமையுடன் நெருக்கமாக இருந்தவர்.. பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறாராம்.

 சம்பிரதாயம்

சம்பிரதாயம்

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாலும், இது ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்படுகிறது.. காரணம், பாஜகவில் இப்போதுவரை நல்ல நட்புடன்தான் அர்ஜுன்மூர்த்தி திகழ்கிறார்.. மேலும் திமுகவின் நுணுக்கங்களையும் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்து வைத்துள்ளவர் என்பதால், திமுக, பாஜக என்ற கட்சிகளின் பிளஸ், மைனஸ்கள் அத்தனையும் அர்ஜுன் மூர்த்திக்கு அத்துப்படி.. இது நிச்சயம் ரஜினியின் புது கட்சிக்கு உத்வேகமாகவும், தெம்பாகவும் இருக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 
 
 
English summary
Who is this Arjunamurthy the Chief Coordinator of the Rajinis party
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X