Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின் உறுதி.. யாருக்கெல்லாம் நகைக் கடன் தள்ளுபடி? பயனாளிகளை தேர்வு செய்யும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் வாங்கியுள்ள நபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து இது குறித்த பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை பெறப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது.

திமுக ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அமைச்சர் பெரியசாமி

அமைச்சர் பெரியசாமி

இதுகுறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று கடன் பெற்றவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, இந்த கடன் வாங்கியதில் பல முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், அது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த விஷயங்கள் தெளிவான பிறகு கண்டிப்பாக 5 பவுன் அளவுக்கு குறைவாக நகை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

நிதி நிலை பற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நிதி நிலை பற்றி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ளார். அதே நேரம் தமிழகத்தில் தற்போது நிதி நிலைமை சரியில்லை என்பதை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை புடம்போட்டு காட்டிவிட்டது.

அரசுக்கு எதிரே சவால்கள்

அரசுக்கு எதிரே சவால்கள்

ஒருபக்கம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், அதேநேரம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும் என்ற இரு சவால்கள் தமிழக அரசின் எதிரே எழுந்து நிற்கின்றன. இந்த நிலையில்தான் அதிக நிபந்தனைகளை விதித்து அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நகை கடனை தள்ளுபடி செய்யலாம் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுவோருக்கு உதவி சென்று சேரும், அதேபோல ஏமாற்ற நினைப்பவர்கள் முயற்சி பலிக்காது என்று அரசு நினைக்கிறது.

அரசு ஊழியர்கள் பிஸி

அரசு ஊழியர்கள் பிஸி

அரசு கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை அடமானம் வைத்தவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று கூட்டுறவு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் தள்ளுபடியால், ஏற்கனவே பலனடைந்து உள்ளார்களா, அல்லது அரசு ஊழியர் கூட்டுறவு சங்க ஊழியராக இருக்கிறாரா, அரசு மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களின் உறவினராக இருக்கிறாரா அல்லது அவர்களது குடும்பத்தில் வேறு நபர்கள் கடன் பெற்று உள்ளார்களா, எவ்வளவு கடன் பெற்றுள்ளார்கள் என்பது பற்றிய பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்ட பிறகு பயனாளிகளுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறதாம். குறிப்பாக, அரசு ஊழியர்களாக இருக்கக்கூடாது, கூட்டுறவு சங்க பணியாளர்களாக இருக்க கூடாது, இரு சக்கர வாகனம் அல்லது கார் வைத்திருப்பவர்களாக இருக்கக்கூடாது, இதுபோன்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்களுக்குதான் கடன் தள்ளுபடி என நிபந்தனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

நகைக் கடன் தள்ளுபடி

நகைக் கடன் தள்ளுபடி

ஏற்கனவே, நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், கூட்டுறவு வங்கிகள் நிதி நெருக்கடியில் இருக்கின்றன. நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் அரசு அறிவிப்பை தொடர்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வட்டி கூட கட்டாமல் காத்து இருக்கிறார்கள். எனவே, இது கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக உரிய நிபந்தனைகளை பிறப்பித்து விரைவில் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூட்டுறவு சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+