ஓபிஎஸ் இடத்தில் உதயகுமார்.. ஈபிஎஸ் பிளானை கேட்ச் செய்து முன்கூட்டியே அட்டாக்கை ஆரம்பித்த எதிரணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறித்து ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆர்.பி.உதயகுமார் - ஓபிஎஸ் தரப்பினர் இடையே கடந்த சில நாட்களாக மோதல் உச்சம் தொட்ட நிலையில் ஓபிஎஸ் இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார் உதயகுமார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமி அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்தே நீக்கியுள்ளார்.

ஓபிஎஸ் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமாருக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் எடப்பாடி

பொதுச் செயலாளர் எடப்பாடி

அதிமுகவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவி வரும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில் ஜூலை 11ஆம் தேதி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார் ஈபிஎஸ். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி, ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் வகித்து வந்த துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன.

பதவிக்கு வேட்டு

பதவிக்கு வேட்டு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. தனக்கு நெருக்கமான பலருக்கும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ள நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் வகித்து வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பறிப்பதற்கும் ஈபிஎஸ் திட்டமிட்டார்.

இறுதி முடிவு எடுப்பது அப்பாவு

இறுதி முடிவு எடுப்பது அப்பாவு

ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ள நிலையில் சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அதில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றக்கூடாது. பொதுக்குழு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ஈபிஎஸ் தரப்பு கடிதம் அனுப்பினால் அதை நிராகரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த பிரச்சனையில், ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்

எம்.எல்.ஏக்கள் கூட்டம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிறன்று மாலையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக மட்டுமல்லாது, ஓ.பன்னீர்செல்வம் வகிக்கும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிப்பது, அப்பதவிக்கு யாரை கொண்டுவருவது என்பது குறித்தும் விவாதித்துள்ளனர்.

தென் மாவட்டத்தில்

தென் மாவட்டத்தில்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக வரவிருப்பதாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு பேச்சு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கும் நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தென் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு கொடுப்பார் என்றும் கூறப்ப்பட்டது.

முக்குலத்தோர்

முக்குலத்தோர்

ஓ.பன்னீர்செல்வம் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்கிற நிலையில், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவி அதே சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. அதேபோல ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியும் அவர் சார்ந்த சமூகத்தவருக்கே வழங்கப்படும் என்றும் பேச்சு எழுந்தது.

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

அந்த வகையில் பார்த்தால், நத்தம் விஸ்வநாதனுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி, திண்டுக்கல் சீனிவாசனுக்கு பொருளாளர் பதவி, செல்லூர் ராஜூவுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கட்சியில் புதிதாக முக்கிய பதவி வழங்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் வாய்ப்பு தென்மாவட்டம் என்ற அடிப்படையிலும் முக்குலத்தோர் சமூகம் என்ற அடிப்படையிலும் அவருக்கு வழங்கப்படலாம் என்று தகவல் கசிந்தது.

ஈபிஎஸ் கணக்கு

ஈபிஎஸ் கணக்கு

முன்பு ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த உதயகுமார், இப்போது தீவிரமாக எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்று வருகிறார். பொதுக்குழு மேடையிலேயே ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்தார். கடந்த சில நாட்களாக ஆர்.பி.உதயகுமார் தன்னை குறிவைக்கும் ஓபிஎஸ் தரப்பினருக்கு தனியாளாக நின்று பதிலடி கொடுத்து வருகிறார். எடப்பாடி ஆதரவு நிலைப்பாடு காரணமாக, அவர் சார்ந்த சாதி சங்கங்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளார். இதனைச் சரிக்கட்ட அந்தப் பதவியைப் பெற ஆர்.பி.உதயகுமார் முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்

அந்தக் கணிப்புகளை உண்மையாக்கும் வகையில், ஆர்.பி.உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சபாநாயகரிடம் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனினும், சபாநாயகரிடம் ஓபிஎஸ் ஏற்கனவே மனு அளித்துள்ளதால் சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிரடி அட்டாக்

அதிரடி அட்டாக்

கடந்த சில நாட்களாகவே, ஓபிஎஸ் தரப்பினர் உதயகுமாரை கடுமையாக விமர்சித்து வந்தனர். உதயகுமாரை விமர்சித்து தென் மாவட்டங்களில் போஸ்டர்கள் பரபரத்தன. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவை செல்வராஜ் போன்றோர் உதயகுமாரை கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்தனர். ஓபிஎஸ் இடத்தில் உதயகுமாரை அமர வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தது தெரிந்தே ஓபிஎஸ் தரப்பினர் தங்கள் அட்டாக்கை ஆர்.பி.உதயகுமார் நோக்கி திருப்பினர் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+