"அதை" பார்த்தீங்களா.. பாஜகவின் "சமிக்ஞை" புரிஞ்சுதா.. கோட்டை விடறாரா எடப்பாடி.. வெலவெலக்கும் லீடர்கள்
இரட்டை இலை யாருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற அனுமானங்கள் கிளம்பி உள்ளன
சென்னை: இரட்டை இலை யாருக்கு கிடைக்க போகிறது? யாருக்கோ ஒருவருக்குதான் சாதகமாக தீர்ப்பு வரும்பட்சத்தில், அதை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் எப்படி கையாள போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும், கவலை நிறைந்த அக்கறையும் ரத்தத்தின் ரத்தங்களிடம் கவ்வி வருகிறது.
மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் அதிமுகவில் ஒற்றை தலைமையாக உருவாக்க, சமீப காலமாகவே, எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்
சில தினங்களுக்கு முன்பு மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார். அதிமுக விவகாரம் குறித்து அவரிடம் கேட்டதற்கு, தன்னுடைய பாணியிலேயே ஒரு பதிலை நமக்கு சொல்லி இருந்தார்..

"மெகா கூட்டணி"
"அதிமுக இப்போது 4 ஆக பிரிந்து விட்டது.. 4 கட்சியாகிவிட்டது.. அந்த 4 கட்சியையும் இணைத்து கொள்வதுதான் "மெகா கூட்டணி" என்று பெயர்.. பழனிசாமியுடன் கூட்டணி, பன்னீர்செல்வத்துடன் கூட்டணி, சசிகலாவுடன் கூட்டணி, தினகரனுடன் கூட்டணி என 4 கட்சிகளுடனும் பாஜக கூட்டணி வைக்கும்.. இவர்கள் அனைவருக்கும் பொதுவான சின்னமாக இரட்டை இலை கொடுக்கப்படும் என்று பாஜக அறிவிக்கும். போகிற போக்கை பார்த்தால் அப்படி நடக்கும் போல..

சிவப்பு கட்சி
ஏனென்றால், தினகரன், சசிகலா, ஓபிஎஸ்ஸைதான், எடப்பாடி சேர்த்து கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டாரே... அதனால், இவர்கள் எல்லாம் ஒவ்வொரு கட்சியாக நின்று, பாஜகவுடன் கூட்டணி வைத்தால், இதற்கு எடப்பாடியால் மறுப்பும் எதிர்ப்பும் சொல்ல முடியாது.. எப்படி கம்யூனிஸ்ட்கள் இடது, வலது என்று இருக்கிறார்களோ, அதுமாதிரி, எடப்பாடி அதிமுக பன்னீர்செல்வம் அதிமுக, சசிகலா அதிமுக, தினகரன் அதிமுக இப்படி பிரிந்து 4 கட்சியாக இணைத்து, பொதுச்சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவித்து, அதற்கு பிறகுதான் இரட்டை இலையை தருவாங்க போல' என்று கிண்டலாக கூறியிருந்தார்.

இலை + தலை
அதற்கேற்றவாறு இதுவரை அதிமுக விவகாரமும் முடிவுக்கு வரவில்லை.. இரட்டை இலை விவகாரமும் முடிவுக்கு வரவில்லை.. கடந்த வாரம் மூத்த பத்திரிகையாளர் மணி, நமக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், பாஜக + அதிமுக கூட்டணி குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.. "பாஜகவின் பிளான் இதுதான்.. எடப்பாடியின் அரசியல் பாஜகவுக்கு பிடிக்கவில்லை.. அவர்கள் ஒன்றுபட்ட அதிமுகவையே விரும்புகிறார்கள். அதிமுக பெயரை டேமேஜ் செய்து கொண்டே, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும்.. மோடிதான் அதிமுகவின் ஒரே தலைவராக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது..

தங்கமணி தங்கமணி
அதனால்தான், எடப்பாடியை தாங்கி நிற்கக்கூடிய 4, 5 அமைச்சர்களை பாஜக டார்கெட் செய்கிறது.. அதில் ஒருவர்தான் விஜயபாஸ்கர்.. அடுத்து வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம், முனுசாமி இனிமேல் லிஸ்ட்டில் வருவார்கள்.. இரட்டை இலக்கத்துக்கு மேல், சீட் ஒதுக்க வேண்டும், குறைந்த 15 சீட்டுகளையாவது பாஜக எதிர்பார்க்கும்.. இல்லாவிட்டால், இரட்டை இலையை முடக்கக்கூடும்" என்று தன் அனுமானங்களை கூறியிருந்தார் அந்த அளவுக்கு இரட்டை இலை என்பது அதிமுகவில் முக்கியமான "அடையாளமாக" இருக்கிறது.

முடங்கிடுதா
ஒருவேளை, இரட்டை இலை கிடைக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி எத்தகைய அரசியலை முன்னெடுத்து செல்வார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பிறது.. இலை இல்லாவிட்டால் அதை எடப்பாடி துணிவுடன் ஏற்றுக்கொண்டாலும், அவருடன் இருக்கும் மற்ற தலைவர்கள் இலை இல்லாத அதிமுகவை ஏற்பார்களா?என்றும் சந்தேகமாக உள்ளது. இப்படிப்பட்டு சூழலில்தான், ஓபிஎஸ் தன் தரப்பு கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ஓபிஎஸ் திடீரென, "கூட்டணியை முடிவு செய்வேன், எடப்பாடிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கட்டும், இரட்டை இலை சின்னம் முடங்காது,. மாறாக எனக்குதான் சின்னம் கிடைக்கும்" என்று பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார்.

சமிக்ஞைகள்
ஓபிஎஸ் இந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் என்றால், இரட்டை இலை யாருக்கு என்பதை பாஜக மேலிடம் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. எந்த ஒரு சின்ன முடிவு என்றாலும், மேலிடத்தை கேட்டே முடிவுகளை எடுக்கக்கூடியவர் ஓபிஎஸ் என்கிறார்கள்.. அந்தவகையில், தற்போது திடுதிப்பென்று ஒரு கூட்டத்தை கூட்டி, இலை தனக்குதான் என்று ஆணித்தரமாக சொல்லியது, அநேகமாக பாஜகவின் யோசனையாககூட இருக்கலாம் என்றும், இதுவும் எடப்பாடி பழனிசாமியை பணிய வைப்பதற்கான மறைமுக அழுத்த சிக்னலாக இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி இதற்கும் இணங்காத பட்சத்தில், இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கான பணியை பாஜக மெல்ல கையில் எடுக்கலாம் என்கிறார்கள்..

வெட்ட வெட்ட
ஒருவேளை, சின்னம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தால், அது நிச்சயம் அவருக்கு சறுக்கலையே தரும் என்றும் ஆனால், இரட்டை இலை இல்லாமல், அதிமுகவின் கட்சி அடையாளம் இல்லாமல் அவரால் தேர்தலை எதிர்கொள்ள நிச்சயம் தைரியம் வராது என்கிறார்கள்.. இலையை யாருக்கு வேண்டுமானாலும் தரக்கூடிய பவர், பாஜகவுக்கு இருக்கவே செய்கிறது.. இல்லாவிட்டால் இலையை முடக்கக்கூடிய வலிமையும் பாஜகவுக்கு இருக்கிறது.. ஒருவேளை, அந்த இலை கிட்டத்தட்ட ஓபிஎஸ் பக்கம் போவதாக இருந்தால், எடப்பாடியின் எதிர்கால அரசியல் சவாலாகவே இருக்கும்.

ரத்தத்தின் ரத்தங்கள்
கடந்த 1989-லும், 2017-லும் இரட்டை இலை முடங்கியது.. ஆனாலும் அந்தந்த நேரத்தில் நடந்த தேர்தல்களில் அவ்வளவாக பாதிப்புகள் ஏற்படுத்தவில்லை.. இப்போது அப்படி இல்லை.. இலை யாருக்கோ அவர்களே "தலை" என்று கணிக்கும் நிலைமை வந்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பாக உருவாகி உள்ளது.. இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன செய்ய போகிறது? இருவேறு முடிவுகள் வந்தால் அதை எடப்பாடி + ஓபிஎஸ் இருவரும் எப்படி கையாள போகிறார்கள்? இவர்கள் இருவரையும் பாஜக எப்படி கையாள போகிறது? தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications